8 இல்ல 9 பேர் கூட சௌகரியமா அமர்ந்து போகக்கூடிய டொயோட்டா கார்! நம்பிக்கையாக வாங்கலாமா?

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crysta), இந்தியர்களில் பெரும்பாலானோர் வாங்க துடிக்கும் எஸ்யூவி (SUV) ரக கார். சுமார் 8இல் இருந்து 9 பேர் வரையில் சௌகரியமாக பயணம் செய்யக்கூடிய பிரமாண்டமான காராக, ஜப்பானிய கார் மெக்கானிசம் தரத்தை வெளிகாட்டக் கூடியதாக இன்னோவா க்ரிஸ்டா விளங்குகிறது. வெறும் இன்னோவா என்கிற பெயரில் இந்தியாவில் துவங்கிய இந்த பயணம் இன்னோவா க்ரிஸ்டாவாக மாறி, தற்போது இன்னோவா ஹைகிராஸ் (Hycross) ஆக சென்றுக் கொண்டிருக்கிறது.

இன்னோவா ஹைகிராஸ் என்பது இன்னோவா க்ரிஸ்டாவின் ஹைப்ரீட் (Hybrid) வெர்சன் ஆகும். பவர்டிரெயினில் மட்டுமின்றி, தோற்றத்திலும் இன்னோவா ஹைகிராஸ் மேம்படுத்தப்பட்டு கடந்த சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. அதேநேரம், இன்னோவா க்ரிஸ்டா காரும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனை இன்னும் நீண்ட காலத்திற்கு இருக்காது எனவும், 2027இல் இதன் விற்பனை நிறுத்தப்பட்டுவிடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

toyota innova crysta in 2026

இந்த தகவல் இப்போது அல்ல, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே வெளிவந்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும், 2027க்கு பிறகு இன்னோவா க்ரிஸ்டா நிறுத்தப்படும் என்பதை இன்னமும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஒருவேளை இந்த பிரபலமான டொயோட்டா காரின் விற்பனை நிறுத்தப்பட்டால், அது இந்தியாவில் டொயோட்டாவின் விற்பனையை எந்த அளவிற்கு பாதிக்கும்? இனி இந்த காரை வாங்கலாமா? என்பதை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

இன்னோவா ஹைகிராஸ் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்றாலும், பழைய இன்னோவா காரின் தோற்றத்தை விரும்பக்கூடியவர்கள் இன்னோவா க்ரிஸ்டாவையே எதிர்பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக, விற்பனையில் போட்டியாக உள்ள மற்ற கார்கள் பெட்ரோல், ஹைப்ரீட் என மாறிவிட்ட நிலையில், இன்னோவா க்ரிஸ்டா அதன் பழமை மாறாத 2.4 லிட்டர் டீசல் என்ஜின் உடன் கிடைக்கிறது.

toyota innova crysta in 2026

பவர்ஃபுல்லான டீசல் என்ஜினான இது நீண்ட தூர பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. இன்னோவா க்ரிஸ்டா விற்பனை நிறுத்தப்படும் பட்சத்தில், சிலர் இன்னோவா ஹைகிராஸுக்கு செல்லலாம்; அதேநேரம் சிலர் இன்னோவா க்ரிஸ்டாவுக்கு மாற்றாக மற்ற பிராண்ட்களில் உள்ள கார்களுக்கு செல்லலாம். ஆதலால், இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனை நிறுத்தம் இந்தியாவில் டொயோட்டாவின் விற்பனையை சற்று பாதிக்கும் என்பது உறுதியே.

ஆனால், இதன் நிறுத்தத்தால் இன்னோவா ஹைகிராஸ் காரை மேம்படுத்தும் பணிகளில் இன்னும் கூடுதல் கவனத்துடன் ஈடுப்பட முடியும் என்றுதான் டொயோட்டா நினைக்கும். இனி இந்த காரை வாங்கலாமா என கேட்டால், பொதுவாகவே ஒரு காரின் விற்பனை நிறுத்தப்பட உள்ளதாக அரசல் புரசலாக தெரியவந்துவிட்டாலே அந்த காரை வாங்காமல் தவிர்ப்பது நல்லது.

ஏனெனில், ஒரு காரின் விற்பனை நிறுத்தப்படுகிறது என்றால் அதனுடன் சேர்த்து அந்த காருக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்படும் கார் பாகங்களின் உற்பத்தி & விற்பனையும் நிறுத்தப்படும். அப்படியென்றால், அந்த காரை பயன்படுத்தும்போது எதிர்காலத்தில் ஏற்படும் பழுதுகளுக்கு எங்கு போய் பாகங்களை தேட முடியும்? இருப்பினும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டாவை வாங்கலாம்.

ஏனெனில், இன்னோவா கார்கள் அதன் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே நல்ல மறுவிற்பனை மதிப்பை வழங்கி வருகின்றன. ஆதலால் விற்பனை நிறுத்தப்பட்டாலும், இந்த காரை செகண்ட்-ஹேண்டில் ஆவது வாங்கிவிடும் வேட்கையில் இருப்பவர்களிடம் விற்கலாம். இன்னும் சொல்லப்போனால், விற்பனை நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படும் இன்னோவா கிரிஸ்டா அதன்பின் ஓர் கிளாசிக் கார் ஆக கிளாசிக் கார் சேகரிப்பாளர்களின் விருப்பமாகவும் மாறக்கூடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், 2027இல் இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனையை நிறுத்தவுள்ளதாக டொயோட்டாவிடம் இருந்து இன்னும் எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும், இன்னோவா ஹைகிராஸுக்கு வழிவிட்டு இன்னோவா க்ரிஸ்டாவின் சகாப்தம் முடியும் தருவாய்க்கு வந்துவிட்டதாகவே கருதுகிறோம். ஆதலால், இன்னோவா க்ரிஸ்டா போனாலும் அதன் இடத்தை இன்னோவா ஹைகிராஸ் நிரப்பும் என எதிர்பார்க்கிறோம். இன்னும் சில காலத்தில் செகண்ட்-ஹேண்டில் மட்டுமே கிடைக்க போகும் இன்னோவா க்ரிஸ்டாவை இப்போது நீங்கள் பிராண்ட்-நியூ காராக வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 17, 2026, 5:00 [IST]
English summary
Toyota innova crysta in 2026 reliability you cannot kill features you might miss
மேலும்... #toyota #toyota innova crysta #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+