மஹிந்திரா மராஸ்ஸோ காரின் இருக்கை அமைப்பு படம் வெளியீடு!!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக எதிர்பார்க்கப்படும் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் இருக்கை அமைப்பு குறித்த படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில

By Saravana Rajan

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக எதிர்பார்க்கப்படும் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் இருக்கை அமைப்பு குறித்த படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. படங்களையும் கூடுதல் விபரங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் இருக்கை அமைப்பு படம் வெளியீடு!!

மஹிந்திரா நிறுவனம் மராஸ்ஸோ என்ற புத்தம் புதிய எம்பிவி ரக காரை களமிறக்க ஆயத்தமாகி வருகிறது. வரும் 20ந் தேதி இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் இருக்கை அமைப்பு படம் வெளியீடு!!

அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், அறிமுகத்திற்கு இந்த கார் நெருக்கமாக இருப்பதை காட்டும் விதத்தில் பெயரை அறிவித்ததுடன், தொடர்ந்து படங்களையும் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன் காரின் டேஷ்போர்டு அமைப்பை காட்டும் படம் வெளியிடப்பட்டது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் இருக்கை அமைப்பு படம் வெளியீடு!!

இதைத்தொடர்ந்து, தற்போது காரின் இருக்கை அமைப்பு மற்றும் கேபினை முழுமையாக காண்பதற்கான புதிய படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் 7 சீட்டர் மாடலின் இருக்கை அமைப்பை காண்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் இருக்கை அமைப்பு படம் வெளியீடு!!

முன் வரிசை மற்றும் இரண்டாவது வரிசையில் தலா இரண்டு கேப்டன் சீட்டுகளும், கடைசியில் 3 பேர் அமர்வதற்கான பெஞ்ச் இருக்கை அமைப்பையும் பெற்றிருக்கின்றன. அத்துடன், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கும் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கடைசி வரிசை இருக்கையின் இடவசதி மிக நெருக்கடியாக இருக்கும் என்று தெரிகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் இருக்கை அமைப்பு படம் வெளியீடு!!

இந்த 7 சீட்டர் மாடல் மட்டுமின்றி, 8 சீட்டர் மாடலிலும் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் வர இருக்கிறது. இந்த மாடலில் இரண்டு வரிசை பெஞ்ச் இருக்கை அமைப்புடன் வருகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் இருக்கை அமைப்பு படம் வெளியீடு!!

தற்போது வெளியாகி இருக்கும் 7 சீட்டர் மாடலின் கேபின் படத்தின் மூலமாக இந்த காரின் இருக்கைகள் மற்றும் உட்புற அமைப்பில் பீஜ் வண்ணம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. லெதர் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி உயர் வேரியண்ட்டில் வழங்கப்பட இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் இருக்கை அமைப்பு படம் வெளியீடு!!

ஏற்கனவே சொன்னது போல, டேஷ்போர்டு அமைப்பு கருப்பு வண்ண தீமில் இருக்கிறது. ஏசி வென்ட்டுகளில் க்ரோம் ஃபினிஷிங்குடன் வருகிறது. இரட்டை டயல்களுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு இடம்பெற்றுள்ளது. டயல்களுக்கு நடுவில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கான டிஜிட்டல் திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் இருக்கை அமைப்பு படம் வெளியீடு!!

சென்டர் கன்சோலில் பெரிய திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. பின் இருக்கை பயணிகளுக்காக ரூஃப் ஏசி சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனை சர்ரவுண்ட் கூலிங் சிஸ்டம் என்று மஹிந்திரா குறிப்பிடுகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் இருக்கை அமைப்பு படம் வெளியீடு!!

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வருகிறது. பின்னர் பெட்ரோல் மாடலிலும் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால், தொழில்நுட்ப விபரங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் இருக்கை அமைப்பு படம் வெளியீடு!!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களை வாங்க விரும்புவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், மாருதி எர்டிகாவைவிட சற்று கூடுதல் இடவசதியையும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட விலை குறைவான மாடலாகவும் நிலைநிறுத்தப்படும் என்பதே இதற்கு காரணமாக கூறலாம்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra & Mahindra recently revealed the Marazzo moniker for its upcoming MPV. Previously, we had reported about the dashboard of the Mahindra Marazzo being revealed. Now, the company has fully revealed the cabin of the new Mahindra Marazzo MPV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X