அடிமாட்டு விலையில் கார்களை விற்கனும்னு அவசியமில்ல! டொயோட்டா இன்னோவாக்கு கஸ்டமர்ஸ் எங்கிருந்து வராங்கனே தெரியல!

டொயோட்டா (Toyota), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக டொயோட்டா கார்கள் விற்பனை பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு டொயோட்டா இன்னோவா கார்களின் விற்பனை அதிகரிப்பது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில் நடந்து முடிந்த அக்டோபர் மாதத்தில் டொயோட்டா விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி உடன் இணைந்து செயல்பட்டு வருவதன் காரணமாகவே சமீப காலங்களில் டொயோட்டா கார்களை நிறைய பேர் வாங்க ஆரம்பித்துள்ளனர். இது கடந்த அக்டோபர் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 28 ஆயிரத்து 138 டொயோட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெறும் 20 ஆயிரத்து 542 கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்திருந்தது.

toyota cars wise sales report

இந்த வகையில் பார்க்கும்போது, டொயோட்டா கார்கள் விற்பனை ஆனது 37%, அதாவது 7 ஆயிரத்து 596 யூனிட்கள் அதிகரித்துள்ளது. வழக்கம்போல், கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா காராக இன்னோவா முதலிடத்தை பிடித்துள்ளது. இன்னோவா கிரிஸ்ட்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் என 2 விதமான இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவை இரண்டும் கடந்த மாதத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 7 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெறும் 8 ஆயிரத்து 183 இன்னோவா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, இன்னோவா கார்களின் விற்பனை எண்ணிக்கை கடந்த மாதத்தில் 35% அதிகரித்துள்ளது.

toyota cars wise sales report

அதாவது, கடந்த ஆண்டு அக்டோபரை காட்டிலும் இந்த ஆண்டு அக்டோபரில் 2 ஆயிரத்து 824 இன்னோவா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்னோவாவிற்கு அடுத்து அதிகம் விற்கப்பட்ட டொயோட்டா காராக 2வது இடத்தில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் உள்ளது. கடந்த மாதத்தில் 5 ஆயிரத்து 449 ஹைரைடர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2023 அக்டோபரில் ஹைரைடர் கார்களும் 3 ஆயிரத்து 987 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆயிரத்து 462 ஹைரைடர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து கிளான்ஸா 4,273 கார்களின் விற்பனை உடன் உள்ளது.

toyota cars wise sales report

மேற்கூறப்பட்ட இன்னோவா மற்றும் ஹைரைடர் கார்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், 3வது இடத்தில் உள்ள க்ளான்ஸா காரின் விற்பனை எண்ணிக்கை 10% குறைந்துள்ளது. ஏனெனில், 2023 அக்டோபரில் 4 ஆயிரத்து 724 கிளான்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் 4வது மற்றும் 5வது இடங்களில் ஃபார்ச்சூனர் மற்றும் டைசர் கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 3,684 மற்றும் 3,092 ஆகும்.

இதில் ஃபார்ச்சூனர் காரின் விற்பனை எண்ணிக்கை 2023 அக்டோபரை காட்டிலும் 49% அதிகரித்துள்ளது. இவற்றிற்கு அடுத்து 6வது இடத்தில் டொயோட்டாவின் பிக்-அப் டிரக் வாகனமான ஹைலக்ஸ் 342 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. இவை மட்டுமின்றி கடந்த அக்டோபர் மாதத்தில் 176 காம்ரி கார்கள் மற்றும் 115 வெல்ஃபையர் கார்களையும் இந்தியாவில் டொயோட்டா விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டாவின் இன்னோவா மற்றும் ஹைரைடர் கார்களுக்கு கடந்த சில மாதங்களாக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல், விலைமிக்க டொயோட்டா காரான பிரபலமான ஃபார்ச்சூனர் கார்களின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், டொயோட்டா கடந்த ஆண்டில் அறிமுகம் செய்த ரூமியன் கார் கடந்த மாதத்தில் 1 யூனிட் கூட விற்பனையாகாதது டொயோட்டாவுக்கு சற்று ஏமாற்றமாக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 12, 2024, 22:46 [IST]
English summary
Toyota cars wise sales report october 2024 innova hyryder glanza check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X