வேறமாறி, வேறமாறி... அசரடிக்கும் புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டாவின் இன்டீரியர்!!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நடுத்தர ரக எஸ்யூவி கார்களில் ஹூண்டாய் கிரெட்டாவுக்கு முக்கிய இடம் இருக்கிறது. குடும்பங்களின் விருப்பமான காராக இருக்கும் கிரெட்டா, விரைவில் புதிய தலைமுறை மாற்றத்தைப் பெற இருக்கிறது. தற்போது சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய தலைமுறை கிரெட்டா காரின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன.

இதன்மூலமாக அடுத்த தலைமுறை கிரெட்டா தற்போதைய மாடலைவிட அளவில் பெரியதாகவும், அதிக இடவசதி கொண்டதாகவும் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக உட்புற வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பயணிகளுக்கான சொகுசு அம்சங்களில் ஹூண்டாய் நிறுவனம் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், முதல்முறையாக டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல் உள்ளிட்டவற்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Hyundai Creta Interior Spied

புதிய கிரெட்டாவின் உட்புறத்தில் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட டேஷ்போர்டு இடம்பெறவுள்ளது. இதில் டெஸ்லா உள்ளிட்ட கார்களை போன்று பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், அதற்கு அருகில் கிடைமட்ட வடிவிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் இடம்பெற்றுள்ளன. ஹூண்டாயின் புதிய பிளியோஸ் (Pleos) மென்பொருள் அமைப்பும் இதில் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

Also Read

உட்புறத்தில் வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்களின் கலவையை ஹூண்டாய் பயன்படுத்தியுள்ளது. இதே வண்ண அமைப்பு இருக்கைகள், கதவுகளின் உட்புறப் பகுதிகள் மற்றும் சென்டர் கன்சோலிலும் தொடர்கிறது. தற்போதைய மாடலைவிட அதிக பிரீமியம் உணர்வை வழங்கும் வகையில் ஒட்டுமொத்த வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது.

முன்பக்க சென்டர் கன்சோலில் இரண்டு கப் ஹோல்டர்கள், கை வைக்கும் வசதியுடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், முன்பக்க ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கான இருக்கைகள் இரண்டுமே எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இருக்கைகளைத் தேவைக்கேற்ப எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.

Also Read

புதிய கிரெட்டாவில் முன்பக்க பயணிகள் இருக்கைக்கு எலக்ட்ரிக் பாஸ் மோட் (Electric Boss Mode) வசதியும் வழங்கப்படும் என தெரிகிறது. இதன்மூலம் பின்பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் முன்பக்க பயணி இருக்கையின் நிலையை மாற்றி, கால்களை நீட்டி வசதியாகப் பயணிக்க முடியும். இது நீண்டதூரப் பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Hyundai Creta Interior Spied

பின்பக்கப் பயணிகளுக்காக தனியாக ஆர்ம்ரெஸ்ட், கப் ஹோல்டர்கள் மற்றும் ஏசி வென்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய மாடலைவிட பின்பக்க இருக்கைகளில் அதிக இடவசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பின்பக்கப் பயணிகளுக்கான வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதுதவிர முன்பக்க மற்றும் பின்பக்க இருக்கைகளுக்கு வென்டிலேட்டட் வசதி, பின்பக்க இருக்கைகளைச் சாய்த்துக்கொள்ளும் வசதி, மேம்படுத்தப்பட்ட இணைப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை அனைத்தும் குடும்பப் பயணிகளின் வசதியை அதிகரிக்கும் வகையில் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கிரெட்டாவின் வெளிப்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பெரிய வடிவிலான அலாய் வீல்கள், கிளாம்ஷெல் வடிவிலான முன்பக்க பானெட், முழுமையான எல்இடி விளக்குகள் மற்றும் புதிய பாடி வடிவமைப்பு ஆகியவை இடம்பெறலாம். மேலும், முந்தைய மாடலைவிட பெரிய தோற்றத்துடன் இந்த எஸ்யூவி உருவாக்கப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் ஓட்டுனர் உதவி தொழில்நுட்பங்களிலும் ஹூண்டாய் அதிக கவனம் செலுத்துகிறது. லெவல் 2 ஏடிஏஎஸ் (Level 2 ADAS), 360 டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் எச்சரிக்கை மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதிகள் இடம்பெற வாய்ப்புள்ளது. இதனுடன் அனைத்து ஜன்னல்களுக்கும் ஆட்டோ அப்/டவுன் வசதியும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை கிரெட்டாவில் தற்போதைய 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் தொடரலாம். இவற்றுடன் புதிய ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் ஹூண்டாய் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், 6 ஸ்பீடு மேனுவல், ஐவிடி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. புதிய தலைமுறை கியா செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் குளோபல் கே3 (Global K3) பிளாட்பார்மில் இந்தக் கார் உருவாக்கப்பட்டு இருக்கும். அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Image Source: Team MRD

Article Published On: Thursday, November 12, 2026, 9:35 [IST]
English summary
New hyundai creta interior spied 2027 features space
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out