விலை குறைவான 7 சீட்டர் எஸ்யூவியின் விலையையும் உயர்த்திய மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் எஸ்யூவிக்களை ஒவ்வொன்றாக விலை உயர்த்தி வருகிறது. இதுவரை XUV 3XO, தார், XUV 7XO மற்றும் பொலேரோ நியோ பிளஸ் ஆகிய எஸ்யூவிக்கள் எவ்வளவு விலை உயர்த்தப்பட்டன என்பதைப் பார்த்தோம். அதனைத் தொடர்ந்து தற்போது பொலேயோ நியோ எஸ்யூவியின் விலையையும் மஹிந்திரா உயர்த்தியிருக்கிறது.

ரக்கடான லுக் கொண்ட கிளாஸியான பொலேரோ எஸ்யூவியின் மாடர்ன் வெர்ஷனாக இந்த பொலேரோ நியோ எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 9 சீட்டரான பொலேரோ நியே பிளஸ்ஸை விட சற்று சிறியகா 4 மீ நீளத்துடனேயே இந்த பொலேரோ நியோ எஸ்யூவி இருக்கும். சப்-காம்பேக்ட் அளவிலேயே இருந்தாலும் இது ஒரு 7 சீட்டர் எஸ்யூவி என்பது குறிப்பிடத்தக்கது.

Mahindra Bolero Neo

பொலேரோவைப் போலவே இந்த பொலேரோ நியோ எஸ்யூவியிலும் முன்பக்கம் இரண்டு கேப்டன் சீட்கள், இரண்டாம் வரிசையில் மூன்று பேர் அமரும் வகையிலான பென்ச் சீட்களுடன், பின்னால் இரண்டு பக்கமும் இரண்டு ஜம்ப் சீட்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இவை மிகவும் சொகுசாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் 7 பேர் பயணம் செய்ய போதுமான அளவில் மட்டும் இருக்கும் என்று கூறலாம்.

எவ்வளவு விலை உயர்த்தப்பட்டிருக்கிறது?

இப்போது இந்த 7 சீட்டர் சப்-காம்பேக்ட் எஸ்யூவியின் விலையை 14,500 ரூபாய் முதல் 30,500 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது மஹிந்திரா. N4, N8, N10(R), N10 OPT மற்றும் N11 என ஐந்து வேரியன்ட்களாக இந்த பொலேரோ நியோ எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அடிப்படையான N4 வேரியன்டே குறைந்தபட்சமாக 14,500 ரூபாய் வரையிலான விலை உயர்வைச் சந்தித்திருக்கிறது.

Mahindra Bolero Neo

தொடர்ந்து N8 வேரியன்டின் விலை 19,000 ரூபாய் வரையிலும், N10 வேரியன்ட்களின் விலை 29,500 வரையிலும் உயர்த்தப்பட்டிருக்கிறது. டாப் எண்டான N11 வேரியன்டின் விலையே அதிகபட்சமாக 30,500 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து இனி இந்த 7 சீட்டர் எஸ்யூவியை 8.99 லட்சம் ரூபாய் முதல் 10.30 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யவுள்ளது மஹிந்திரா.

இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்:

இந்தியாவின் இரண்டாவது விலை குறைவான 7 சீட்டர் எஸ்யூவியாக இந்த பொலேரோ நியோவை நாம் கூறலாம். முதலிடத்தில் பொலேரோவே இருக்கிறது. மஹிந்திராவின் மற்ற பொலேரோ எஸ்யூவிக்களைப் போலவே இந்தக் காரிலும் ஒரேயொரு டீசல் இன்ஜின் தேர்வு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே. ஆட்டோமேட்டிக் கிடையாது. ஐந்து வேரியன்ட்கிலும் ஒரே இன்ஜின் மற்றும் ஒரே கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே. வேறு ஆப்ஷன்கள் கிடையாது.

இந்த பொலேரோ நியோவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜினானது 100 hp பவர் மற்றும் 260 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினானது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஸ்கார்ப்பியோ கிளாஸிக்குக் கீழாக மஹிந்திராவின் விலை குறைவான லேடார் ஃபிரேம் சேஸி கொண்ட எஸ்யூவிக்களில் ஒன்றாக இந்த பொலேரோ நியோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிராக்டிகலான பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் 10 லட்சம் ரூபாய்க்கும் கீழான விலையில் ஒரு எஸ்யூவி வேண்டும் என்றால் இந்த பொலேரோ நியோ நல்ல சாய்ஸாகவே இருக்கும். இந்த விலை மாற்றத்துடன், மாருதி எர்டிகா எம்பிவியை விட சற்று விலை கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது பொலேரோ நியோ எஸ்யூவி. எனினும் குறைவான விலை கொண்ட 7 சீட்டர் எஸ்யூவி என்றால் இது தான் சிறந்த சாய்ஸ்.

Article Published On: Thursday, July 16, 2026, 11:51 [IST]
English summary
Mahindra bolero neo low price 7 seater suv price hiked in india
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out