இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி.. தகர்க்க முடியாத சாதனை

2 கோடி கார்களை விற்பனை செய்த இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற இமாலய சாதனையை மாருதி சுஸூகி படைத்துள்ளது. இந்த அரிய சாதனையை படைக்க, 34 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் ஆகியுள்ளது.

By Arun

2 கோடி கார்களை விற்பனை செய்த இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற இமாலய சாதனையை மாருதி சுஸூகி படைத்துள்ளது. இந்த அரிய சாதனையை படைக்க, 34 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் ஆகியுள்ளது. இந்த சாதனை பயணம் குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுஸூகி. இந்திய மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கும் மாருதி சுஸூகி நிறுவனம், புதிய இமாலய சாதனை ஒன்றை இன்று (ஜூலை 23ம் தேதி) படைத்துள்ளது.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

மாருதி சுஸூகி நிறுவனம், 2 கோடி (20 மில்லியன்) கார்களை விற்பனை செய்து சரித்திரம் படைத்துள்ளது. ஆம், இன்று இந்திய சாலைகளில் 2 கோடி மாருதி சுஸூகி கார்கள் ஓடுகின்றன. இத்தகைய சாதனையை நிகழ்த்திய இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற பெருமையையும் மாருதி சுஸூகி தன்வசப்படுத்தியுள்ளது.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

மாருதி நிறுவனத்தின் முதல் கார் கடந்த 1983ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்தது. அன்றில் இருந்து கணக்கிட்டால், 2 கோடி கார்களை விற்பனை செய்த சாதனையை படைக்க, மாருதி சுஸூகி நிறுவனம் 34 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களை எடுத்து கொண்டுள்ளது.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

மாருதி 800தான் இந்நிறுவனத்தின் முதல் கார். இந்த காரை வாங்கியவர் என்ற பெருமைக்கு உரியவர் டெல்லியை சேர்ந்த ஹர்பால் சிங். அப்போது குலுக்கல் முறையில்தான் அவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த காருக்கான சாவியை, ஹர்பால் சிங்கிடம் வழங்கியது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

34 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் உருண்டோடி விட்டன. தற்போது 2 கோடி கார்களை உற்பத்தி செய்து விட்டது மாருதி சுஸூகி. இந்நிறுவனத்திற்கு இன்று இந்தியாவில் 2 பிளாண்ட்கள் உள்ளன. அந்த 2 பிளாண்ட்களும் ஹரியானா மாநிலத்தில்தான் அமைந்துள்ளன.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

இதுதவிர மாருதி நிறுவனத்தின் பார்ட்னரான சுஸூகி நிறுவனத்திற்கு குஜராத் மாநிலத்தில் ஒரு பிளாண்ட் உள்ளது. தற்போது இந்த 3 பிளாண்ட்களிலும் சேர்த்து, ஒரு வருடத்திற்கு 17.5 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

ஆனால் இது போதாது என்கிறது மாருதி சுஸூகி. வருடத்திற்கு 20 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என மாருதி சுஸூகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2020ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்டி விட முடியும் என மாருதி சுஸூகி நிறுவனம் நம்புகிறது.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

மாருதி சுஸூகி நிறுவனத்தின் அடுத்த இலக்கை கேட்டால், ஒரு நிமிடம் தலை சுத்தும். வருடத்திற்கு 50 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதுதான் மாருதி சுஸூகி நிறுவனத்தின் அடுத்த மெகா இலக்கு. அதாவது ஆண்டுக்கு 50 லட்சம் கார்களை விற்பனை செய்ய மாருதி சுஸூகி நிறுவனம் விரும்புகிறது.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

இதில், 15 லட்சம் கார்கள் எலக்ட்ரிக் கார்களாக இருக்க வேண்டும் என மாருதி சுஸூகி நிறுவனம் நினைக்கிறது. இந்த மெகா இலக்கை, குறைந்தபட்சம் 2030ம் ஆண்டிற்குள் எட்டிவிட வேண்டும் என திட்டம் போட்டு, முயற்சி செய்து வருகிறது மாருதி சுஸூகி.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

இதன்படி மாருதி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் 2020ம் ஆண்டில் லான்ச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் என்ற பெருமையை வேகன் ஆர் கார்தான் பெறப்போகிறது. இதை அந்நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

இதுதவிர ஸ்விப்ட், ஆல்டோ, டிசையர், பலினோ கார்களின் எலக்ட்ரிக் வெர்ஷன்களை களமிறக்கவும் மாருதி சுஸூகி முடிவு செய்துள்ளது. 2 கோடி கார்கள் விற்பனை இலக்கை எட்டியமைக்காக, மாருதி சுஸூகி இந்தியா நிறுவனத்தின் MD & CEO கெனிச்சி அயுகவா அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

இதுகுறித்து கெனிச்சி அயுகவா கூறுகையில், ''எங்களது மதிப்பு மிகுந்த வாடிக்கையாளர்கள், தொழில் ரீதியிலான பார்ட்னர்கள், பங்குதாரர்கள் மற்றும் அரசாங்கம் என அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்'' என்றார்.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

அவர் மேலும் கூறுகையில், ''2 கோடி கார்களை விற்பனை செய்திருப்பதன் மூலம், மாருதி சுஸூகி என்ற பிராண்டின் மீது மக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை நிரூபித்து காட்டியுள்ளோம். தரம், பாதுகாப்பு, டெக்னாலஜியில் வாடிக்கையாளர்களுக்கு நன்கு சேவையாற்றி வருகிறோம்'' என்றார்.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

மாருதி சுஸூகி நிறுவனம் இன்று 2 கோடி கார்களை விற்பனை செய்து விட்டது. இதில், முதல் 50 லட்சம் கார்களை விற்பனை செய்ய சுமார் 21 ஆண்டுகளை மாருதி சுஸூகி நிறுவனம் எடுத்து கொண்டது. 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் முதல் 50 லட்சம் கார்கள் விற்பனை என்ற சாதனையை இந்நிறுவனம் படைத்தது.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

அன்றில் இருந்து சுமார் 6 ஆண்டுகளில் (2011ம் ஆண்டு மார்ச் மாதம்), அடுத்த 50 லட்சம் கார்களை மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்தது. ஆக, 1983ம் ஆண்டு டிசம்பர் முதல் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஒட்டுமொத்தமாக 1 கோடி கார்களை மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்து விட்டது.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

இதன்பின்னர் அடுத்த 50 லட்சம் கார்களை, 2015ம் ஆண்டு மே மாதம் விற்பனை செய்தது மாருதி சுஸூகி. 2வது 50 லட்சம் கார்களுக்கும், மூன்றாவது 50 லட்சம் கார்களுக்கும் இடைப்பட்ட இடைவெளி 50 மாதங்கள். ஆனால் இதன் பின் வெகுவேகமாக கார்களை விற்பனை செய்தது மாருதி சுஸூகி.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

இதன்மூலம் 2015ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது 2018ம் ஆண்டு ஜூலை வரை வெறும் 38 மாதங்களில், அடுத்த 50 லட்சம் கார்களை மாருதி சுஸூகி விற்பனை செய்து விட்டது. ஆக மொத்தம் 34 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களில் 2 கோடி கார்களை மாருதி சுஸூகி விற்பனை செய்து தள்ளியுள்ளது.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

விட்டாரா பிரெஸ்ஸாதான் மாருதி சுஸூகி நிறுவனம் உற்பத்தி செய்த 2 கோடியாவது கார். ஹரியானாவில் உள்ள பிளாண்ட்டில் இந்த கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனையை மற்ற நிறுவனங்கள் முறியடிப்பது சிரமமே. அதற்குள் மாருதி சுஸூகி புதிய சாதனையை படைத்து விடும்.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி..

மாருதி சுஸூகி நிறுவனம் தற்போது இந்திய மார்க்கெட்டில், மொத்தம் 16 மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர ஐரோப்பா, ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்கா, ஆசிய கண்டத்தின் பல்வேறு நாடுகள் என மொத்தம் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதியும் செய்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. செப்டம்பரில் அறிமுகமாகிறது புதிய மஹிந்திரா எம்பிவி கார்!!
  2. இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...
  3. அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?
Most Read Articles
English summary
Maruti Suzuki Creates another Record. Read in tamil
Story first published: Monday, July 23, 2018, 16:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X