8,500 வாகனங்கள் குவிந்து கிடக்கும் துபாய் மோட்டார் ஜெயில்!
துபாயில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 8,500 வாகனங்கள் மோட்டார் ஜெயில் என்னும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை விரைவில் ஏலம் விடப்பட உள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
துபாயில் போக்குவரத்து விதிகள் மிக கடுமையான முறையில் பின்பற்றப்பட்டு வருகின்றன. அங்கு போக்குவரத்து மீறுவோருக்கு முதல் முறை அபாரதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதி மீறுபவர்களின் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு மோட்டார் ஜெயிலில் நிறுத்தப்பட்டு விடும். அபராத தொகையை செலுத்தி வாகனத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆனால்... ஸ்லைடருக்கு வாருங்கள்.
இந்த மாருதி காரை பத்தி ஏதாவது உங்களுக்கு தெரியுமா? - கொஞ்சம் சொல்லுங்களேன்!

அபாரதம்
வாகனங்கள் தேங்கி கிடப்பதற்கு முக்கிய காரணம் துபாயில் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதத் தொகை மிக அதிகம் என்பதே. பல உரிமையாளர்கள் அபராதத் தொகையை செலுத்த முடியாமல் கார்களை கைவிட்டுவிடுகின்றனர். இதுவே, கார்கள் இந்தளவுக்கு தேங்கி கிடப்பதற்கு காரணம்.

ஃபெராரி என்ஸோ
துபாய் மோட்டார் ஜெயிலில் பல வகையான விலை மதிப்புமிக்க கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதில், ஃபெராரி என்ஸோ கார் ஒன்று. இதன் மதிப்பு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களாக தெரிவிக்கப்படுகிறது. கோடீஸ்வர வீட்டு வாயில்களை அலங்கரிக்க வேண்டிய அந்த கார் தூசிகள் படிந்து மிகவும் பரிதாபமாக அங்கு நிற்கிறது.

அனாதை கார்கள்
விதி மீறுவோர் மட்டுமின்றி பிற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் துபாய் சட்ட திட்டங்களுக்கு பயந்துகொண்டு தங்களது கார்களை சாலைகளிலேயே நிறுத்திவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவதுண்டு. அதுபோன்று, சாலையில் அனாதையாக நிற்கும் ஏராளமான சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டு மோட்டார் ஜெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கால அவகாசம்
விதி மீறுவோரிடம் இருந்து கைப்பற்றப்படும் கார்கள் 6 மாதத்திற்குள் திரும்ப பெற வேண்டும். இல்லாதபட்சத்தில் அரசாங்கம் சார்பில் ஏலத்தில் விடப்பட்டுவிடும். இதுபோன்று, ஆண்டுக்கு 2 முறை ஏலம் விடப்படுகிறது.

இன்டர்போல் உதவி
குற்றச் செயல்களில் ஈடுபட்டு கார்களை சாலைகளிலேயே நிறுத்திவிட்டு தப்பிவிடும் குற்றவாளிகள் மீது இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசிடம், துபாய் போலீசார் புகாரை பதிவு செய்யும் நடைமுறையும் அங்கு பின்பற்றப்படுகிறது.

பணக்கார போலீஸ்
உலகின் பணக்கார போலீசார் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் துபாய் போலீசார் தற்போது விதி மீறுவோர்களை எளிதாக பிடிக்கும் வகையில் சூப்பர் கார்களை வாங்கி ரோந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்டன் மார்ட்டின், ஃபெராரி, லம்போ காரும் அதில் அடக்கம்.


Click it and Unblock the Notifications








