ரூ.19.99 லட்சத்தில் வந்துவிட்டது டொயோட்டா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட்: ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மாடலிலும் அறிமுகம்!

வடிவமைப்பில் மாற்றங்கள், புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சற்றுமுன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறை பெட்ரோல், ஹைப்ரிட் தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய E85 எரிபொருளில் இயங்கும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மாடலிலும் வந்துள்ளது.

இந்தியாவில் குடும்பப் பயணங்களுக்கும், நீண்ட தூர பயணங்களுக்கும் அதிகம் விரும்பப்படும் எம்பிவி (MPV) கார்களில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில் புதிய ஹைகிராஸ் காரின் ஆரம்ப விலையாக ரூ.19.90 எக்ஸ்ஷோரூம் விலையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Toyota Hycross

விலை விபரம்

புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் பெட்ரோல் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் என இரண்டு வகையான பவர்டிரெயின் தேர்வுகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் GX பெட்ரோல் வேரியண்ட் ரூ.19.59 லட்சம் விலையிலும், GX ஹைப்ரிட் ரூ.23.99 லட்சம் விலையிலும் அறிமுகமாகியுள்ளது. G ஹைப்ரிட் வேரியண்ட் ரூ.19.99 லட்சம் விலையிலும் கிடைக்கிறது. மேலும், VX ஹைப்ரிட் வேரியண்ட் ரூ.28.79 லட்சம் விலையிலும், ZX ஹைப்ரிட் வேரியண்ட் ரூ.31.99 லட்சம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வடிவமைப்பு அம்சங்கள்

புதிய இன்னோவா ஹைக்ராஸின் முன்பகுதியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகளுடன் (DRL) இணைந்து வழங்கப்பட்டுள்ளன. டொயோட்டா டெய்சர் காரில் காணப்படும் விளக்குகளின் வடிவமைப்பை நினைவுபடுத்தும் வகையில் இவை அமைந்துள்ளன. முன்பக்க கிரில், ஹைலக்ஸ் வாகனத்தின் வடிவமைப்பு தாக்கத்துடன், சதுரமான தோற்றத்தைப் பெற்றுள்ளது.

கிரில்லில் வைர வடிவ காற்று நுழைவு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. பனி விளக்குகளின் அமைவிடமும் மாற்றப்பட்டுள்ளது. கீழ்புறத்தில் மெல்லிய காற்று நுழைவு பகுதி மற்றும் வெள்ளி நிற அலங்கார அம்சங்கள் முன்பகுதியின் தோற்றத்தை மேம்படுத்துகின்றன. பக்கவாட்டு வடிவமைப்பில் பெரிய கதவுகள், கண்ணாடி அமைப்பு மற்றும் அலாய் வீல்கள் பெரும்பாலும் பழைய வடிவத்திலேயே தொடர்கின்றன. பின்புறத்தில் இரட்டை அடுக்கு டெயில் லைட்டுகள் மற்றும் புதிய டிசைனில் பம்பர் இடம்பெற்றுள்ளன.

Also Read

புதிய வசதிகள்

இன்னோவா ஹைகிராஸ் காரின் உட்புறத்திலும் முக்கியமான தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 12.3 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பனோரமிக் சன்ரூஃப், முன்பக்க வென்டிலேட்டட் இருக்கைகள், மெமரி வசதியுடன் கூடிய மின்சாரத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, JBL ஆடியோ சிஸ்டம், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. புதிய கேபின் நிறங்கள், இருக்கை அப்ஹோல்ஸ்டரி மற்றும் உட்புற அலங்கார மாற்றங்களும் காரின் பிரீமியம் அனுபவத்தை தரும்.

Also Read

ஃப்ளெக்ஸ் ஃப்யூல் ஹைப்ரிட் தொழில்நுட்பம்

இந்த புதிய மாடலில் முக்கிய சிறப்பம்சமாக ஃப்ளெக்ஸ் ஃப்யூல் (Flex-Fuel) வசதியுடன் கூடிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதிக அளவு எத்தனால் கலந்த பெட்ரோலையும் பயன்படுத்தும் வகையில் இந்த பவர்டிரெயின் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக E85 எரிபொருள், அதாவது 85 சதவீத எத்தனால் மற்றும் 15 சதவீத பெட்ரோல் கலவையிலான எரிபொருளிலும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொழில்நுட்பம் இந்தியாவின் மாற்று எரிபொருள் பயன்பாட்டு முயற்சிகளுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எத்தனால் கலந்த எரிபொருளை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம், வழக்கமான பெட்ரோல் மீதான சார்பை குறைக்கும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், ஹைப்ரிட் அமைப்பின் உதவியுடன் எரிபொருள் பயன்பாட்டை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாக இருக்கிறது.

இன்னோவா ஹைகிராஸ் ஏற்கனவே தனது ஹைப்ரிட் தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பெட்ரோல் எஞ்சினுடன் மின்மோட்டார் இணைந்து செயல்படும் இந்த அமைப்பு, குறிப்பாக நகர போக்குவரத்தில் எரிபொருள் சிக்கனத்திற்கு உதவுகிறது.

இந்த காரில் முந்தைய மாடலில் இருந்த அதே 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் என இரண்டு வகையான மாடல்களில் கிடைக்கும்.

வசதியான கார்

பெரிய குடும்பங்களுக்கான கார் என்பதால், இடவசதி, நீண்ட தூர பயணங்களுக்கான வசதிகள் மற்றும் நீண்ட தூர பயணங்களில் நம்பகத்தன்மை ஆகியவை இன்னோவா ஹைகிராஸின் முக்கிய அம்சங்களாக உள்ளன. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இந்த அடிப்படை அம்சங்களை தொடர்ந்து வழங்குவதுடன், புதிய எரிபொருள் தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்கால தேவைகளுக்கும் ஏற்றதாக இந்த கார் வந்துள்ளது.

இந்தியாவில் எம்பிவி கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், புதிய இன்னோவா ஹைகிராஸ் அறிமுகம் சந்தையில் போட்டியை மேலும் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக ஹைப்ரிட் தொழில்நுட்பம், பிரீமியம் வசதிகள், பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற இடவசதி மற்றும் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் பயன்பாடு ஆகியவை இந்த காரின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

Article Published On: Wednesday, November 25, 2026, 19:05 [IST]
English summary
Toyota innova hycross facelift launched india flex fuel hybrid price features
மேலும்... #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out