விற்பனையில் கலக்கும் இந்தியாவின் டாப் -4 எஸ்யூவி மாடல்கள்!
விற்பனையில் முதன்மை இடங்களை பெற்றிருக்கும் இந்தியாவின் டாப் 4 எஸ்யூவி மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
எஸ்யூவி கார்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் ஈர்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், கடந்த சில ஆண்டுகளாக பல புதிய மாடல்கள் வரிசை கட்டின. இதனால், இந்த ரக கார் மார்க்கெட்டில் கடும் சந்தை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், இந்த கடும் போட்டிக்கு மத்தியில் விற்பனையில் டாப் -10 இடங்களை பிடித்து, மார்க்கெட்டிலும், வாடிக்கையாளர் மனதிலும் முதன்மை பெற்றிருக்கும் 10 எஸ்யூவி மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி பிரெஸ்ஸா
கடந்த மாதம் பட்டியலில் முதலிடத்தில் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி இடம்பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 13,268 மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவிகள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தைவிட, கடந்த மாதத்தில் பிரெஸ்ஸாவின் விற்பனை 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

மாருதி பிரெஸ்ஸா விற்பனைக்கு மாருதியின் நம்பகத்தன்மை முக்கிய காரணம். தவிரவும், இந்த காரில் இருக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மாடலில் கிடைக்கிறது. லிட்டருக்கு இந்த கார் 24.3 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுவதும், வாடிக்கையாளர்களிடத்தில் அதிக வரவேற்பை பெற காரணம்.

ஹூண்டாய் க்ரெட்டா
வழக்கம்போல் ஹூண்டாய் நிறுவனத்தின் டிசைன் நிபுணத்துவத்தை எடுத்தியம்பும் மாடலாக ஹூண்டாய் க்ரெட்டா விளங்குகிறது. சொகுசு கார்களுக்கு ஈடான டிசைன் மற்றும் அதிக சிறப்பம்சங்கள் இந்த காருக்கு அதிக வரவேற்பை தொடர்ந்து பெற்று தந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 8,835 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் 9,262 க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யபப்ப்டடுள்ளன.
Recommended Video


ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியானது 1.6 லிட்டர் பெட்ரரோல் எஞ்சின் ஆப்ஷனிலும், 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

மஹிந்திரா பொலிரோ
மாருதி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா வருவதற்கு முன்னர் விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 எஸ்யூவி மாடலாக இருந்து வந்தது மஹிந்திரா பொலிரோ. புதிய போட்டியாளர்கள் வந்தாலும், தனக்கென தனி இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. கடந்த மாதத்தில் 8,930 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிகள் விற்பனையாகி உள்ளன.
Trending On DriveSpark Tamil:
- ரூ.40 லட்சம் மதிப்பில் பிரம்மாண்டமான மோட்டார்சைக்கிள் வாங்கிய நடிகர் மாதவன்!
- இந்த வீடியோ பார்த்த பிறகும் பைக்ல வேகமாக போவீங்க?
- எப்படி பால் போட்டாலும், சிக்ஸர் அடிக்குதேய்யா இந்த ஹெக்ஸா..!

அண்மையில் அறிமுகமான 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மஹிந்திரா பொலிரோ பவர்+ மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும், சாதாரண பொலிரோ மாடலில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. அனைத்து சாலை நிலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற கட்டுறுதியான எஸ்யூவி மாடல்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
எஸ்யூவி மார்க்கெட்டின் சூப்பர் ஸ்டார் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ. வயது ஏற, ஏற இளமை கூடிக் கொண்டே செல்வதால், நீண்ட காலமாக மார்க்கெட்டில் மிக வலுவான சந்தையை பெற்றுள்ளது. கடந்த மாதம் 6,260 ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகள் விற்பனையாகி உள்ளன.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியில் 75 பிஎச்பி பவரையும், 180 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும், 120 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. போட்டியாளர்களின் நெருக்கடியை தவிர்த்துக் கொள்ள விரைவில் ஸ்கார்ப்பியோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் அறிமுகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








