சூப்பருங்கோ.. ஒரே செயலியில் அனைத்து EV சார்ஜிங் நிலையங்கள்: மத்திய அரசின் புதிய முயற்சி!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கான சார்ஜிங் வசதிகளையும் எளிமைப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, வெவ்வேறு நிறுவனங்களின் சார்ஜிங் நிலையங்களைத் தேடுவது, அவற்றின் பயன்பாடு, கட்டணம் செலுத்துவது போன்றவற்றில் இருக்கும் சிரமங்களைக் குறைக்க புதிய டிஜிட்டல் தளம் உருவாக்கப்படுகிறது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட Unified Bharat e-Charge (UBC) தளம், ஆரம்பகட்ட சோதனைத் திட்டத்தைத் தாண்டி நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல நிறுவனங்களின் சார்ஜிங் நெட்வொர்க்குகளை ஒரே தளத்தில் இணைத்து, மின்சார வாகன ஓட்டிகளுக்கு ஒருங்கிணைந்த அனுபவத்தை வழங்குவதே நோக்கத்தை கொண்டு இந்த தளம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

EV Charging Station

தற்போது 5 மாநிலங்களில் சோதனை அடிப்படையில் செயல்பட்டு வரும் இந்த தளம், அதன் செயல்பாடுகள் மேம்பட்ட பின்னர் மேலும் பல மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மின்சார கார், ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை பயன்படுத்துவோர் சார்ஜிங் வசதிகளை ஒரே டிஜிட்டல் தளத்தின் வாயிலாக அணுகும் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது.

தற்போது இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் பொதுமக்களுக்கான EV சார்ஜிங் நிலையங்களை அமைத்து வருகின்றன. Tata Power, ChargeZone, Statiq உள்ளிட்ட நிறுவனங்கள் வெவ்வேறு நெட்வொர்க்குகளில் செயல்படுவதால், வாகன ஓட்டிகள் ஒவ்வொரு நிறுவனத்தின் சார்ஜிங் நிலையத்தையும் பயன்படுத்த தனித்தனி மொபைல்போன் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

Also Read

இந்த நடைமுறையை எளிமைப்படுத்துவதுதான் Unified Bharat e-Charge தளத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இதில் இணைக்கப்பட்டுள்ள சார்ஜிங் நிலையங்களை ஒரே செயலியின் மூலம் கண்டறிந்து, சார்ஜிங் சேவை கிடைக்கும் இடங்களை தெரிந்துகொள்ள முடியும் என்பதுடன் எளிதாக பணம் செலுத்த முடியும். இதனால் நீண்ட பயணங்களில் சார்ஜிங் நிலையங்களைத் தேடி அலையும் சிரமம் குறையலாம்.

இந்த புதிய தளத்தில் தற்போது 12 சார்ஜிங் நெட்வொர்க் நிறுவனங்கள் இணைந்துள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஹனிப் குரேஷி தெரிவித்துள்ளார். மேலும், மின்சார இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்களும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

Also Read

இந்த தளத்தை NPCI BHIM Services Ltd மற்றும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன. இதன் மூலம் பல்வேறு சார்ஜிங் நிறுவனங்களின் சேவைகளை ஒரே டிஜிட்டல் அமைப்பில் கொண்டுவருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Unified Bharat e-Charge தற்போது 5 மாநிலங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த சோதனையில் கிடைக்கும் அனுபவங்கள், சார்ஜிங் நிலையங்களின் செயல்பாடு, நெட்வொர்க்கின் நம்பகத்தன்மை மற்றும் பயனர்களின் அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட விரிவாக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனினும், இந்த தளம் எந்தெந்த மாநிலங்களில் தற்போது செயல்படுகிறது என்ற முழுமையான பட்டியலும், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நெட்வொர்க் மேலும் வலுப்பெற்றதும் விரிவாக்கம் தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மின்சார வாகனங்களை நகரங்களுக்குள் மட்டுமின்றி, நீண்ட தூர பயணங்களுக்கும் பயன்படுத்துவதற்கு நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் வசதிகள் அதிகரிப்பது அவசியம். இதனை கருத்தில் கொண்டு, 24 சரக்கு வாகன வழித்தடங்களும், 50 கார் வழித்தடங்களும் சார்ஜிங் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

PM E-DRIVE திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கான EV சார்ஜிங் நிலையங்களை உருவாக்க ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் சார்ஜிங் நிலையங்களை அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் முதலீடு குறைவாக இருக்கும் பகுதிகளில் அரசு மானிய உதவிகளையும் வழங்குகிறது.

மின்சார வாகனங்களை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டினாலும், சார்ஜிங் வசதிகள் கிடைக்குமா, நீண்ட தூர பயணங்களில் பேட்டரி தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை இன்னும் பலரிடம் உள்ளது. குறிப்பாக வெவ்வேறு நிறுவனங்களின் சார்ஜிங் செயலிகள், கட்டண முறைகள் மற்றும் நிலையங்களின் செயல்பாடுகள் பயனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன.

Unified Bharat e-Charge திட்டம் முழுமையாக விரிவடைந்து, அனைத்து நிறுவனங்களின் சார்ஜிங் நிலையங்களையும் ஒருங்கிணைக்கும் பட்சத்தில், மின்சார வாகன பயணங்கள் இன்னும் எளிமையாகலாம். ஆனால், சார்ஜிங் நிலையங்களின் உண்மையான செயல்பாடு, சரியான தகவல்கள், தடையற்ற பணம் செலுத்தும் வசதி மற்றும் சார்ஜர் கிடைக்கும் நிலைமை ஆகியவை இந்தத் திட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

Article Published On: Sunday, November 22, 2026, 10:30 [IST]
English summary
Unified bharat e charge app india ev charging network expansion
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out