டொயோட்டா ஹைகிராஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மாடல்: எவ்வளவு எத்தனால் கலந்தாலும் கவலையில்லை?

வாடிக்கையாளர்களிடம் அதிக மதிப்பை பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி கார் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் எரிபொருள் தொழில்நுட்ப சிறப்புடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலில் மிக முக்கிய ஹைலைட்டான அம்சமாக, ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் எரிபொருள் தொழில்நுட்பம் குறிப்பிடப்பட வேண்டியதாக உள்ளது. இந்த தொழில்நுட்பம் நிச்சயமாக வாடிக்கையாளர்களுக்கு தற்போதுள்ள சூழலில் வரப்பிரசாதமாக அமையும். மேலும், கார் வாங்கிய பிறகு அரசாங்கம் அதிக எத்தனால் கலந்த எரிபொருளை கொண்டு வந்தாலும் கவலை கொள்வதற்கு அவசியம் இல்லை என்பது இந்த காரின் மதிப்பை உயர்த்தும் மிக முக்கிய விஷயமாக இருக்கும்.

காரில் எவ்வளவு வசதிகள், சொகுசு அம்சங்கள் இருந்தாலும் தற்போது உள்ள சூழலில் எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் கார் உரிமையாளர்கள் எஞ்சின் தொடர்பான பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர். மைலேஜ் குறைவு, எஞ்சின் பிரச்னைகள் குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. ஆனால், புதிய இன்னோவா ஹைகிராஸ் காரின் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மாடலானது இந்த எத்தனால் எரிபொருள் கலப்பு விஷயத்தில் நிச்சயமாக வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியை தரும் என்று ஆணித்தரமாக கூறலாம்.

Toyota Hycross Facelift

ஆம், புதிய ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மாடலானது தற்போது பரவலாக விற்பனையில் உள்ள 20 சதவீதம் எத்தனாலும், 80 சதவீதம் பெட்ரோலும் கலந்த E20 பெட்ரோல் எரிபொருள் முதல் 85 சதவீதம் வரை எத்தனாலும், 15 சதவீதம் வரை பெட்ரோலும் கலந்த எரிபொருள் கலவையில் இயங்கும் வகையில் இதன் எஞ்சின், எரிபொருள் அமைப்பு, உதிரிபாகங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், எத்தனால் கலவை இத்தனை சதவீதம் இருந்தால்தான் இயங்கும் என்று இல்லாமல் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் விகிதம் 20%, 33%, 58%, 65%, 85% என எத்தனை சதவீதமாக இருந்தாலும் இந்த எஞ்சின் அதற்கு தக்கவாறு சென்சார் மூலமாக எத்தனால் கலப்பு விகிதத்தை தெரிந்து கொண்டு எஞ்சினுக்கு எரிபொருள் செலுத்தும் விதத்தை மாற்றி தங்கு தடையில்லாமல் எஞ்சினை இயக்கும் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. எனவே, எத்தனால் கலப்பு 85 சதவீதம் வரை அரசாங்கம் அனுமதித்தால் கூட கவலை கொள்ள தேவையில்லை.

Toyota Hycross Facelift

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் எஞ்சின் E85 எரிபொருள் வரை எஞ்சின் சப்போர்ட் செய்யும் தொழில்நுட்பம் மட்டுமின்றி, ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளது. அதாவது, இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் பேட்டரியில் இயங்கும் மின்சார மோட்டாரும் காருக்கு தேவையான கூடுதல் சக்தியை வழங்கும். இதனால், குறிப்பிட்ட சூழல்களில் பெட்ரோல் எஞ்சின் இயக்கம் அல்லது சுமை குறைக்கப்படும் என்பதால் மிகச் சிறப்பான மைலேஜை வழங்கும். இந்த பிரம்மாண்ட 7 சீட்டர் கார் ஹைப்ரிட் தொழில்நுட்ப மைலேஜ் கணக்கீடுகளின்படி, முந்தைய ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 22.16 கிமீ தரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், புதிய மாடல் லிட்டருக்கு 22.58 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.

தற்போது விற்பனையில் உள்ள E20 என்ற எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கினாலும், முந்தைய ஹைப்ரிட் மாடலைவிட சற்று கூடுதல் மைலேஜ் வழங்கும் வகையில் இந்த ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை சிறப்பாக ஒருங்கிணைதுள்ளது டொயோட்டா. இதுவும் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை தரும் விஷயமாக இருக்கிறது. ஏனெனில், எத்தனால் அளவு காரணமாக பொதுவாக மைலேஜ் குறையும். ஆனால், இந்த தனது சிறப்பான தொழில்நுட்பத்தின் மூலமாக சற்று கூடுதல் மைலேஜ், அதாவது பழைய பெட்ரோல் ஹைப்ரிட் மாடலைவிட மைலேஜ் குறையாத வகையிலும், சற்றே கூடுதல் மைலேஜை வழங்கும் வகையிலும் கொடுத்திருப்பது மற்றொரு முக்கிய சிறப்பாக கூறலாம்.

Also Read

அதேபோன்று, டொயோட்டா ஹைகிராஸ் காரின் முந்தைய மாடலில் இருந்த இதே பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 184 எச்பி பவரை வழங்கிய நிலையில், தற்போது 197 எச்பி பவரை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, எத்தனாலில் எரிபொருள் செறிவு குறைவாக இருந்தாலும், அதிக செயல்திறனை வழங்கும் வகையில் தொழில்நுட்பத்தில் அசத்தி இருக்கிறது டொயோட்டா.

இந்த ஹைப்ரிட் மாடலில் இடம்பெற்றுள்ள மின் மோட்டாருக்கு சக்தியை வழங்கும் பேட்டரியை தனியாக சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. ரீஜெனரேட்டிங் பிரேக்கிங் தொழில்நுட்பத்தின் மூலமாக பேட்டரி சார்ஜ் செய்யும் திறன் உள்ளது. மேலும், தற்போதைய புதிய மாடலில் லித்தியம் அயான் பேட்டரியும் கொடுக்கப்பட்டு இருப்பது மற்றொரு முக்கிய தொழில்நுட்ப ரீதியிலான அப்டேட்டாக கூற முடியும்.

Also Read

எத்தனால் விகிதம் அதிகரிக்கும்போது நீண்ட நேரம் அணைந்த நிலையில் இருக்கும் எஞ்சினை ஸ்டார்ட் செய்யும்போது பிரச்னை ஏற்படலாம். ஆனால், அதனையும் சிறப்பாக கையாண்டு இந்த எரிபொருள் சிஸ்டத்தை டொயோட்டா இந்த காரில் வழங்கியுள்ளது. எத்தனால் கலப்புக்கு தக்கவாறு அதிக அழுத்தத்தில் கூடுதல் எரிபொருளை செலுத்தும் வண்ணம் கட்டுப்பாட்டு தொழில்நுட்ப அமைப்புகளும் இந்த காரில் இடம்பெற்றுள்ளது.

சரி, இவ்வளவு தொழில்நுட்ப சிறப்புகளுடன் வந்துள்ள இந்த புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் விலை நிர்ணயத்திலும் சிறப்பான சம்பவத்தை செய்துள்ளது டொயோட்டா. அதாவது, இந்த ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் தேர்வு கொண்ட வேரியண்ட்டுகளை மிக சரியான விலையிலும், ஏற்கனவே இருந்த ஹைப்ரிட் மாடலைவிட குறைவான விலையில் வாடிக்கையாளர்கள் பெறுவதற்கும் GX என்ற விலை குறைவான வேரியண்ட்டையும் அறிமுகம் செய்து டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கும் கனவில் இருப்பவர்களுக்கு நெஞ்சில் பாலை வார்த்துள்ளது டொயோட்டா.

தற்போது மாருதி வேகன் ஆர் கார் மட்டும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் தொழில்நுட்பத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த சில மாதங்களில் இதுவரை வெறும் 23 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது வாஹன் இணையதளத்தின் மூலமாக தெரிய வருகிறது. ஆனால், இந்த புதிய ஹைகிராஸ் ஃபிளெக்ஸ் ஃப்யூவல் கார் மாடலானது ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் கார்களின் விற்பனை வரலாற்றில் புதிய அத்யாயத்தை எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விலையும் மிக சரியாக இருப்பதால் அதிக வாடிக்கையாளர் வட்டத்தை பெறுவதற்கான வாய்ப்பையும் டொயோட்டா பெற்றுள்ளது.

Article Published On: Sunday, November 29, 2026, 11:44 [IST]
English summary
Toyota innova hycross flex fuel hybrid e20 e85 technology explained
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out