மாருதிக்கு என்ன ஆச்சு? டொயோட்டா ஜோராச்சு..

கடந்த ஜூலை பெரிய அளவில் புதிய கார்கள் அறிமுகம் எதுவும் இல்லை. ஹோண்டா ஜாஸ் பேஸ்லிப்ட் மற்றம் போர்ஸே 911 ஜிடி2 ஆர்எஸ் ஆகிய கார்கள் தான் புதிதாக அறிமுகம் ஆகியது மற்ற நிறுவனங்கள் பண்டிகை காலத்தை ஒட்டி வ

By Balasubramanian

கடந்த ஜூலை பெரிய அளவில் புதிய கார்கள் அறிமுகம் எதுவும் இல்லை. ஹோண்டா ஜாஸ் பேஸ்லிப்ட் மற்றம் போர்ஸே 911 ஜிடி2 ஆர்எஸ் ஆகிய கார்கள் தான் புதிதாக அறிமுகம் ஆகியது மற்ற நிறுவனங்கள் பண்டிகை காலத்தை ஒட்டி வெளியிட முடிவு செய்துள்ளது. இருந்தாலும் ஜூலை மாத விற்பனை ஆட்டோமொபைல் தயாரிப்பாகளர்களை உற்சாகத்தில் தான் ஆழ்த்தியுள்ளது.

மாருதிக்கு என்ன ஆச்சு? டொயோட்டா ஜோராச்சு..

அடுத்த இரண்டு மாதங்களிலும் அதிக கார்கள் அறிமுகமாகவுள்ளதால் மேலும் இது அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இந்த செய்தியில் கடந்த ஜூலை மாதம் எந்தெதந்த கார்கள் எவ்வளவு விற்பனையாகியுள்ளது என்பதை பார்ப்போம்.

மாருதிக்கு என்ன ஆச்சு? டொயோட்டா ஜோராச்சு..

மாருதி சுஸூகி

மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 0.6 சதவீத வீழ்ச்சியை அடைந்துள்ளது. கடந்த மாதம் மொத்தம் 1,64,369 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்தது. ஆனால் கடந்தாண்டு இதே மாதத்தில் 1,65,346 கார்களை விற்பனை செய்துள்ளது.

மாருதிக்கு என்ன ஆச்சு? டொயோட்டா ஜோராச்சு..

இந்நிறுவனத்தின் பெரும் விற்பனை சரிவு மாருதி சியஸ் காரில் நிகழ்ந்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 6,377 கார்களை விற்பனை செய்த இந்நிறுவனம் கடந்த மாதம் சுமார் 99.2 சதவீத விற்பனை சரிவை சந்தித்து மொத்தம் 48 கார்களை தான் விற்பனை செய்தது. இதற்கு முக்கிய காரணம் இந்த மாதம் சியஸ் காரின் பேஸ்லிப்ட் வெர்ஷன் வருவது தான். தற்போது டீலர்கள் அவர்களிடம் உள்ள ஸ்டாக்கையே விற்பனை செய்கிறார்கள்.

மாருதிக்கு என்ன ஆச்சு? டொயோட்டா ஜோராச்சு..

டொயோட்டா

டொயோட்டா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 13,677 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. அதே போல 747 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆக மொத்தம் கடந்த மாதம் இந்நிறுவனம் 14,424 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் நடந்த விற்பனையை காட்டிலும் சுமார் 36 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் இந்தாண்டு பெற்றுள்ளது.

மாருதிக்கு என்ன ஆச்சு? டொயோட்டா ஜோராச்சு..

மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 47,199 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 41,819 கார்களை தான் அந்நிறுவனம் விற்று இருந்தது. இந்நிறுவம் இந்தியாவில் மட்டும் 44,605 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 12 சதவீத வளர்ச்சியாகும். பயணிகள் வாகனத்தை பொருத்தவரை மொத்தம் 19,781 வாகனங்களை கடந்த ஜூலையில் விற்பனை செய்துள்ளது. 2017 ஜூலையில் 21,034 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 6 சதவீத சரிவாகும்.

மாருதிக்கு என்ன ஆச்சு? டொயோட்டா ஜோராச்சு..

இந்நிறுவனம் சமீபத்தில் மராஸ்ஸோ என்ற எம்பிவி ரக காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வரும் மாதங்களில் விற்பனைக்க வந்தால் இந்த நிறுவனத்தின் விற்பனை கிராப் அதிகரிக்கும் என பேசப்படுகிறது.

மாருதிக்கு என்ன ஆச்சு? டொயோட்டா ஜோராச்சு..

ஃபோர்டு

ஃபோர்டு நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 25,028 வாகனங்களை விற்றுள்ளது. 2017ம் ஆண்டு ஜூலையில் இந்நிறுவனம் மொத்தம் 26,075 வாகனங்களை விற்றுள்ளது. இது 4 சதவீத சரிவாகும். உள்நாட்டில் மொத்தம் 7,816 வாகனங்களை கடந்தமாதம் விற்பனை செய்துள்ளது.

மாருதிக்கு என்ன ஆச்சு? டொயோட்டா ஜோராச்சு..

2017 ஜூலையில் மொத்தம் 8,418வாகனங்களை விற்பனை செய்திருந்தது இது 7.15 சதவீதம் சரிவாகும். ஏற்றுமதியை பொருத்தவரை ஃபோர்டு நிறுவனம் மொத்ம் 10,386 வாகனங்களை ஏற்றுதி செய்துள்ளுது. கடந்தாண்து ஜூலையில் 14,649 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது 29 சதவீத சரிவாகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

More from DriveSpark

Article Published On: Thursday, August 2, 2018, 12:11 [IST]
English summary
Car Sales report July 2018. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+