7 சீட்டர் எஸ்யூவியின் விலையை உயர்த்தியது மஹிந்திரா

இந்தியாவில் மஹிந்திரா விற்பனை செய்து வரும் 7 சீட்டர் எஸ்யூவியான XUV 7XO-வின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை மாதத் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் எஸ்யூவிக்களின் விலையை உயர்த்தி வருகிறது மஹிந்திரா. அந்த வரிசையில் தற்போது XUV 7XO காரின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. முன்னதாக கடந்த சில நாட்களில் பொலேரோ நியோ பிளஸ், தார் மற்றும் XUV 3XO உள்ளிட்ட எஸ்யூவிக்களின் விலையை அந்நிறுவனம் உயர்த்தியிருந்தது.

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் 7 சீட்டர் எஸ்யூவிக்களில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது XUV 7XO. இந்தாண்டு தொடக்கத்தில் தான் XUV 700 எஸ்யூவியை அப்டேட் செய்து XUV 7XO-வாக மாற்றியது மஹிந்திரா. அந்த அப்டேட்டிற்குப் பின்பு இந்த எஸ்யூவியின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த எஸ்யூவியின் விற்பனையை உயர்த்தியுள்ளது மஹிந்திரா.

Mahindra XUV 7XO

ப்ரீமியமான எஸ்யூவி என்பதால், மஹிந்திராவின் மற்ற கார்களை விட இந்த 7 சீட்டர் காரின் விலை கொஞ்சம் அதிமாகவே உயர்ந்திருக்கிறது. முன்பை விட 27,000 ரூபாய் முதல் 88,000 ரூபாய் வரை கூடுதல் விலையில் இனி இந்த எஸ்யூவியை நாம் வாங்கலாம். அந்த வகையில் விலை உயர்விற்குப் பின்பு இந்தக் கார் 13.99 லட்சம் ரூபாய் முதல் 25.79 லட்சம் ரூபாய் வரையிலான விலையை தற்போது கொண்டிருக்கிறது.

வேரியன்டிற்கு ஏற்ப விலை உயர்விலும் மாற்றம் இருக்கிறது. இந்த ப்ரீமியம் எஸ்யூவியை AX, AX3, AX5, AX7, AX7T மற்றும் AX7L என ஆறு வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது மஹிந்திரா. விலை உயர்த்தப்பட்டிருப்பதைத் தவிர்த்து இந்தக் காரில் வேறு எந்த மாற்றமோ, மேம்பாடுகளோ செய்யப்படவில்லை.

Mahindra XUV 7XO

இந்த 7 சீட்டர் எஸ்யூவியில் இரண்டு இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஒன்று 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், மற்றொன்று 2.2 லிட்டர் டீசல். இதில் பெட்ரோல் இன்ஜினானது 197 hp பவர் மற்றும் 380 Nm டார்க்கையும், டீசல் இன்ஜினானது 182 hp பவர் மற்றும் 450 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களுடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய 7XO வேரியன்ட்களில் அடிப்படை வேரியன்டை மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே நாம் வாங்க முடியும். டாப் எண்டான AX7T மற்றும் AX7L ஆகிய வேரியன்ட்களை 7 சீட்டராக மட்டுமின்றி, 6 சீட்டர் வடிவிலும் நாம் பெறலாம். 6 சீட்டர் என்றால் இரண்டாம் வரிசையில் மூன்று பேர் அமரும் வகையிலான பென்ச் சீட்டுக்குப் பதிலாக இரண்டு பேர் அமரும் வகையில் இரண்டு கேப்டன் சீட்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

தற்போது இந்தியாவில் 4.5 மீ முதல் 4.8 மீ உள்ளான எஸ்யூவிக்களில் அதிகம் விற்பனை செய்யப்படும் இரண்டாவது எஸ்யூவியாக இந்த மஹிந்திரா XUV 7XO உள்ளது. அப்டேட் செய்யப்பட்டதில் இருந்து ஒவ்வொரு மாதமும் 10,000 யூனிட்டுகளுக்கு நிகராக இந்தக் கார் விற்பனையாகி வருகிறது. முதல் இடத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல்வேறு காரணங்களினால் இந்த ஜூலை மாதம் இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் மஹிந்திராவும் தாங்கள் விற்பனை செய்து வரும் எஸ்யூவிக்களின் விலையை உயர்த்தி வருகிறது. மேலே கூறியது போல 7XO-வின் விலையை சற்று அதிகமாவே மஹிந்திரா உயர்த்தியுள்ளது. XUV 3XO-வின் விலையை 30,000 வரை அந்நிறுவனம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Thursday, July 16, 2026, 9:20 [IST]
English summary
Mahindra hiked xuv 7xo 7 seater suvs price too in india
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out