ஹோண்டா ஆல்பா எலெக்ட்ரிக் எஸ்யூவி: அதிகாரப்பூர்வ ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு!

இந்தியாவில் மின்சார கார் சந்தையில் தனது அடுத்தகட்ட நகர்வைத் தீவிரப்படுத்தி வரும் ஹோண்டா, புதிய ஆல்பா (Honda ALPHA) எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வடிவமைப்பு குறித்த ஸ்கெட்ச் படங்களை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் கார், உள்நாட்டு சந்தையை மட்டுமின்றி சர்வதேச சந்தைகளையும் இலக்காகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஹோண்டா ஆல்பாவின் முன்பகுதி வழக்கமான எஸ்யூவி வடிவமைப்பிலிருந்து மாறுபட்டு, அகலமான தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் புதிய ஹோண்டா சின்னம் இடம்பெறும் கருப்பு நிற பேனல், அதனைச் சுற்றி நீளமாக அமைந்துள்ள ஒளிரும் விளக்குப் பட்டை ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன. கீழ்புற பம்பரும் தனித்துவமான வடிவமைப்பைப் பெற்றுள்ளது.

Honda Alpha EV

இந்த காரின் பக்கவாட்டு தோற்றத்தில் உயரமான மேற்கூரை, பெரிய சக்கர வளைவுகள் மற்றும் தடிமனான பாடி கிளாடிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பின்புறத்தை நோக்கிச் செல்லும்போது ஜன்னல் அமைப்பு சற்றே மாறுபட்ட கோணத்தைப் பெறுகிறது. பெரிய அலாய் வீல்கள், மறைக்கப்பட்ட முன்பக்க கதவு கைப்பிடிகள் ஆகியவை நவீன தோற்றத்தை மேலும் மேம்படுத்துகின்றன.

ஹோண்டா ஆல்பாவின் உட்புறத்தில் இரண்டு திரைகள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டின் மையத்தில் பெரிய தொடுதிரை மற்றும் ஓட்டுனருக்கு முன்னால் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் திரை ஆகியவை உள்ளன. ஸ்டியரிங் வீல் இரண்டு ஸ்போக் வடிவமைப்புடன் இருக்கிறது. புதிய ஹோண்டா சின்னமும் அதில் இடம்பெற்றுள்ளது.

Also Read

மையத் தொடுதிரையில் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதிகளுக்கான அமைப்புகள் இடம்பெறுவது ஸ்கெட்ச் படங்களில் தெரிய வருகிறது. ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. திரைக்குக் கீழே தனியாக ஏர் கண்டிஷன் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

டேஷ்போர்டின் அகலம் முழுவதும் நீளும் நீல நிற ஆம்பியன்ட் லைட்டிங், கதவுகளிலும் தொடரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மைய கன்சோல் உயரமான அமைப்புடன் காணப்படுகிறது. அதில் பொருட்களை வைப்பதற்கான இட வசதி, சார்ஜிங் வசதிகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் இடம்பெறுகின்றன. பின்பக்க பயணிகளுக்கான ஏசி வென்ட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

Honda Alpha EV Interior

இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியில் ஐந்து பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பு வழங்கப்படுகிறது. வெளிர் நிற இருக்கைகள், பெரிய ஜன்னல்கள் மற்றும் அகலமான கேபின் அமைப்பு ஆகியவை பயணிகளுக்கு வசதியான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்புற இருக்கையில் மூன்று ஹெட்ரெஸ்ட்டுகள் மற்றும் கப் ஹோல்டர்களுடன் கூடிய மடிக்கக்கூடிய மைய ஆர்ம்ரெஸ்ட் இடம்பெறுகிறது.

Also Read

ஹோண்டா ஆல்பா இந்தியாவில் தயாரிக்கப்படும் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆக இருக்கும். ராஜஸ்தானின் தபுகராவில் உள்ள தொழிற்சாலையில் இதன் உற்பத்தி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தியாவை முக்கிய உற்பத்தி மையமாகப் பயன்படுத்தி எதிர்காலத்தில் சர்வதேச சந்தைகளுக்கும் இந்த காரை கொண்டு செல்ல ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தைக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

வரும் டிசம்பர் 2ம் தேதி இந்தியாவில் வைத்து ஹோண்டா ஆல்பா எலெக்ட்ரிக் எஸ்யூவி உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அப்போது காரின் பேட்டரி திறன், மின்சார மோட்டார் விவரங்கள், ரேஞ்ச், சார்ஜிங் வசதி, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் விற்பனை தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Article Published On: Wednesday, November 25, 2026, 14:37 [IST]
English summary
Honda alpha electric suv design sketches exterior interior india
மேலும்... #honda cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out