ஏளனமாக பேசிய நாடுகளின் நாவை ஒட்ட நறுக்கிய 'மேட் இன் இந்தியா' கார், பைக்குகள்.. உலகிற்கே முன் உதாரணம்

சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி முடித்திருக்கிறது இந்தியா. இந்த நேரத்தில், இந்தியர்கள் பெருமைப்படும் வகையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட கார், பைக்குகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி முடித்திருக்கிறது இந்தியா. இந்த நேரத்தில், இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளும் வகையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட (made in india) கார்கள் மற்றும் பைக்குகள் குறித்த சுவாரசிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த கார், பைக்குகள்

டாடா இன்டிகா

டாடா நிறுவனம் கடந்த 1998ம் ஆண்டு இன்டிகா காரை லான்ச் செய்தது. இதன்மூலம் பாசஞ்சர் கார் செக்மெண்டில் (passenger car segment) கம்பீரமாக அடியெடுத்து வைத்தது டாடா. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே டெவலப் மற்றும் டிசைன் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்த முதல் கார் டாடா இன்டிகாதான்.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த கார், பைக்குகள்

மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வந்த டாடா இன்டிகா காரில், அதிக இட வசதி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் அந்த சமயத்தில் மாருதி ஜென் ஹேட்ச்பேக் வகை காருக்கு கடும் போட்டியை, டாடா இன்டிகா வழங்கியது.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த கார், பைக்குகள்

எனவே டாடா இன்டிகா காரின் போட்டியை சமாளிக்கும் வகையில், மாருதி ஜென் காரின் விலையை மாருதி அதிரடியாக குறைத்தது. மாருதி நிறுவனம் காரின் விலையை குறைக்கிறது என்ற செய்தியை இப்போது கேட்பதெல்லாம் பெரிய விஷயமே அல்ல. ஆனால் அந்த கால கட்டத்தில் அது ஒரு அரிதான விஷயம்தான்.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த கார், பைக்குகள்

ராயல் என்பீல்டு ஹிமாலயன்

தமிழக தலைநகர் சென்னையை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் ஓர் இந்திய நிறுவனம் ராயல் என்பீல்டு. ராயல் என்பீல்டு நிறுவனம், கடந்த 2016ம் ஆண்டு முதல், ஹிமாலயன் மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்து வருகிறது.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த கார், பைக்குகள்

ஓர் இந்திய நிறுவனம் தயாரித்த முதல் டியூயல் பர்பஸ் (dual-purpose) மோட்டார் சைக்கிள் என்றால், அது ஹிமாலயன்தான். இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 411 சிசி இன்ஜின், 24.5 பிஎச்பி பவர் மற்றும் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த கார், பைக்குகள்

ஹிமாலயன் பைக்கில், செமி டிஜிட்டல் இன்ட்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக், சர்வதேச மார்க்கெட்டிலும் பல வாடிக்கையாளர்களை கவர்ந்திழுள்ளது. இது இந்தியர்கள் பெருமைபடக்கூடிய விஷயம்தான்.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த கார், பைக்குகள்

மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திரா நிறுவனம் தனது 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கடந்த 2002ம் ஆண்டில், ஸ்கார்பியோ காரை லான்ச் செய்தது. ஸ்கார்பியோ காரை டெவலப் செய்யும் பணிகளில், வெறும் 23 இன்ஜினியர்கள் மட்டுமே ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த கார், பைக்குகள்

சலுப்பு தட்டி கொண்டிருந்த இந்திய எஸ்யூவி கார் மார்க்கெட்டை சூடுபிடிக்க வைத்த கார்களில் மஹிந்திரா ஸ்கார்பியோவுக்கு நிச்சயம் இடமுண்டு. இன்று இந்திய சாலைகளில் ஏராளமான எஸ்யூவி கார்களை காண முடிகிறது. இதற்கு மஹிந்திரா ஸ்கார்பியோவும் ஒரு காரணம் என்றால் நிச்சயம் மிகையல்ல.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த கார், பைக்குகள்

டாடா நானோ

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஓர் இந்திய தயாரிப்பு டாடா நானோ. கடந்த 2008ம் ஆண்டு, நானோ கார் லான்ச் செய்யப்பட்டது. அப்போது அதன் விலை வெறும் 1 லட்ச ரூபாய்தான். அதாவது அந்த சமயத்தில், டாடா நானோ காரின் விலையை, அமெரிக்க மதிப்பில் கணக்கிட்டால் 2,500 டாலர்கள்தான்.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த கார், பைக்குகள்

ரத்தன் டாடாவின் கனவு கார் இது. பைக் ஓட்டி கொண்டிருப்பவர்களை எல்லாம் கார் ஓட்ட வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் நானோ காரை லான்ச் செய்தது டாடா நிறுவனம். ஆனால் டாடா நிறுவனம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதையும் மறுக்க முடியாது.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த கார், பைக்குகள்

ஆனால் நானோ காரின் மூலமாக, இவ்வளவு குறைந்த விலைக்கு ஓர் புதிய காரை உருவாக்க முடியும் என்று உலகிற்கு எடுத்துரைத்தது டாடா நிறுவனம். சாத்தியமில்லாத கனவு என வர்ணித்த சில மேற்கத்திய நாடுகள் எல்லாம், டாடா நிறுவனத்தின் அதிரடியால் வாயடைத்து போயின.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த கார், பைக்குகள்

பஜாஜ் பல்சர்

இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும் ஒரு ஸ்போர்ட் பைக் பஜாஜ் பல்சர். மலிவான விலை, அட்டகாசமான டிசைன் மற்றும் மாடல்கள், வெவ்வேறு விலைகளில் மல்டிபிள் இன்ஜின் ஆப்ஷன் என பல்சர் பைக்கில் தொடர்ச்சியாக அதிரடி காட்டி வருகிறது பஜாஜ்.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த கார், பைக்குகள்

சலுப்பு தட்டும் கம்யூட்டர் பைக்குகளை விட்டு விட்டு, தினசரி பயன்பாட்டிற்கு ஸ்போர்ட்ஸ் பைக்கை பயன்படுத்தும் வழக்கத்தை இந்தியர்களிடையே கொண்டு வந்த பைக்குகளில் மிக முக்கியமான இடம் பஜாஜ் பல்சருக்கு உண்டு.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த கார், பைக்குகள்

ஏத்தர் 340

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால், உலகம் வேக வேகமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டிருக்கிறது. அத்தகைய எலக்ட்ரிக் வாகன உலகில் ஓர் புரட்சியை உண்டாக்கும் வகையில் லான்ச் செய்யப்பட்டதுதான் ஏத்தர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த கார், பைக்குகள்

பெங்களூருவை மையமாக கொண்ட ஏத்தர் எனர்ஜி என்ற நிறுவனம்தான், ஏத்தர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி, கடந்த சில வாரங்களுக்கு முன் லான்ச் செய்தது. ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான், அதாவது 2015ம் ஆண்டில்தான் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த கார், பைக்குகள்

ஏத்தர் 340 ஸ்கூட்டர் தவிர, ஏத்தர் 450 ஸ்கூட்டரையும், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் லான்ச் செய்துள்ளது. இதில், ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 70 கிலோ மீட்டர்கள் வரை தாராளமாக பயணிக்கலாம். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. புத்தம் புதிய 110சிசி பைக் மாடலை அறிமுகப்படுத்துகிறது டிவிஎஸ்!!
  2. புதிய கார்களின் அறிமுகத்தை நிறுத்தபோகிறது மஹிந்திரா...!
  3. மஹிந்திரா மராஸ்ஸோ காரின் இருக்கை அமைப்பு படம் வெளியீடு!!
Most Read Articles
English summary
6 Made in India Bikes and Cars. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X