8 வருஷத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் கார் இந்தியாவில் அறிமுகம்! பெட்ரோல் என்ஜின் உடன் பேட்டரியும் இருக்கு!

லெக்ஸஸ் நிறுவனம் அதன் புதிய இ.எஸ் 350h (ES 350h) என்கிற ஹைப்ரீட் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.66.10 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய லெக்ஸஸ் ஹைப்ரீட் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஜப்பானை சேர்ந்த லக்சரி கார் நிறுவனமான லெக்ஸஸ் இந்தியாவில் பல அட்டகாசமான கார்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக, பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டிலும் இயங்கக்கூடிய ஹைப்ரீட் கார்களை புதியது புதியதாக அறிமுகப்படுத்துவதில் லெக்ஸஸ் தீவிரமாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது ES 350h புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

lexus es 350h hybrid car launch

எக்ஸ்குயிசைட் மற்றும் லக்சரி என இரு விதமான வேரியண்ட்களில் புதிய ES 350h விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், மேலே குறிப்பிடப்பட்ட ரூ.66.10 லட்சம் ஆனது இந்த காரின் எக்ஸ்குயிசைட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். அதுவே லக்சரி வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.71.80 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லெக்ஸஸ் நிறுவனத்தின் தாழ்வான உடலமைப்பை கொண்ட லக்சரியான செடான் ரக காரான ES தற்போது ஹைப்ரீட் வெர்சனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், எலெக்ட்ரிக் வெர்சனில் இந்த கார் கடந்த மார்ச் மாதத்தில் ரூ.90 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் ஹைப்ரீட் மற்றும் எலெக்ட்ரிக் என இரு ஆப்ஷன்களிலும் கிடைக்கும் விலை குறைவான லெக்ஸஸ் கார் ES ஆகும்.

lexus es 350h hybrid car launch

புதிய ES 350h ஹைப்ரீட் கார் ஆனது அதன் முந்தைய ஜென்ரேஷனை விட அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்பக்கத்தில் L வடிவில் விளக்குகள் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், காரின் பின்புறம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய காரில் எலெக்ட்ரானிக் டோர் லாட்ச் ரீலிஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.

புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட SOU நிறம் மற்றும் சோனிக் காப்பர் நிறங்களில் புதிய ES 350h காரை வாங்கலாம். இந்த ஹைப்ரீட் காரினுள் டாஷ்போர்டில் 14 இன்ச்சில் உயர் தெளிவான தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு இணைப்பு வசதிகளை வழங்கக்கூடியதாக உள்ளது. மேலும், இதில் ஸ்விட்ச்களும் வெளியே தெரியாத வகையில் வழங்கப்பட்டுள்ளதாக லெக்ஸஸ் தெரிவித்துள்ளது.

இவற்றுடன், லெக்ஸஸ் சேஃப்டி சிஸ்டம்+ என்கிற பெயரில் சில ADAS வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. புதிய ES 350h காரில் 2.5 லிட்டர் இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் மற்றும் லித்தியம்-இரும்பு பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்ரீட் சிஸ்டம் ஆனது அதிக பவர் டெலிவிரியை வழங்கும் அதேநேரத்தில் காரின் மைலேஜையும், மென்மையான இயக்கத்தையும் உறுதிச் செய்யும் என லெக்ஸஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

புதிய ES 350h ஹைப்ரீட் காரின் அறிமுகம் குறித்து லெக்ஸஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஹிகாரு ஐகுசி கூறுகையில், "இந்த புதிய கார் ஆனது எலெக்ட்ரிஃபிகேஷனுக்கான லெக்ஸஸின் பல்வேறு அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் இந்தியாவில் நிலையான இயக்கத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹைப்ரீட் கார்களுக்கான மார்க்கெட் தொடர்ந்து பெரியதாகி வருகிறது என்றாலும், லெக்ஸஸ் இஎக்ஸ் 350h ஹைப்ரீட் காரை எந்த அளவிற்கு இந்திய மக்கள் அதிகமாக வாங்குவார்கள் என்பது பெரிய கேள்வியே. ஏனெனில், இதன் விலை அந்த அளவிற்கு மிகவும் அதிகப்படியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், லெக்ஸஸில் குறைந்த விலையில் ஹைப்ரீட் கார் ஒன்றை வாங்குவதற்கு இது ஏற்றதாகும். இந்த புதிய காருக்கான முன்பதிவுகள் ஜூலை 15ஆம் தேதியான இன்று முதல் நாடு முழுவதும் துவங்கப்பட்டுள்ளன.

Article Published On: Wednesday, July 15, 2026, 16:54 [IST]
English summary
Lexus india launches es 350h hybrid car price features battery booking details
மேலும்... #lexus #hybrid car #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out