இந்தியாவில் புதிய 'மினி' அட்டகாசம் தொடங்கியது!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய தலைமுறை மினி கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் காருக்கு ரூ.53.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவில் மினி கார் நிறுவனத்தின் கூப்பர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் தற்போது கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு புதிய தலைமுறை மாடலாக இந்தியா வந்துள்ளது. இந்த மாடலுடன் சேர்த்து மினி கூப்பர் எஸ்இ பால் ஸ்மித் எடிசன் என்ற ஸ்பெஷல் எடிசன் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

Mini Cooper SE

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பேஷன் டிசைனர் பால் ஸ்மித் கொடுத்த சில டிசைன் அம்சங்களுடன் இந்த கார் தோற்றத்தில் மேலும் கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வந்துள்ளது. இதற்கு ரூ.56.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Also Read

புதிய மினி கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரே வேரியண்ட்டில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காருக்கான புக்கிங் துவங்கி இருக்கும் நிலையில், புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்க இருக்கிறது.

புதிய மினி கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் கார் வழக்கமான மினி கூப்பர் காரைப் போன்றே இரண்டு கதவுகளுடன் கூடிய ஹேட்ச்பேக் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், இதன் கேபின் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் கருப்பு வண்ண கூரையுடன் கூடிய பிரிட்டிஷ் ரேஸிங் க்ரீன், சில்லி ரெட் ஆகிய இரட்டை வண்ணத் தேர்வுகளிலும், வெள்ளை வண்ணப்பூச்சுடன் கூடிய கூரையுடன் கூடிய ஓசியன் வேவ் க்ரீன் என்ற இரட்டை வண்ணத் தேர்விலும் கிடைக்கும்.

Mini Cooper SE

புதிய மினி கூப்பர் எஸ்இ காரில் 54.2kWh திறன் கொண்ட பேட்டரி பேக் உள்ளது. முன்சக்கரங்களுக்கு சக்தியை வழங்கும் வகையில் மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் மோட்டார் 218 எச்பி பவரையும், 330 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பூஜ்ய நிலையில் இருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது.

புதிய மினி கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில், சோதனை நிலை தரவுகளின்படி 402 கிமீ தூரம் வரை பயணிக்கும் ரேஞ்ச் வழங்கும். மேலும், 11kW AC சார்ஜர் கொடுக்கப்படுகிறது. மேலும் 95kW வரையிலான DC ஃபாஸ்ட் சார்ஜரையும் சப்போர்ட் செய்யும். AC சார்ஜரை பயன்படுத்தினால் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 5 மணி 15 நிமிடங்கள் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் 10 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் அளவுக்கு பேட்டரியை சார்ஜ் ஏற்றுவதற்கு 30 நிமிடங்கள் போதும்.

Also Read

புதிய மினி கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் காரில் வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட்டுகள், பனோரமிக் சன்ரூஃப், 17 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த காரின் உட்புறத்தில் பல நவீன அம்சங்கள் உள்ளன. டேஷ்போர்டில் 9.4 அங்குல வட்ட வடிவிலான ஓஎல்இடி தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 2டி மேப்புகள், ஏஐ பர்சனல் அசிஸ்டென்ட் வசதி, ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகளும் உள்ளன.

ஓட்டுனர் இருக்கைக்கு மெமரி வசதி, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஹார்மன் கார்டன் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. தவிரவும், லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொழில்நுட்பம், முன்புற மோதலை தவிர்க்க எச்சரிக்கும் வசதி, தானியங்கி பிரேக் சிஸ்டம் உள்ளிட்டவையும் குறிப்பிடத்தக்கதாக உள்ளன.

Article Published On: Sunday, November 29, 2026, 10:10 [IST]
English summary
New mini cooper se electric car launched india price range features
மேலும்... #mini
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out