கடந்த 20 வருஷத்தில் எத்தனை பேரது கார் ஆசையை நிறைவேற்றி இருக்கும்! டொயோட்டாவுக்கு வேற வழி தெரியல!

இந்தியாவின் எம்பிவி (MPV) ரக கார்கள் சந்தையில் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crysta) டீசல் காரின் உற்பத்தி, 2027 மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய வாகனச் சந்தையில் அதன் ஒரு சகாப்தம் முடிவுக்கு வரவுள்ளது.

லேடர்-ஃப்ரேம் (Ladder-frame) கட்டமைப்புடன் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட இந்த MPV, தற்போது மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கிறது. இது உண்மையில் 2025-ஆம் ஆண்டிலேயே உற்பத்தியில் இருந்து நிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் மத்தியில் நிலையான தேவை மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross) காருக்கான செமி-கண்டக்டர் பற்றாக்குறை காரணமாக, இன்னோவா க்ரிஸ்டா உற்பத்தியை திட்டமிட்டதை விட நீண்ட காலம் தொடர வேண்டியிருந்தது.

toyota innova crysta mpv discontinuing

2027இல் க்ரிஸ்டாவின் விற்பனையை நிறுத்தும் டொயோட்டாவின் இந்த முடிவுக்கான முக்கிய காரணம், வரவிருக்கும் கடுமையான CAFE 3 (Corporate Average Fuel Economy) விதிமுறைகளே ஆகும். இந்த விதிமுறைகள் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை காரணம் காட்டி, லேடர்-ஃப்ரேம் டீசல் எம்பிவி கார்களை குறைந்த மதிப்பீட்டு நிலையில் வைக்கின்றன.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற போட்டி நிறுவனங்களிடம் தற்போது இன்னோவா க்ரிஸ்டா பாணியிலான லேடர்-ஃப்ரேம் டீசல் எம்பிவி கார் மாடல்கள் இல்லை. அத்தகைய கார்களை அந்த நிறுவனங்கள் சில வருடங்களுக்கு முன்னரே நிறுத்திவிட்டன. எனினும், ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் ஸ்டாரியா (Staria) காரை பெரும் அளவிற்கு இந்தியாவிலேயே உற்பத்தி செய்து அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

toyota innova crysta mpv discontinuing

இது இன்னோவா க்ரிஸ்டா விட்டுச்செல்லும் வெற்றிடத்தை நிரப்பக்கூடும். டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே இன்னோவா ஹைகிராஸ் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா கார்களை மார்க்கெட்டில் வேறுப்படுத்தி விற்பனை செய்கிறது. இன்னோவா ஹைகிராஸ் காரை மோனோகாக் சேசிஸில் உருவாக்கப்படும் தனிநபர் பயன்பாட்டிற்கான ஸ்ட்ராங் ஹைபிரிட்-பெட்ரோல் காராகவும், இன்னோவா க்ரிஸ்டாவை அதிக மைலேஜ் எதிர்பார்க்கப்படும் டாக்சி உள்ளிட்ட கமர்ஷியல் தேவைகளுக்கான மாடலாகவும் வேறுபடுத்தி வைத்துள்ளது.

எதிர்காலத்தில், டொயோட்டா தனது இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் காரின் வேரியண்ட்களை அதிகரிக்கும். ஏனெனில், CAFE 3-இன் கடுமையான CO2 இலக்குகளை பூர்த்தி செய்ய உதவும் 'சூப்பர் கிரெடிட்ஸ்' பலன்களை ஹைபிரிட் வாகனங்கள் பெறுகின்றன. இந்தியாவின் CAFE விதிகளின் கீழ், ஒரு உற்பத்தி நிறுவனத்தின் காரின் சராசரி CO2 உமிழ்வு கணக்கிடப்படும் போது, அது ஸ்ட்ராங் ஹைபிரிட் காராக இருக்கும் பட்சத்தில் அதன் சராசரி CO2 உமிழ்வானது பாதியாக கணக்கிடப்படுகிறது.

toyota innova crysta mpv discontinuing

இதன் மூலமாக, டொயோட்டா நிறுவனம் விற்கும் ஒவ்வொரு இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் காரும் நிறுவனத்தின் சராசரி எரிபொருள் நுகர்வை இருமடங்கு குறைத்து, கனரக டீசல் எம்பிவி வாகனங்கள் மற்றும் எஸ்யூவி கார்களில் இருந்து வரும் அதிக CO2 உமிழ்வை சமன் செய்ய நேரடியாக உதவுகின்றன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Fortuner) டீசல் காரின் நிலை குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், 2029-ஆம் ஆண்டில் வெளிவரவிருக்கும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஃப்.ஜே (Land Cruiser FJ) காருக்கு டீசல் என்ஜின் ஆப்ஷன் இருக்காது. வருங்கால தயாரிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று டொயோட்டா கிரிலோஸ்கர் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிரீமியம் எம்பிவி கார்கள் பிரிவை வரையறுத்த ஒரு கார் என்றால், அது டொயோட்டா இன்னோவா என்றுதான் சொல்ல வேண்டும். டொயோட்டா குவாலிஸில் இருந்து பரிணமித்த டொயோட்டா இன்னோவா, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவின் பிரீமியம் எம்பிவி கார் மற்றும் பிரீமியம் டாக்ஸியாக செயல்பட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய கார் 2027 மார்ச் வரையில் விற்பனை செய்யப்பட உள்ளது இன்னோவா க்ரிஸ்டாவின் அனுபவத்தை இன்னும் சில காலத்திற்கு இந்தியர்கள் பெற வைக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 3, 2026, 5:00 [IST]
English summary
Toyota plan to discontinuing innova crysta mpv in india after 2027 march check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X