டாடாவுக்கே டஃப் கொடுக்கப் போகும் ஜேஎஸ்டபிள்யூ... டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பிரம்மாண்ட திட்டம்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய நிறுவனமாக களமிறங்கத் தயாராகி வரும் ஜேஎஸ்டபிள்யூ (JSW) குழுமம், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் நடைபெறவுள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2027 சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் மிகப்பெரிய திட்டத்துடன் மாஸ் காட்டத் தயாராகி வருகிறது. அதாவது, கண்காட்சி அரங்கில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு மிகப்பெரிய அரங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்றாக ஜேஎஸ்டபிள்யூ உள்ளது. சிமென்ட், ஸ்டீல், பெயிண்ட் என கட்டுமானத் துறை தயாரிப்புகளில் கோலோய்ச்சி வரும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் கார் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளது. ஏற்கெனவே எம்ஜி மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் செயல்பட்டு வரும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம், தற்போது சொந்த கார் பிராண்டிலும் கார்களை அறிமுகப்படுத்த உள்ளது.

JSW Combat

இதுமட்டுமின்றி மின்சார வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனத் துறையிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. இந்த அனைத்து தயாரிப்புகளையும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தும் விதமாக வரும் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை பயன்படுத்த ஜேஎஸ்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

பிரம்மாண்ட அரங்கு

டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் மற்றும் யஷோபூமி ஆகிய இடங்களில் 2027 பிப்ரவரி 4 முதல் 9ஆம் தேதி வரை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ என்ற பெயரில் சர்வதேச வாகனக் கண்காட்சி நடைபெற உள்ளது. கடந்த 2025ம் ஆண்டு நடந்த கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் சுமார் 6,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்ட அரங்கை அமைத்திருந்தது. தற்போது அதைவிடப் பெரிய இடத்தை ஜேஎஸ்டபிள்யூ குழுமம் பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read

இதுகுறித்து ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஜேஎஸ்டபிள்யூ குழுமம் கண்காட்சியின் ஹால் 1 பகுதியை முழுமையாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவதாக, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார்கள் இடம்பெற உள்ளன. இதில் ஏற்கெனவே விற்பனையில் உள்ள மாடல்களுடன் எதிர்காலத்தில் அறிமுகமாகவுள்ள புதிய கார்களும் காட்சிப்படுத்தப்படலாம். குறிப்பாக எம்ஜி நிறுவனத்தின் பிரீமியம் பிராண்டான செலக்ட் (Select) பிரிவின் கீழ் விற்பனையாகும் மாடல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இரண்டாவதாக, ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொந்த கார் பிராண்டு மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஏற்கெனவே இந்த நிறுவனம் நான்கு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஜெடூர் டி2 (Jetour T2) அடிப்படையிலான எஸ்யூவி மாடலும் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

விற்பனையில் வேற லெவல் வளர்ச்சி.. 10 மாதங்களில் 87% அதிகரித்த கியா செல்டோஸ் விற்பனை!

மூன்றாவதாக, ஜேஎஸ்டபிள்யூ கிரீன்டெக் (JSW Greentech) நிறுவனத்தின் மின்சார வர்த்தக வாகனங்கள் இடம்பெறும். இதில் மின்சார பேருந்துகள் மற்றும் மின்சார டிரக்குகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் பயணிகள் கார்கள் மட்டுமின்றி, பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான மின்சார வாகனங்களையும் ஒரே அரங்கில் பார்வையாளர்கள் காண முடியும்.

Bharat Mobility Show

ஃபோக்ஸ்வேகன் கார்களும் வருமா?

ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துடனான ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி குறித்த தகவல்களும் இந்தக் கண்காட்சியைச் சுற்றி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் கூட்டணி திட்டமிட்ட நேரத்தில் இறுதியாகும் பட்சத்தில், ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் கார்களும் கண்காட்சியில் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பெரிய திட்டம்

புதிய கார் தயாரிப்பு நிறுவனமாக அடையாளத்தை உருவாக்க முயற்சிக்கும் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்திற்கு இந்தக் கண்காட்சி முக்கியமான வாய்ப்பாக அமையும். புதிய வாகனங்களை அறிமுகப்படுத்துவதுடன், டீலர்கள், உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் தனது எதிர்காலத் திட்டங்களை இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பரைசாற்றும் இடமாகவும் இருக்கும்.

Via - Financial Express

Article Published On: Monday, November 16, 2026, 9:29 [IST]
English summary
Jsw motors bharat mobility expo 2027 largest pavilion tata motors
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out