டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சங்கு ஊத போகும் கியா! அந்த காருக்கு புக்கிங் ஸ்டார்ட் ஆயிருச்சா! கொளுத்துங்கடா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா சொரெண்டோ (Kia Sorento). டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor) போன்ற ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு எல்லாம் நேரடி போட்டியாக கியா சொரெண்டோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இன்னும் ஒரு சில நாட்களில் அல்லது வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படும் சொரெண்டோ காருக்கு ஒரு சில கியா டீலர்கள் தற்போது முன்பதிவுகளை (Bookings) ஏற்க தொடங்கியுள்ளனர். அத்துடன் கியா டீலர்கள் மூலமாக, சொரெண்டோ காரின் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) பற்றிய தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Kia Sorento

இதன்படி கியா சொரெண்டோ காரில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது. ஆனால் அவை என்னென்ன இன்ஜின்கள்? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அதாவது கியா சொரெண்டோ காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரையில் 1.5 லிட்டர் யூனிட் அல்லது 1.6 லிட்டர் யூனிட் வழங்கப்படலாம்.

இந்த இரண்டில் ஏதாவது ஒரு ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை கியா சொரெண்டோ பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டர்போ டீசல் இன்ஜினை பொறுத்தவரையில் 2.2 லிட்டர் யூனிட் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் கியா சொரெண்டோ காரில் ஏராளமான அதிநவீன வசதிகளையும் (Features) நாம் எதிர்பார்க்கலாம்.

Kia Sorento Front

இதன்படி 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, ஆம்பியண்ட் லைட்டிங், பெரிய பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் எல்லாம் கியா சொரெண்டோ காரில் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியா சொரெண்டோ காரின் நீளம் சுமார் 4.8 மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட கியா சொரெண்டோ கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இதன் 6 சீட்டர் வெர்ஷனின் 2வது இருக்கையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் 7 சீட்டர் வெர்ஷனின் 2வது இருக்கையில் பென்ச் வகை இருக்கை வழங்கப்படும் என தெரிகிறது. கியா நிறுவனம் சொரெண்டோ காரின் 5 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பதை இங்கே மறுப்பதற்கில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சொரெண்டோ காரின் விலை 35-50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். கியா நிறுவனம் அடுத்த சில வாரங்களுக்கு மிகவும் பிஸியாக இருக்க போகிறது. ஏனெனில் சொரெண்டோ மட்டுமல்லாது, சைரோஸ் இவி (Kia Syros EV) எலெக்ட்ரிக் காரையும் கியா நிறுவனம் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

Article Published On: Wednesday, July 15, 2026, 16:39 [IST]
English summary
Kia sorento suv bookings open in india expected price features engine options
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out