29 கிமீ மைலேஜ், 1,400 கிமீ ரேஞ்ச்... ரூ.16.99 லட்சத்தில் புதிய ரெனோ டஸ்ட்டர் ஹைபிரிட் அறிமுகம்!

புதிய தலைமுறை ரெனோ டஸ்டச்டர் (Renault Duster) எஸ்யூவி காரின் புதிய ஸ்ட்ராங் ஹைபிரிட் (Strong Hybrid) மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இ-டெக் 160 (E-Tech 160) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாடல், லிட்டருக்கு 29 கி.மீ மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.16.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ரெனால்ட் டஸ்ட்டரில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இரண்டு மின்மோட்டார்கள் மற்றும் 1.4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இவை இணைந்து அதிகபட்சமாக 160 எச்பி ஆற்றலை வழங்குகின்றன. இதனுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

Renault Duster Hybrid

இந்த காரின் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தும் வகையில், பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்மோட்டார்கள் தேவைக்கேற்ப இணைந்து செயல்படுகின்றன. குறிப்பாக, நகரப் போக்குவரத்தில் குறைந்த வேகத்தில் செல்லும்போது மின்சாரத்தில் இயங்கும். நகரப் பயணங்களில் 80 சதவீதம் வரை மின்சாரத்தில் இயங்கும் என்றும், தேவைப்பட்டால் மட்டுமே பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்த்பபடும் என ரெனோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read

கணக்கீடுகளின்படி, இந்த ஹைப்ரிட் கார் 29 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று குறிப்பிடுகிறது. அத்துடன், புதிய டஸ்ட்டர் ஹைபிரிட் காரில் முழுமையாக எரிபொருள் நிரப்பும்போது, அதிகபட்சமாக 1,400 கி.மீ வரை பயணிக்க முடியும் என ரெனோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இது முக்கியமான அம்சமாக இருக்கும். இருப்பினும், உண்மையான பயண தூரம் ஓட்டும் முறை மற்றும் சாலை நிலைமைகளைப் பொறுத்து மாறுபடும்.

Renault Duster Hybrid

இந்த ஹைபிரிட் காரில் வெளிப்புற மின்சார இணைப்பு மூலம் பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. கார் இயங்கும்போதும், வேகத்தைக் குறைக்கும்போதும் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும். இதனால் மின்சார வாகனங்களைப் போல தனியாக சார்ஜிங் வசதியைத் தேட வேண்டியதில்லை.

புதிய ரெனால்ட் டஸ்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் இ-டெக் 160 காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.16.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காருக்கு ரூ.21,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். ரெனோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையகங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Also Read

இந்தியாவில் ஏற்கெனவே ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் விற்பனையாகும் எஸ்யூவி கார்களுக்குப் போட்டியாக புதிய டஸ்ட்டர் களமிறங்கியுள்ளது. குறிப்பாக, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Victoris) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) ஆகிய கார்களுடன் இது போட்டியிடும். ஆனால், அவற்றைவிட இந்த காரின் மைலேஜ் சற்று அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய டஸ்ட்டர் மாடல் ஏற்கெனவே இரண்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளுடன் விற்பனையில் உள்ளது. ஆரம்ப நிலை மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 100 எச்பி ஆற்றலையும் 160 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Renault Duster Hybrid

அதிக செயல்திறனை விரும்புபவர்களுக்கான 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 163 எச்பி ஆற்றலையும் 280 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டிசிடி தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. தற்போது அறிமுகமாகியுள்ள ஸ்ட்ராங் ஹைபிரிட் மாடல், எரிபொருள் சிக்கனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வாக அமைந்துள்ளது.

லிட்டருக்கு 29 கி.மீ மைலேஜ், 160 எச்பி ஆற்றல் மற்றும் வெளிப்புற சார்ஜிங் தேவையில்லாத ஹைபிரிட் தொழில்நுட்பம் ஆகியவை புதிய ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவியின் முக்கிய அம்சங்களாக உள்ளன. இதன் நடைமுறை மைலேஜ், விலை மற்றும் அம்சங்களைப் பொறுத்து, ஹைபிரிட் எஸ்யூவி வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு முக்கியமான தேர்வாக இருக்கலாம்.

Article Published On: Saturday, October 17, 2026, 12:53 [IST]
English summary
Renault duster strong hybrid e tech 160 price mileage features
மேலும்... #renault duster #new launches #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X