பெரிய பேட்டரி, அதிக ரேஞ்ச்... வருகிறது புதிய எம்ஜி வின்ட்சர் EV ஃபேஸ்லிஃப்ட்!

எம்ஜி வின்ட்சர் EV கார் (MG Windsor EV) இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த மின்சார காரில் புதிய மாற்றங்களை கொண்டுவர எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, காரின் பேட்டரி திறனை அதிகரித்து, நீண்ட தூரம் பயணிக்க ஏற்ற வகையில் மேம்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது.

வின்ட்சர் EV ஏற்கனவே குடும்ப பயன்பாட்டிற்கான வசதியான மின்சார காராக உள்ளது. அதன் விசாலமான உட்புறம், தனித்துவமான வடிவமைப்பு மற்றும் நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்ற தன்மை ஆகியவை வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அதிக திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MG Windsor

தற்போதைய எம்ஜி வின்ட்சர் EV காரில் வெவ்வேறு பேட்டரி தேர்வுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, அதிக ரேஞ்சை வழங்கும் Pro மாடலில் 52.9 kWh பேட்டரி பேக் இடம்பெற்றுள்ளது. இந்த பேட்டரி ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், சுமார் 449 கிமீ வரை பயணிக்கும் ரேஞ்சை வழங்குவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆனால், புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இதைவிட பெரிய பேட்டரி பேக் வழங்கப்படும். அதாவது, 61 kWh திறன் வாய்ந்த பெரிய பேட்டரி பேக் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தற்போதைய மாடலை விட கூடுதல் ரேஞ்ச் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட தூர பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இந்த புதிய பேட்டரி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

Also Read

மின்சார கார்களை வாங்கும் பலருக்கும் ரேஞ்ச் குறித்த கவலை முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு பயணம் செய்யும்போது, அடிக்கடி சார்ஜிங் நிலையங்களை தேட வேண்டிய நிலை ஏற்படுகிறது. பேட்டரி திறன் அதிகரிக்கப்பட்டால் இந்த பிரச்னை சற்று குறையும்.

மேலும், 61 kWh பேட்டரி வழங்கப்பட்டால், சார்ஜ் செய்துவிட்டு நீண்ட தூரம் பயணிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் நெடுஞ்சாலை பயணங்களில் சார்ஜிங் இடைவெளியை நீட்டிக்க முடியும். இருப்பினும், புதிய பேட்டரியின் அதிகாரப்பூர்வ ரேஞ்ச் எவ்வளவு இருக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகவில்லை.

Also Read

இது ஃபேஸ்லிஃப்ட் மாடல் என்பதால் வெளிப்புற வடிவமைப்பிலும் சில மாற்றங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. முன்பக்க தோற்றம், விளக்குகள், பம்பர்கள் மற்றும் அலாய் வீல்கள் போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும். அதேபோல், காரின் உட்புறத்திலும் புதிய நிறங்கள் அல்லது கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டு இருக்கும்.

தொழில்நுட்ப வசதிகளிலும் அப்டேட்டுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இணைப்பு வசதிகள், ஓட்டுனர் உதவி அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் புதிய மாற்றங்கள் இடம்பெறும். இதுகுறித்த விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல்களை எதிர்பார்க்கலாம்.

பெரிய பேட்டரி பேக் இடம்பெறுவதால் காரின் விலையும் சற்று அதிகரிக்கப்படும். எம்ஜி நிறுவனம் இந்த புதிய வின்ட்சர் EV ஃபேஸ்லிஃப்ட்டை எப்போது அறிமுகம் செய்யும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு முதல் பகுதியில் இந்த புதிய மாடல் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளுடன் சந்தைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Autocarindia

Article Published On: Monday, November 23, 2026, 9:21 [IST]
English summary
Mg windsor ev facelift 61kwh battery range update
மேலும்... #mg motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out