புதிய கார்களுக்கான பதிவை அடியோடு நிறுத்தும் சிங்கப்பூர்... காரணம் என்ன?

புதிய கார்களுக்கான பதிவு செய்யும் முறையை அடியோடு நிறுத்துவதற்கு சிங்கப்பூர் அதிரடி முடிவு எடுத்துள்ளது. அதற்கான காரணம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

உலகின் பெரும்பான்மையான நாடுகளின் தலையாய பிரச்னை போக்குவரத்து நெரிசல் மற்றும் ராக்கெட் வேகத்தில் உயரும் வாகனங்கள் எண்ணிக்கைதான். இந்தியா போன்ற பெரும் நிலபரப்பு கொண்ட நாடுகளின் நகரங்கள், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி வருகிறது.

புதிய கார்களுக்கான பதிவை அடியோடு நிறுத்தும் சிங்கப்பூர்... காரணம் என்ன?

இந்த நிலையில், குறைந்த நிலபரப்பு கொண்ட சிங்கப்பூரில் வாகன எண்ணிக்கை பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. அங்கு கார் வைத்திருப்பதற்கு வரியும், கட்டுப்பாடுகளும் அதிகம். உலகிலேயே கார் வைத்திருப்பது மிக காஸ்ட்லியான விஷயமாக இருக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

புதிய கார்களுக்கான பதிவை அடியோடு நிறுத்தும் சிங்கப்பூர்... காரணம் என்ன?

அங்கு கார்களுக்கான இறக்குமதி வரி, பார்க்கிங் உள்ளிட்டவை மிக அதிகம். பரப்பளவில் சிறிய நாடாக இருப்பதால், வாகன எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக இந்த விதிகள் நடைமுறையில் உள்ளன.

புதிய கார்களுக்கான பதிவை அடியோடு நிறுத்தும் சிங்கப்பூர்... காரணம் என்ன?

எனவே, அந்நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்து சாதனங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும், பொது போக்குவரத்திலும் சிறப்பான கட்டமைப்பு வசதிகளை அந்நாடு ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
புதிய கார்களுக்கான பதிவை அடியோடு நிறுத்தும் சிங்கப்பூர்... காரணம் என்ன?

இந்த நிலையில், புதிய கார்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை எதிர்காலத்தில் சமாளிக்க முடியாத அளவுக்கு சிறிய நில பரப்பு கொண்ட நாடு. எனவே, இந்த அபாயத்தை உணர்ந்து அதிரடி நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு எடுத்து வருகிறது.

புதிய கார்களுக்கான பதிவை அடியோடு நிறுத்தும் சிங்கப்பூர்... காரணம் என்ன?

புதிய கார்களின் வளர்ச்சி விகிதத்தை பூஜ்யமாக மாற்றுவதற்கான முயற்சியில் சிங்கப்பூர் இறங்கி இருக்கிறது. தற்போது அந்நாட்டில் புதிய கார் விற்பனை ஆண்டுக்கு 0.25 சதவீதம் வளர்ச்சி விகிதத்தில் உள்ளது. இதனை பூஜ்யமாக்கும் முயற்சியில் அந்நாடு இறங்கி இருக்கிறது.

புதிய கார்களுக்கான பதிவை அடியோடு நிறுத்தும் சிங்கப்பூர்... காரணம் என்ன?

ஆம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிங்கப்பூரில் புதிய கார்களுக்கான பதிவு முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது. சிங்கப்பூர் நில போக்குவரத்து ஆணையம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. சிங்கப்பூர் பரபப்பளவில் சிறிய நாடாக இருக்கும் நிலையில், அங்குள்ள நிலப்பரப்பில் 12 சதவீதம் சாலை கட்டமைப்பாக உள்ளது.

Trending On DriveSpark Tamil:

More from DriveSpark

Article Published On: Tuesday, October 24, 2017, 17:32 [IST]
English summary
To curb over-congestion in the tiny city-state of Singapore, the Land Transport Authority (LTA) will ban additional cars on its roads starting February 2018.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+