ஜனவரி 1 முதல் ஆடி கார்களின் விலை 2% வரை உயர்வு

இந்தியாவில் ஆடி (Audi) நிறுவனத்தின் சொகுசு கார்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆடி இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை வரும் 2027 ஜனவரி 1 முதல் 2% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள் மற்றும் இதர பொருளாதார காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஆடி கார்களின் எக்ஸ்ஷோரூம் விலை அதிகரிக்கும். அந்நிறுவனத்தின் கார் வரிசையில் உள்ள பல்வேறு மாடல்கள் மற்றும் வேரியண்ட்டுகள் விலை உயர இருக்கிறது. ஒவ்வொரு மாடலுக்கும் எவ்வளவு விலை உயர்வு இருக்கும் என்பது குறித்த விரிவான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Audi Q7

வாகன உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள், உதிரிபாகங்கள் மற்றும் இதர உள்ளீட்டுச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற செலவுகளால் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் வருவாயிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்கள் மற்றும் வெளிநாட்டு பணபரிமாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் சொகுசு கார் நிறுவனங்களின் செலவுகளை அதிகரிக்கின்றன.

இதன் காரணமாக, விலை உயர்வின் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களிடம் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆடி தெரிவித்துள்ளது. ஆடி இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் பல்பீர் சிங் தில்லான் கூறுகையில், அதிகரித்து வரும் செலவுகளைக் கருத்தில் கொண்டு ஜனவரி 1 முதல் விலை மாற்றம் செய்யப்படுகிறது. வர்த்தகத்தை நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதுடன், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Also Read

ஆடி நிறுவனத்தின் இந்திய கார் வரிசையில் உள்ள செடான், எஸ்யூவி மற்றும் செயல்திறன் சார்ந்த மாடல்களின் விலை அதிகரிக்கப்படும். குறிப்பாக ஆடி Q3, Q5, Q7, Q8 உள்ளிட்ட சொகுசு எஸ்யூவி மாடல்களுடன் நிறுவனத்தின் பிற கார்களும் புதிய விலைப்பட்டியலுக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடி கார்களை வாங்கத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் 2026 டிசம்பர் மாதத்திற்குள் முன்பதிவு செய்வது குறித்து பரிசீலிப்பது நல்லது. வரும் ஆண்டு ஜனவரி 1 முதல் புதிய விலைகள் அமலுக்கு வருவதால், தற்போதைய விலையில் காரை வாங்க விரும்புபவர்கள் டீலர்களை அணுகி கார் இருப்பு, முன்பதிவு விதிமுறைகள், டெலிவரி தேதி மற்றும் தற்போதைய சலுகைகள் குறித்து விசாரிப்பது அவசியமாகிறது.

Also Read

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்திலும் தனது கார்களின் விலையை 2% வரை ஆடி நிறுவனம் உயர்த்தியது. தற்போது மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், 2027 தொடக்கத்தில் ஆடி கார்களை வாங்குபவர்கள் கூடுதல் தொகையை செலவிட வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் சொகுசு கார் வாங்க திட்டமிடுபவர்கள் முன்கூட்டியே தங்களது பட்ஜெட்டைத் திட்டமிடுவது நல்லது. மாருதி, ஆடி கார் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ள விலையில், அடுத்தடுத்து பிற நிறுவனங்களும் விலை உயர்வு அஸ்திரத்தை கையில் எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

Article Published On: Tuesday, November 24, 2026, 13:14 [IST]
English summary
Audi car price hike january 2027 india up to 2 percent
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out