இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்

இந்தியாவில் சமீப காலமாக எஸ்யூவி கார்கள் மீது மவுசு அதிகமாககியுள்ளது. இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவில் எஸ்யூவி கார் மாடல்களை களம் இறுக்க துவங்கியுள்ளது. 2018ம் ஆண்டின் முதல் பாதியில் ஆடி, வா

By Balasubramanian

இந்தியாவில் சமீப காலமாக எஸ்யூவி கார்கள் மீது மவுசு அதிகமாககியுள்ளது. இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவில் எஸ்யூவி கார் மாடல்களை களம் இறுக்க துவங்கியுள்ளது. 2018ம் ஆண்டின் முதல் பாதியில் ஆடி, வால்வோ, மிட்சுபிஸி, மஹிந்திரா, பிஎம்டபிள்யூ, ஹூண்டாய், லேண்ட் ரோவர் ஆகிய நிறுவனங்கள் சில எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்தினர். இந்நிலையில் 2018ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகவுள்ள கார்களை பற்றி கீழே காண்போம்.

இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்

டட்சன் எஸ்யூவி

டட்சன் நிறுவனம் தனது முதல் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த காரை கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமானது. முதலில் இந்த கார் இந்தோனேஷியாவிலற் விற்பனை செய்யப்பட்டு தற்போது இந்தியாவிற்கு வருகிறது. இந்தியாவின் பண்டிகை காலத்தில் இந்த காரை அறிமுகப்படுத்தலாம் என அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் ரெனால்ட் நிறுவனத்தின் சிஎம்எப்-ஏ பிளாட்பார்மில் தயாரிக்கப்படுகிறது. இதே இன்ஜின் மற்றும் பிளாட் பார்மில் தான் டட்சன் கோ மற்றும் கோ+ ஆகிய கார்களும் தயாரிக்கப்பட்டது. இந்த கார் ரூ 6 - 8 லட்சம் முதல் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த கார் இந்தாண்டுஇறுதிக்குள் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கலாம்.

இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்

ஃபோர்டு என்டோவர் ஃபேஸ் லிப்ட்

ஃபோர்டு என்டோவர் கார் கடந்த 2016ம் ஆண்டு மாற்றியமைக்கபட்டது. அதன் பின் அதனுடைய ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் இந்தாண்டு அறிமுகமாகிறது. ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை பொருத்தவரை நிறைய அப்டேட்களை பெற்றுள்ளது. புதிய பம்பர்கள், ஹெட்லைட், க்ரிலில் சிறிய மாற்றங்கள். 20 இன்ச் அலாய் வீல்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 180 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 10 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ 27 லட்சத்திற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்

ஹோண்டா சிஆர்-வி

ஹோண்டாவின் புதிய தலைமுறை சிஆர்-வி கார் கடந்த பிப். மாதம் நடந்த ஆட்டோஎக்ஸ்போவில் அறிமுகமாகியது. இந்த கார் இந்தாண்டு இறுதியில் அறிமுகமாகிறுது. சிஆர்-வி கார் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 120 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். தற்போது உள்ள மாடலில் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்ட்டுள்ளது.

இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்

டிசைனை பொருத்தவரை பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. தற்போது உள்ள மாடலை விட புதிய மாடலில் அதிக சொகுசு வசதிகள் உள்ளது. காரின் டைமன்ஷன் அதிகமாகியுள்ளது. இதனால் உட்புறத்தில் அதிக இட வசதி இருக்கிறது. இதனால் மூன்றாவது ஒரு வரிசை இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. இதன் விலை ரூ 26 லட்சம் வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்

ஹூண்டாய் கர்லினோ

ஹூண்டாய் நிறுவனத்தின் கர்லினோ கப் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆட்டோ எக்ஸ்போ 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது. மாருதி சுஸூகி விட்டாரா ப்ரீஸ்ஸா, டாடா நெக்ஸான் , ஃபோர்டு எக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த காரை அறிமுகப்படுத்துகிறது.

இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்

ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை தற்போது எஸ்யூவிகாரை அதிகமாக விற்பனை செய்தால் தான் மார்கெட்டில் தங்கள் இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். டிசைனை பொருத்தவரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்டப்பட்ட டிசைனை மாற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும். அந்நிறுவனம் அறிமுகப்பட்டவுள்ள ஐ30 காரை ஒத்து இந்த டிசைனும் இருக்கும் என எதிர்பார்க்கலாம் இந்தகாரின் விலை ரூ8 லட்சம் வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்தாண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்

புதிய ஹூண்டாய் சாண்டா எப்இ

ஹூண்டாய் சாண்டா எப்இ என்ற காரை ஜெனிவா மோட்டார் ஷோ வில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிறுவனம் இந்த காரில் ஹைபிரிட்

ஷெர்ஷனை வெளியிட முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் 5 மற்றும் 7 சீட்டர்கள் ஆகிய ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்கள் உள்ளன.

இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்

இந்த காரின் டைமென்ஷனை பொருத்தவரை நீளம் 4750 மிமீ அகலம் 1879 மிமீ ஆகிய டைமென்ஷன் வீல் பேஸ் 2766 மிமீ கொடுக்கப்பட்டுள்ளது. இன்ஜின்னை பொரத்தவரை 3 ஆப்ஷன்கள் உள்ளன. 2.4 லிட்டர் ஜிடிஐ, 2 லிட்டர் டர்போர்ஜ் பெட்ரோல் இன்ஜின் 2.2 லிட்டர் சிஆர்டிஐ டர்போசார்ஜ் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ 30 லட்சம் வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் வரும் டிசம்பர மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்

டாடா ஹார்ரியர்

டாடா நிறுவனம் கடந்த பிப் மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் நவம்பர் மாதம் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் மொழிற்ல் உருவாக்கப்படுகிறது.

இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்

இந்த கார் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரில் ஃபியட் நிறவனத்தின் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சீடல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 140 எச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் மற்றும் ஆட்டோ கியர் ஆப்ஷன்களும் கிடைக்கிறது. இந்த கார் ரூ 12 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.,

இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்

ஹூண்டாய் டக்சன்

ஹூண்டாய் நிறுவனம் டக்சன் காரின் ஃபேஸ் லிப்ட் வெர்ஷனை கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் அறிமகப்படுத்தினர். இந்தாண்டு இறுதியிலோ அடுத்தாண்டோ இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்த ஃபேஸ்லிபட்ட வெர்ஷனில் சில அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்

காரின் உட்புறத்தில் டிசைனில் மாற்றம்செய்ப்டடுள்ளது. காரின் இன்ஜினை பொருத்தவரை தற்போது 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது 2.4 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இதில் 6 ஸ்பீடுஆட்டேமெட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ 26 லட்சம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜன., மாதம் முதல் இந்த கார் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில்அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. எஸ்யூவி மீது பெட் கட்டும் கியா மோட்டார்ஸ்: 5 கார் மாடல்களை களமிறக்குகிறது!!
  2. போர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு..
  3. புதிய ஹோண்டா சிவிக் காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்?
  4. 2018 மாடல் அவியேட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்; விலை: ரூ 55,157
  5. அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் !!
Most Read Articles
English summary
Upcoming SUVs In India In 2018. Read in Tamil
Story first published: Friday, July 27, 2018, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X