370 கிமீ ரேஞ்ச்... டாடா நெக்ஸான் EVக்கு போட்டியாக வரும் புதிய வின்ஃபாஸ்ட் கார்?

குறைந்த விலையில் அதிக ரேஞ்ச் வழங்கும் எலெக்ட்ரிக் எஸ்யூவிகளுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது புதிய VF5 எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் VF6, VF7 உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வரும் வின்ஃபாஸ்ட், தனது வாடிக்கையாளர் வட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் VF5 எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை இந்தியா கொண்டுவர தயாராகி வருகிறது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடன் கூடிய இந்த காரில் பெரிய பேட்டரி, வடிவமைப்பு மாற்றங்கள், மேம்படுத்தப்பட்ட உட்புற வசதிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதனால் இந்தியாவின் சிறிய எலெக்ட்ரிக் எஸ்யூவி சந்தையில் புதிய போட்டி உருவாக வாய்ப்புள்ளது.

Vinfast VF5 Facelift

புதிய வின்ஃபாஸ்ட் VF5 காரின் வெளிப்புற வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முந்தைய மாடலை விட நேர்த்தியான, உயரமான மற்றும் பெட்டி வடிவ தோற்றத்தை இந்த கார் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் புதிய எல்இடி ஹெட்லைட்டுகள், மாற்றியமைக்கப்பட்ட பம்பர், குரோம் அலங்காரங்கள் மற்றும் காற்று உள்ளே செல்லும் பகுதியானது புதிய வடிவமைப்புடன் இடம்பெற்றுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி 3,987 மிமீ நீளமும், 1,772 மிமீ அகலமும் மற்றும் 1,595 மிமீ உயரம் கொண்டதாக உள்ளது. இந்த கார் 2,513 மிமீ நீளம் வீல்பேஸ் கொண்டதாக இருக்கிறது. முந்தைய மாடலை ஒப்பிடும்போது நீளம், அகலம், உயரம் ஆகியவற்றிலும் அதிகரிக்கப்பட்டு இருப்பதால், காரின் தோற்றம் சற்று பெரியதாகவும் எஸ்யூவி தன்மையுடனும் இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

Also Read

பக்கவாட்டில் கருப்பு நிற பாடி கிளாடிங், புதிய 17 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட ஜன்னல் அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. பின்புறத்திலும் புதிய எல்இடி விளக்குகள், மாற்றியமைக்கப்பட்ட பம்பர் மற்றும் புதிய பேட்ஜிங் ஆகியவற்றை பார்க்க முடிகிறது. முந்தைய மாடலை விட புதிய VF5 கூடுதல் கம்பீரமான தோற்றத்தை பெற்றுள்ளது.

காரின் உட்புறத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முந்தைய மாடலில் இருந்த 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரைக்கு பதிலாக தற்போது 10 இன்ச் அளவிலான பெரிய தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு அமைப்பு எளிமையாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் இரட்டை வண்ண செயற்கை லெதர் இருக்கைகள் ஆகியவை புதிய உட்புறத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

Also Read

தனியாக வழங்கப்பட்ட டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே நீக்கப்பட்டு, ஓட்டுனருக்குத் தேவையான தகவல்கள் மையத் திரையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மேலும், பழைய ரோட்டரி கியர் தேர்வு அமைப்புக்கு பதிலாக ஸ்டீயரிங் வீலின் பின்னால் வலது புறத்தில் கியர் தேர்வு செய்யும் வசதி இடம்பெற்றுள்ளது. இதனால் சென்டர் கன்சோலில் வயர்லெஸ் சார்ஜிங், கப் ஹோல்டர்கள் மற்றும் கூடுதல் பொருட்களை வைக்கும் இடம் கிடைக்கிறது.

புதிய VF5 காரின் முக்கிய அப்டேட்டாக கூடுதல் திறன் வாய்ந்த பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பிரீமியம் பதிப்பில் 43kWh பேட்டரி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 370 கிமீ வரை பயணிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ரேஞ்ச் NEDC சோதனை முறையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், நடைமுறை பயன்பாட்டில் இதைவிட சற்று குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த காரில் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 99 எச்பி பவரையும் 135 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. சார்ஜிங் வசதியை பொறுத்தவரை 6.6kW ஏசி சார்ஜிங் மற்றும் 60kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நகரப் பயன்பாடு மட்டுமின்றி அவ்வப்போது வெளியூர் பயணங்களுக்கும் ஏற்ற எலெக்ட்ரிக் காராக VF5 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வின்ஃபாஸ்ட் VF5 எஸ்யூவியானது இந்தியாவில் டாடா நெக்ஸான் EV, டாடா பன்ச் EV மற்றும் மஹிந்திரா XUV 3XO EV உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அமையும். இந்தியாவில் இந்த காரின் விலை, பேட்டரி தேர்வுகள் மற்றும் அறிமுக தேதி குறித்து நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்த கார் இந்தியாவிற்கு வரும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் பொது பார்வைக்கு வரும் வாய்ப்பும் உள்ளது.

Article Published On: Wednesday, November 25, 2026, 9:34 [IST]
English summary
Vinfast vf5 facelift india launch timeline range battery features
மேலும்... #VinFast
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out