அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் காரை இனி இப்படியும் வாங்கலாம்! ரோட்ல யார் வண்டியும் இப்படி இருக்காது!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து கிரெட்டா (Creta) காரில் நைட் எடிசன் (Knight Edition) விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அது தற்போது ஐ20 (i20), அல்கஸார் (Alcazar) மற்றும் கிரெட்டா எலக்ட்ரிக் (Creta Electric) கார்களிலும் தொடரப்பட்டு உள்ளன. அதாவது, ஐ20, அல்கஸார் மற்றும் கிரெட்டா எலக்ட்ரிக் கார்களிலும் புதியதாக நைட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
கிரெட்டா காரில் மட்டுமின்றி ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபலமான வென்யூ (Venue), எக்ஸ்டர் (Exter) கார்களிலும் நைட் எடிசன் ஆனது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் மூன்று புதிய கார்களில் நைட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதன் மூலம் ஹூண்டாயில் இருந்து விற்பனை செய்யப்படும் நைட் எடிசன் கார் மாடல்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

கார்களை முழுவதும் கருப்பு நிறத்தில் வழங்கும் பொருட்டு, அவற்றில் பிளாக் எடிசன், டார்க் எடிசன், நைட் எடிசன் போன்றவை அறிமுகம் செய்யப்படுவது வழக்கமாக ஒன்றே. இவை அனைத்தும் கருமை என்பதை தான் குறிக்கின்றன. மற்ற வழக்கமான கார்களில் இருந்து வித்தியாசமான தோற்றத்தில், முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் கார் வாங்க விரும்புபவர்களை டார்க்கெட் செய்து இந்த எடிசன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
இந்த பாணியை பல கார் கம்பெனிகள் பின்பற்றும் நிலையில், அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனமும் நைட் எடிசன் கார்களை அவ்வப்போது அறிமுகம் செய்வதை கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து வாடிக்கையாக கொண்டுள்ளது. 2022ஆம் ஆண்டில்தான் ஹூண்டாயில் இருந்து முதல்முறையாக நைட் எடிசன் கார்கள் அறிமுகம் செய்யப்பட ஆரம்பித்தன.

நைட் எடிசனை தனது கார்களில் அறிமுகம் செய்ய துவங்கிய பிறகு ஹூண்டாய் நிறுவனத்திற்கு நல்ல பலன் கிடைக்க ஆரம்பித்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், 2022இல் இருந்து இதுவரையில் சுமார் 77 ஆயிரத்திற்கும் அதிகமான நைட் எடிசன் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. அந்த வகையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நைட் எடிசன் கார்களில் கிரெட்டா நைட் எடிசன் நம்மை வசீகரிக்கிறது.
ஏனெனில், ஹூண்டாய் நிறுவனத்தின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் (Electric Car) ஆக விளங்கும் கிரெட்டா எலக்ட்ரிக்கில் இவ்வாறான நைட் எடிசன் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். 42kWh மற்றும் 51.4kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிரெட்டா எலக்ட்ரிக் நைட் எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

கிரெட்டா எலக்ட்ரிக் நைட் எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) ரூ.21.44 லட்சத்தில் இருந்து ரூ.24.54 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. ஐ20 நைட் எடிசனை பொறுத்தவரையில், இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.14 லட்சத்தில் இருந்து ரூ.11.34 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
ஹூண்டாயின் பிரபலமான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக விளங்கும் ஐ20 ஆனது ஐ20 என் லைன் (N Line) என்கிற வெர்சனிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆதலால், தற்போது நைட் எடிசன் ஆனது ஐ20 என் லைன் காருக்கும் வழங்கப்பட்டு உள்ளது. அல்கஸார் நைட் எடிசன் ஆனது 7 இருக்கைகளை கொண்ட கார் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.21.50 லட்சம் மற்றும் ரூ.21.70 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், ஹூண்டாய் நிறுவனத்திற்கு நைட் எடிசன் கார்கள் நல்ல பலனை கொடுத்துள்ளன. இதனாலேயே இவ்வாறு நைட் எடிசன் கார்களை அவ்வப்போது அறிமுகம் செய்வதை ஹூண்டாய் வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது கிரெட்டா எலக்ட்ரிக் காரிலும் நைட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது பார்ப்போரை கவர்கிறது. இந்த நைட் எடிசன் கார்களை பற்றிய விரிவான விபரங்களுக்கு அருகில் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும்.


Click it and Unblock the Notifications









