தந்திராஸ் நாளில் ரூ.10,000 கோடியை தாண்டிய கார் விற்பனை!

பண்டிகை காலத்தில் எப்போது கார் விற்பனை மிக அதிகமாக இருப்பது வழக்கம். குறிப்பாக தீபாவளிக்கு முன்னதாக வரும் தந்திராஸ் நாளில் கார் வாங்குவதை பலரும் அதிர்ஷ்டமாக கருதுகின்றனர். குறிப்பாக, வட இந்தியாவில் இந்த தந்திராஸ் தினத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டும் தந்திராஸ் பண்டிகை தினத்தன்று கார் விற்பனை அமோகமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு தந்திராஸ் தினத்தில் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் பயணிகள் கார்கள் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விற்பனையின் மதிப்பு ரூ.10,000 கோடியைத் தாண்டியிருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டின்படி, தந்திராஸ் ஒரே நாளில் இந்திய கார் சந்தையில் சுமார் ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரையிலான வர்த்தகம் நடைபெற்றிருக்கும் என கருதப்படுகிறது. இந்தியாவில் விற்பனையாகும் கார்களின் சராசரி விலையை ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை அடிப்டையாகக் கணக்கிட்டு இந்த மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Maruti Brezza Facelift

மாருதி சுஸுகி நிறுவனம் மட்டும் தந்திராஸ் தினத்தில் சுமார் 30,000 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்விஃப்ட், பலேனோ, பிரெஸ்ஸா, டிசையர் உள்ளிட்ட மாடல்களுக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவது நிறுவனத்தின் பண்டிகைக்கால விற்பனைக்கு பெரும் பலத்தை கொடுத்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனமும் தந்திராஸ் மற்றும் தீபாவளி காலகட்டத்தில் சுமார் 16,000 கார்களை டெலிவரி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 14 சதவீத வளர்ச்சியாகும். கிரெட்டா, வென்யூ, எக்ஸ்டர் மற்றும் ஐ20 போன்ற மாடல்கள் வாடிக்கையாளர்களின் தேர்வில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

Also Read

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவும் தந்திராஸ் தினத்தில் 12,000-க்கும் அதிகமான கார்களை டெலிவரி செய்துள்ளதாக தெரிகிறது. நெக்ஸான், பன்ச், டியாகோ, ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற மாடல்களின் விற்பனை நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. தீபாவளி முகூர்த்த டெலிவரிகளும் தொடர்ந்து நடைபெறும் என்பதால் விற்பனை வேகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு தந்திராஸ் விற்பனையில் வட இந்திய மாநிலங்களில் அதிக உற்சாகம் காணப்பட்டதாகவும், தென்னிந்திய சந்தைகளில் விற்பனை சீராக இருந்ததாகவும் தொழில்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராந்தியங்களுக்கு இடையேயான விற்பனை வேறுபாடுகள் இருந்தாலும், நாடு முழுவதும் புதிய கார் வாங்குவதற்கான ஆர்வம் வலுவாக இருப்பது இந்த மதிப்பீட்டின் மூலம் தெரிய வருகிறது.

Also Read

கடந்த ஆண்டு தந்திராஸ் விற்பனைக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பின் தாக்கம் காரணமாக அமோகமாக இருந்தது. இந்த ஆண்டு அதேபோன்ற புதிய வரி குறைப்பு இல்லாத சூழலிலும் வாடிக்கையாளர்கள் கார் வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். அக்டோபர் மாதத்தில் இந்திய பயணிகள் வாகன சந்தை ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மொத்த விற்பனை அளவை எட்டியதாக தகவல்கள் வெளியாகின.

இதன் தொடர்ச்சியாக தந்திராஸ் தினத்திலும் அதிக டெலிவரிகள் எதிர்பார்க்கப்பட்டன. முன்பதிவுகள், வாகன இருப்பு மற்றும் டெலிவரி திறன் ஆகியவை இந்த பண்டிகைக்கால விற்பனையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.

மொத்தத்தில், தந்திராஸ் தினத்தில் சுமார் ஒரு லட்சம் கார்கள் டெலிவரி செய்யப்பட்டிருக்கலாம் என்ற மதிப்பீடும், ரூ.10,000 கோடியைத் தாண்டிய வர்த்தகமும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் பண்டிகைக்கால உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த விற்பனை வேகம் தீபாவளி மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களிலும் தொடர்ந்தால், நடப்பு நிதியாண்டின் கார் விற்பனை வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும்.

Article Published On: Friday, November 20, 2026, 14:51 [IST]
English summary
Dhantheras 2026 india car sales rs 10000 crore one lakh cars
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out