8 பேர் போகக்கூடிய டொயோட்டா காருக்கு தான் கூட்டம் கூடுது! மாருதி கார்கள் மட்டுமே இல்லைனா...

டொயோட்டா (Toyota), ஜப்பானை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். மாருதி சுஸுகி (Maruti Suzuki) உடன் இணைந்து செயல்பட்டு வருவதினாலேயே டொயோட்டா கார்கள் விற்பனை ஆனது சிறப்பாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், மேலும் மேலும் டொயோட்டா கார்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா கார்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன.

மாருதி சுஸுகி உடன் இணைந்து செயல்பட்டு வருவதன் மூலமாக, பல மாருதி கார்களை டொயோட்டா தனது பிராண்ட்டிற்கு ஏற்ப மாற்றிக் கொண்டு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது. டொயோட்டா கிளான்ஸா, ரூமியனில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டைசர் கார் வரையில் பெரும்பாலான டொயோட்டா கார்கள் அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டதே ஆகும்.

toyota sold 8449 innova cars

வேறு நிறுவனத்தின் கார்களை காப்பியடித்து உருவாக்கினாலும் டொயோட்டா கார்கள் விற்பனை சிறப்பாகவே உள்ளது. இன்னும் சொல்லப்போனால், மாதத்திற்கு மாதம் டொயோட்டா கார்கள் விற்பனை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நடந்து முடிந்த 2025 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 26 ஆயிரத்து 414 டொயோட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 23 ஆயிரத்து 300 கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், டொயோட்டா கார்கள் விற்பனை ஆனது 13% அதிகரித்துள்ளது. வழக்கம்போல், கடந்த பிப்ரவரி மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா காராக முதலிடத்தை இன்னோவா (Innova) பிடித்துள்ளது.

toyota sold 8449 innova cars

இந்தியாவில் இன்னோவா கிரிஸ்ட்டா, இன்னோவா ஹைகிராஸ் என 2 விதமான டொயோட்டா இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை இரண்டும் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 8 ஆயிரத்து 449 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த ஆண்டு பிப்ரவரியில் இதனை காட்டிலும் 32 இன்னோவா கார்கள் அதிகமாக 8,481 இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இன்னோவாவிற்கு அடுத்து கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா காராக 2வது இடத்தை கிளான்ஸா பிடித்துள்ளது. பிரபலமான மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீ-பேட்ஜ்டு வெர்சனான டொயோட்டா க்ளான்ஸா கடந்த மாதத்தில் 4 ஆயிரத்து 596 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2024 பிப்ரவரியிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான கிளான்ஸா கார்கள் தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

toyota sold 8449 innova cars

இருப்பினும் துல்லியமாக பார்த்தால், கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் 15 கிளான்ஸா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 3வது இடத்தை டொயோட்டா ஹைரைடர் 4,314 யூனிட்கள் விற்பனை உடன் பிடித்துள்ளது. அதுவே, 2024 பிப்ரவரியில் இந்த கார் 5,601 யூனிட்கள் விற்பனை உடன் இன்னோவாவிற்கு அடுத்த நிலையில் இருந்தது.

4வது இடத்தில், டொயோட்டாவின் சமீபத்திய லேட்டஸ்ட் மாடர்ன் காரான டைசர் 3,604 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2024 பிப்ரவரி சமயத்தில் இந்த கார் விற்பனையில் இல்லை. 5வது மற்றும் 6வது இடங்களில் முறையே ஃபார்ச்சூனர் மற்றும் ரூமியன் கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 2,876 மற்றும் 2,099 ஆகும்.

toyota sold 8449 innova cars
Take a Poll

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், கடந்த பிப்ரவரி மாதத்தில் 248 ஹைலக்ஸ் பிக்-அப் டிரக் வாகனங்கள், 209 காம்ரி கார்கள் மற்றும் 19 வெல்ஃபைஃபர் கார்களையும் இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஏறக்குறைய, அனைத்து டொயோட்டா கார்களின் விற்பனையும் வழக்கம்போல தான் உள்ளன. இருப்பினும், 2024 பிப்ரவரியை காட்டிலும் கடந்த பிப்ரவரியில் 3,100 கார்களை டொயோட்டா அதிகமாக விற்பனை செய்திருப்பதற்கு காரணம், புதிய டைசர் கார் ஆகும்.

FAQs
டொயோட்டா டைசர் எந்த மாருதி சுஸுகி காரின் ரீ-பேட்ஜ்டு வெர்சன்?

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Fronx).

கடந்த பிப்ரவரியில் ஒரு யூனிட் கூட விற்பனையாகாத டொயோட்டா கார் எது?

லேண்ட் க்ரூஸர் 300. கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரியிலும் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை.

இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டொயோட்டா கார் எது?

டைசர் (Taisor), 2024 ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Friday, March 14, 2025, 11:56 [IST]
English summary
Toyota sold 8449 innova cars in february 2025 all cars sales report
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X