லேண்ட் ரோவர் டிஃபென்டரை காப்பியடித்ததாக சர்ச்சை: BYD Ti7 SUV-க்கு ஐரோப்பாவில் தடை!

சர்வதேச கார் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் சீன நிறுவனமான BYD-க்கு ஐரோப்பாவில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் புதிய BYD Ti7 எஸ்யூவியின் வடிவமைப்பு லேண்ட் ரோவர் டிஃபென்டரின் வடிவமைப்பை ஒத்திருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் அதன் விற்பனைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை கார் தயாரிப்பு நிறுவனங்களிடையே வடிவமைப்பு உரிமைகள் குறித்த முக்கிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் Ti7 என்ற புதிய எஸ்யூவியை தயாரித்து விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த எஸ்யூவியின் வடிவமைப்பு டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டிஃபென்டர் எஸ்யூவியின் டிசைன் ஒத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

Defender Vs BYD Ti7

மேலும், தனது டிஃபென்டர் காரின் வடிவமைப்புக்கு ஐரோப்பாவில் சட்டப்பூர்வ உரிமை இருப்பதாகக் கூறிய ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம், BYD Ti7 காரின் வெளிப்புற வடிவமைப்பு தங்களுடைய வடிவமைப்புடன் ஒற்றுமை கொண்டிருப்பதாக நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்தப் புகாரை விசாரித்த நெதர்லாந்து நீதிமன்றம் BYD Ti7-க்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

BYD Ti7 காரின் வெளிப்புற தோற்றத்தில் டிஃபென்டருடன் ஒப்பிடக்கூடிய பல அம்சங்கள் இருப்பதாக இந்த வழக்கில் வாதிடப்பட்டுள்ளது. உயரமான SUV அமைப்பு, தட்டையான மேற்கூரை, சதுர வடிவ வீல் ஆர்ச்கள், நேரான பாடி வடிவமைப்பு மற்றும் பின்புற அமைப்பு போன்றவை இரண்டு கார்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. வாகனத்தின் தனிப்பட்ட அம்சங்களை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தோற்றத்தையும் நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.

Also Read

JLR நிறுவனம் தனது டிஃபென்டர் வடிவமைப்புக்கான உரிமையை முன்வைத்து இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது. வடிவமைப்பு உரிமைகள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருப்பதால், அதனை ஒத்த தோற்றத்தில் மற்றொரு வாகனத்தை வணிக ரீதியாக அறிமுகப்படுத்துவது உரிமை மீறலாக அமையும் என அந்நிறுவனம் வாதிட்டுள்ளது. இதன் அடிப்படையில் BYD Ti7 காரின் விற்பனை நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நீதிமன்றத்தை அணுகியது.

நீதிமன்ற உத்தரவின்படி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் BYD Ti7 காரை இறக்குமதி செய்வது, விற்பனை செய்வது, விளம்பரப்படுத்துவது, வினியோகிப்பது மற்றும் வணிக நோக்கில் காட்சிப்படுத்துவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த BYD நிறுவனத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் நாளொன்றுக்கு 1 லட்சம் யூரோ அல்லது ஒவ்வொரு விதிமீறலுக்கும் 25,000 யூரோ அபராதம் விதிக்கப்படலாம். அபராதத்தின் அதிகபட்ச வரம்பு 1 கோடி யூரோ வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Also Read

இந்த வழக்கு ஐரோப்பிய சந்தையில் BYD-யின் விரிவாக்க முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஹங்கேரியில் தனது வாகன உற்பத்தியை விரிவுபடுத்தி வரும் BYD, ஐரோப்பாவிலேயே தயாரித்து விற்பனை செய்வதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ஆனால், Ti7 தொடர்பான இந்த நீதிமன்ற உத்தரவு அந்த மாடலின் சந்தை அறிமுகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.

இந்தத் தடை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், பிரிட்டனில் BYD Ti7 விற்பனை திட்டம் இதனால் நேரடியாக பாதிக்கப்படாது என கூறப்படுகிறது. அங்கு இந்த SUV-யை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. வெவ்வேறு நாடுகளில் வடிவமைப்பு உரிமைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் தனித்தனியாக இருப்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தில் விதிக்கப்பட்ட தடையை பிரிட்டனில் அமல்படுத்த முடியாது.

BYD நிறுவனம் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்கவில்லை. Ti7 காரின் வடிவமைப்பு தங்களது சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்டதாகவும், JLR நிறுவனத்தின் வடிவமைப்பு உரிமையை மீறவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் BYD திட்டமிட்டுள்ளது. எனவே, இந்த வழக்கின் இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை.

இந்த விவகாரம் கார் நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய பாடமாக அமைந்துள்ளது. புதிய மாடல்களை உருவாக்கும்போது தொழில்நுட்பம் மற்றும் சந்தை தேவைகளுடன், ஏற்கனவே உள்ள வாகனங்களின் வடிவமைப்பு உரிமைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். BYD Ti7 தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பு, எதிர்காலத்தில் உலகளாவிய வாகன வடிவமைப்பு போட்டியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

Article Published On: Sunday, November 22, 2026, 15:32 [IST]
English summary
Byd ti7 europe sales ban land rover defender design rights
மேலும்... #byd #land rover
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out