டிவிஎஸ் அர்மடோ அறிமுகம்: 1 டன் சரக்குகளை ஏற்றும் புதிய 3 சக்கர வாகனம்!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிய மூன்று சக்கர சரக்கு வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. டிவிஎஸ் அர்மடோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய சரக்கு வாகனம் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த வாகனம் ஒரு டன் எடை சுமக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

புதிய டிவிஎஸ் அர்மடோ சரக்கு வாகனத்தில் 200சிசி ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.2 பிஎச்பி பவரையும், 15.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 16 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது.

TVS Armado

பல்வேறு வர்த்தக போக்குவரத்து தேவைகளுக்கும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள், கிராமப்புறங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், இதன் எஞ்சின் ஒரு டன் எடை வரை திணறாமல் இழுவை திறன் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் இரண்டு மீட்டர் நீளமுடைய பொருட்களை ஏற்றுவதற்கான கார்கோ பெட்டில் ஒரு டன் வரை எடையை வைத்து சுலபலமாக எடுத்துச் செல்ல முடியும். மேலும், பல்வேறு வகையான பொருட்களையும் இதில் எளிதாக வைப்பதற்கு ஏதுவாக கார்கோ பெட்டின் மூன்று பக்கமும் உள்ள தடுப்பு அரணை மடக்கி வைக்கும் வசதியும் உள்ளது.

Also Read

இந்த சரக்கு வாகனத்தில் லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் அமைப்பு இருப்பதுடன் 230 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாக இருக்கிறது. எந்தவொரு சாலை நிலையிலும் பாரம் அதிகம் இருந்தாலும் சுலபமாக செல்வதற்கு இது ஏதுவாக இருக்கும்.

புதிய அர்மடோ சரக்கு வாகனத்தில் முழுமையான டிஜிட்டல் எல்சிடி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. அத்துடன் யுஎஸ்பி சார்ஜரும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால், வாகன ஓட்டுனர்கள் எளிதாக கையாள்வதற்கும், வர்த்தக போக்குவரத்தின்போது தடையில்லாத மொபைல்போன் மூலமாக தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கும்.

Also Read

இந்த புதிய சரக்கு வாகனத்தை பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கி சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் டிவிஎஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் விற்பனைக்கு செல்லும் அனைத்து நாடுகளிலும் சிறப்பான விற்பனைக்கு பிந்தைய சேவையையும், ஒரிஜினல் உதிரிபாகங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகளையும் வழங்க இருப்பதாக டிவிஎஸ் நிறுவனம் உறுதி தெரிவித்துள்ளது.

Article Published On: Saturday, November 28, 2026, 11:11 [IST]
English summary
Tvs armado 200cc cargo three wheeler 1 ton payload
மேலும்... #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out