டிசம்பர் 1 முதல் ஹூண்டாய் கார்களின் விலை உயர்கிறது

இந்தியாவில் கார் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் கூடுதல் செலவு ஏற்படவுள்ளது. பல முன்ணணி நிறுவனங்கள் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனமும், தனது குறிப்பிட்ட கார் மாடல்கள் மற்றும் வேரியண்ட்டுகளின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த புதிய விலை மாற்றம் வரும் டிசம்பர் 1ந் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

இந்த விலை உயர்வு அனைத்து கார்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. தேர்ந்தெடுக்கப்பட்ட கார் மாடல்கள் மற்றும் வேரியண்ட்டுகளின் விலை அதிகபட்சமாக ரூ.8,000 வரை அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் தற்போது ஹூண்டாய் கார் வாங்கத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள், புதிய விலை அமலுக்கு வருவதற்கு முன்பாக முன்பதிவு செய்வது குறித்து பரிசீலிப்பது அவசியமாகிறது.

Hyundai Bayon

கார் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன நிறுவனங்களுக்கு சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக இரும்பு, செம்பு உள்ளிட்ட உலோகங்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கார்களை தயாரித்து விற்பனை செய்வதற்கான மொத்த செலவுகளும் அதிகரிக்கின்றன.

மேலும், உலகளாவிய வினியோகச் சங்கிலியில் ஏற்படும் பாதிப்புகளும் வாகன உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகின்றன. மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழல் காரணமாக வினியோகம் மற்றும் மூலப்பொருட்களின் சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இத்தகைய சூழலில் உற்பத்திச் செலவுகளை சமாளிக்க விலை உயர்வு அவசியம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Also Read

கார் தயாரிப்புக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகளை முழுமையான சுமையையும் வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்லாமல், உள்நாட்டு செயல்திறனை மேம்படுத்தி வருவதுடன், செலவு குறைப்பு நடவடிக்கைகள் மூலம் ஒரு பகுதியை தானே சமாளித்து வருவதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்ட தற்போது குறிப்பிட்ட கார்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு எந்தெந்த கார் மாடல்களுக்கு பொருந்தும், அவற்றின் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளுக்கு எவ்வளவு தொகை அதிகரிக்கப்படும் என்பது குறித்த முழுமையான பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே, ஹூண்டாய் கார் வாங்க விரும்புபவர்கள் டீலர்களை அணுகி தாங்கள் தேர்வு செய்யும் காரின் தற்போதைய விலை மற்றும் டிசம்பர் மாத விலை மாற்றம் குறித்து தெரிந்துகொள்வது நல்லது.

Also Read

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியாஸ், எக்ஸ்டர், ஐ20, ஆரா, வென்யூ, கிரெட்டா, அல்கஸார் உள்ளிட்ட பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த விலை உயர்வு குறிப்பிட்ட மாடல்கள் மற்றும் வேரியண்ட்டுகளுக்கு மட்டுமே பொருந்துவதால், நிறுவனத்தின் அனைத்து கார்களுக்கும் விலை அதிகரிக்குமா என்பது தற்போது தெளிவாகவில்லை.

டிசம்பர் 1 முதல் புதிய விலைகள் அமலுக்கு வருவதால், ஹூண்டாய் கார் வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் நவம்பர் மாதத்திற்குள் முன்பதிவு செய்வதன் மூலம் தற்போதைய விலையைப் பெற முடியுமா என்பதை டீலரிடம் உறுதிப்படுத்தி கொள்வது அவசியம்.

Article Published On: Thursday, November 26, 2026, 10:38 [IST]
English summary
Hyundai car price hike december 2026 up to rs 8000
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out