வெறும் ரூ.7 லட்சத்துக்கு சன்ரூஃப் வசதி இருக்க கார் வாங்கலாம்.. எப்படி தெரியுமா?

சன்ரூஃப் வைத்த கார்களை வாங்க வேண்டும் என்பது இந்திய கார் வாடிக்கைாளர்களின் விருப்பமாக எப்போதுமே இருந்திருக்கிறது. இந்த விருப்பத்திற்கு தமிழ் சினிமா முக்கிய பங்களித்திருக்கிறது. முன்னர் சொகுசு கார்கள் அல்லது மாஸ் மார்க்கெட் பிரிவிலேயே விலை உயர்ந்த கார்களிலேயே சன்ரூஃப்கள் கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்த நிலை மாறியிருக்கிறது.

பட்ஜெட் கார்களிலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சன்ரூஃப்களைக் கொடுக்கத் தொடங்கின. தற்போது ரூ.10 லட்சத்திற்குள்ளான விலை கொண்ட கார்களின் தொடக்கநிலை வேரியன்ட்களில் கூட சன்ரூஃப்கள் கொடுக்கப்படத் தொடங்கப்பட்டு விட்டது. அப்படி தற்போது ரூ.8 லட்சத்திற்குள்ளான விலையில் சன்ரூஃப் வசதியுடன் விற்பனையில் இருக்கும் கார் மாடல்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.

Hyundai Exter

5. ஹூண்டாய் எக்ஸ்டர்: சமீபத்தில் தான் வேரியன்ட்களை மாற்றியமைத்து அப்டேட் செய்தது ஹூண்டாய். இந்த மைக்ரோ எஸ்யூவி மாடலின் பல்வேறு வேரியன்ட்களில் சன்ரூஃப் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் HX6 வேரின்டிலேயே நாம் எதிர்பார்க்கும் வகையில் ரூ.8 லட்சத்திற்குள்ளான விலையில் கிடைக்கிறது. HX6 வேரியன்டின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ட்ரிம்மை சன்ரூஃப் வசதியுடன் ரூ.7.95 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம்.

இந்த எஸ்யூவி மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல்+CNG என இரண்டு இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு இன்ஜின்களுடனும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், பெட்ரோலுடன் 5 ஸ்பீடு AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் கூடதல் தேர்வாக இருக்கிறது.

Kia Sonet

4. கியா சோனெட்: இந்த காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் HTE(O) வேரியன்டின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ட்ரிம்மை ரூ.7.70 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே நாம் வாங்க முடியும். மற்ற வேரியன்ட்களிலும் சன்ரூஃப் வசதி இருக்கிறது. ஆனால் ரூ.8 லட்சத்திற்கும் மேலான எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. இந்த வேரியன்டில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதனைத் தவிர்த்து, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகளும் இந்தக் காரில் உண்டு. டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. NA பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டும் தான். ஆட்டோமேட்டிக் இல்லை.

3. டாடா ஆல்ட்ராஸ்: டாடாவின் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஆல்ட்ராஸில் ரூ.8 லட்சம் விலைக்குள் இரண்டு ட்ரிம்கள் சன்ரூஃப் வசதியைக் கொண்டுள்ளன. ப்யூர் S வேரியன்டின் 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு ட்ரிம்களிலும் சன்ரூஃப் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ட்ரிம்மை ரூ.7.36 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ட்ரிம்மை ரூ.7.91 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் நாம் வாங்கலாம்.

இந்த பெட்ரோல் இன்ஜினைத் தவிர்த்து 1.2 லிட்டர் பெட்ரோல்+CNG மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் தேர்வுகளும் இந்த ஆல்ட்ராஸ் ஹேட்ச்பேக்கில் உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 5 ஸ்பீடு AMT ஆட்டோமேட்டிக்கைத் தவிர்த்து DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2. டாடா பன்ச்: குறைவான விலையில் சன்ரூஃப் வசதி கொண்ட மற்றொரு டாடா கார் பன்ச். இந்த மைக்ரோ எஸ்யூவி மாடலின் ப்யூர் S மற்றும் அட்வென்சர் S ஆகிய வேரியன்ட்களில் நாம் எதிர்பார்ப்பதைப் போலவே ரூ.8 லட்சம் விலைக்குள் சன்ரூஃப் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ப்யூர் S வேரின்டின் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு ட்ரிம்களிலும் சன்ரூஃப் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ட்ரிம்மை ரூ.7.34 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ட்ரிம்மை ரூ.7.89 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் நாம் வாங்கலாம். அதேபோல் அட்வென்சர் S வேரின்டின் 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் ட்ரிம்மை சன்ரூஃப் வசதியுடன் ரூ.7.94 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்க முடியும்.

1. ஹூண்டாய் i20: இந்திாவில் குறைவான விலையில் சன்ரூஃப் வசதி கொண்ட கார் மாடல் இது தான். ஹூண்டாயின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலான இதில் இரண்டு வேரியன்ட்கள் ரூ.8 லட்சத்திற்குள்ளான விலையில் சன்ரூஃப் வசதியைக் கொண்டிருக்கின்றன. மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய இரண்டு வேரியன்ட்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் ட்ரிம்மானது சன்ரூஃப் வசதியைக் கொண்டுள்ளது.

இந்த பவர்ட்ரெயினுடன் சன்ரூஃப் வசதி கொண்ட மேக்னை வேரியன்டை ரூ.6.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஸ்போர்ட்ஸ் வேரியன்டை ரூ.7.74 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் நாம் வாங்கலாம். இது தவிர டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய i20 N-லைன் மாடலும் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.8 லட்சத்திற்குள்ளான விலையில் சன்ரூஃப் வசதி கொண்ட கார் வேரியன்ட்கள் விற்பனையில் இருந்தாலும், இன்னும் சற்று கூடுதலாக செலவழித்தால் கூடுதல் வசதிகள் கொண்ட வேரியன்ட்களையும் நாம் வாங்க முடியும். மேலும், சன்ரூஃப் வசதி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இந்திய வாடிக்கையாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத வசதியும் அதுவாகத் தான் இருக்கிறது. எனவே சன்ரூஃபுக்காக அதிக தொகையை செலவு செய்வதற்கு முன்னாள் சற்று சிந்தித்து செயல்படவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 31, 2026, 16:05 [IST]
English summary
Cars with sunroof under rs 8 lakhs price tag check all details here
மேலும்... #hyundai i20 #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+