பட்ஜெட் விலையில் வரும் புதிய ஹுண்டாய் EV கார் அறிமுக தேதி வெளியானது!

ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவின் மின்சார கார் சந்தையில் தனது அடுத்த முக்கிய தயாரிப்பை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஹுண்டாய் ஐயோனிக் பி (Hyundai Ioniq P EV) என அழைக்கப்படும் புதிய மின்சார கார் வரும் ஜனவரி மாதம் 16ம் தேதி அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய சந்தையை முக்கியமாக வைத்து உருவாக்கப்படும் புத்தம் புதிய மாடலாக இருக்கும் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி உள்ளது.

இந்த புதிய மின்சார கார் ஹுண்டாயின் தற்போதைய EV வரிசையில் குறைந்த விலையில் கிடைக்கும் மாடலாக நிலைநிறுத்தப்படும். குறிப்பாக, முதல் முறையாக மின்சார காரை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களையும், நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறிய ரக எஸ்யூவி தேடும் குடும்பங்களையும் இலக்காகக் கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Hyundai EV

(Representational Purpose Image)

ஐயோனிக் பி மாடல் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் கார்களின் அடிப்படையில் உருவாக்கப்படாமல், இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் மின்சார காராக இருக்கும். சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹுண்டாய் தொழிற்சாலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்படும். இதனால், விலை மிக சவாலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த கார் தற்போது HE1i என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. ஹுண்டாயின் E-GMP (K) மின்சார வாகன தளத்தை பயன்படுத்தும் இந்த மாடல், சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ஹுண்டாய் இன்ஸ்டர் (Inster) மின்சார காருடன் தொழில்நுட்ப அம்சங்களை பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், முற்றிலும் இந்திய சூழல்கள், தேவைகளை மனதில் வைத்து புதிய மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

Also Read

புதிய ஐயோனிக் பி மின்சார காரில் ஸ்டாண்டர்டு ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் என இரண்டு பேட்டரி தேர்வுகள் வழங்கப்படும். இதன் மூலம் தினசரி அலுவலகப் பயணம், நகரப் போக்குவரத்து மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான மாடலை தேர்வு செய்ய முடியும்.

ஆரம்பத்தில் இந்த காருக்கான பேட்டரி செல்கள் சீனாவின் ஸ்வோல்ட் (Svolt) நிறுவனத்திடமிருந்து பெறப்பட உள்ளது. உள்ளூரில் பேட்டரி தயாரிப்பை மேற்கொள்ள ஹுண்டாய் திட்டமிட்டிருந்தாலும், அதற்கான வினியோகத் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் எக்ஸைடு (Exide) நிறுவனத்தின் இந்தியாவில் தயாரிக்கப்படும் பேட்டரி செல்களை பயன்படுத்தும் திட்டமும் ஹூண்டாய் வசம் உள்ளது.

Also Read

சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், இந்த மின்சார எஸ்யூவி நிமிர்ந்த மற்றும் பாக்ஸி வடிவமைப்பைக் கொண்டிருக்கலாம். உயரமான முன்பகுதி, பெரிய கண்ணாடி அமைப்பு, தனித்துவமான எல்இடி விளக்குகள் மற்றும் எஸ்யூவி தோற்றம் ஆகியவை இதன் முக்கிய வடிவமைப்பு அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரின் உட்புறத்தில் புதிய தலைமுறை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், லெவல் 2 அடாஸ் (ADAS) எனப்படும் மேம்பட்ட ஓட்டுனர் உதவி தொழில்நுட்பமும் இடம்பெற உள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் சிறந்த தேர்வாக இருக்கும்.

ஹுண்டாய் ஐயோனிக் பி இந்தியாவில் அறிமுகமாகும்போது, அந்நிறுவனத்தின் குறைந்த விலை மின்சார காராக நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இதன் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மின்சார எஸ்யூவி இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி, மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO EV மற்றும் கியா சைரோஸ் இவி போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: Autocarindia

Article Published On: Thursday, November 26, 2026, 17:15 [IST]
English summary
Hyundai ioniq p ev india launch january 16 battery range price features
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out