இன்னோவா கிரிஸ்ட்டா மார்க்கெட்டை பிடிக்க 7 சீட்டர் டீசல் காரை களமிறக்கும் ஹூண்டாய்!

இந்திய வாடிக்கையாளர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா கார் விரைவில் சந்தையில் இருந்து விடைபெற இருக்கிறது. புதிய CAFE 3 மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, இன்னோவா கிரிஸ்ட்டா காரை விலக்கிக் கொள்ள டொயோட்டா முடிவு செய்துள்ளது. குறிப்பாக, டீசல் கார் பிரியர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

இந்த சூழலில், இன்னோவா கிரிஸ்ட்டா கார் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய டீசல் எம்பிவி காரை களமிறக்குவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இன்னோவா கிரிஸ்ட்டா காரின் அளவுக்கு இடவசதி, எஞ்சின் தேர்வுகளுடன் இந்த காரை உருவாக்கும் முயற்சிகளில் ஹூண்டாய் ஈடுபட்டுள்ளது.

Hyundai MPV Render

(Representational Purpose Image)

இந்த கார் Ki1i என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில் ஒரு புதிய எம்பிவி காரை இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்திருந்தது.இந்த சூழலில்தான் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் குறித்த தகவல் தற்போது வெளியாகி வாடிக்கையாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் பிரியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் மாருதி எர்டிகா காரைவிட மேலான ரகத்தில் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும். ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி கார் உருவாக்கப்பட்ட அதே N3 என்ற கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையை பயன்படுத்தி இந்த புதிய எம்பிவி கார் உருவாக்கப்படுகிறது.

Also Read

இதனால், தேவைப்படும் அளவுக்கு நீளம், அகலம் மற்றும் இடவசதியை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்த காரில் பனோரமிக் சன்ரூஃப், இரண்டு திரைகளுடன் கூடிய டேஷ்போர்டு அமைப்பு, லெவல் 2 அடாஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய எம்பிவி காருக்கு உரிய தோரணை, நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை இந்த கார் கவரும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எம்பிவி காரில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படும். இதில், தற்போது ஹூண்டாய் கைவசம் உள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 117 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. வென்யூ, கிரெட்டா மற்றும் அல்கஸார் உள்ளிட்ட மாடல்களில் இதே டீசல் எஞ்சின்தான் உயிர்கொடுத்து வருகிறது.

Also Read

இன்னோவா கிரிஸ்ட்டா கார் அளவுக்கு சொகுசு வசதிகளை இந்த காரில் எதிர்பார்க்க முடியாது என்றாலும், டீசல் எஞ்சின் தேர்வுடன் பெரிய 7 சீட்டர் காரை வாங்குவோருக்கு ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் மாற்றுத் தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஏற்கனவே கியா கேரன்ஸ், கேரன்ஸ் கிளாவிஸ் கார்களில் டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. ஆனாலும், ஹூண்டாய் பிராண்டில் வரும்போது கூடுதல் மதிப்பும், வாடிக்கையாளர்களுக்கு தேர்வும் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும், தற்போது வந்துள்ள இன்னோவா ஹைகிராஸ் காருக்கும் இந்த போட்டியாக இருக்கும். இந்த கார் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இந்த கார் வருகை குறித்த தகவல்கள் ஆட்டோமொபைல் வட்டாரங்களில் பரபரக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த கார் சந்தைக்கு கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Autocarindia

Article Published On: Sunday, November 29, 2026, 14:23 [IST]
English summary
Hyundai innova hycross rival mpv ki1i india launch
மேலும்... #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out