இந்த காருக்கு ஆயில் மாற்ற ரூ15 லட்சம் செலவு; இதுக்கு புது காரே வாங்கிறலாமே

உலகிலேயே அதிகவேக காராகவும், சிறந்த பெர்பாமென்ஸ் வழங்ககூடிய காராகம் பார்க்கப்படும் புகாட்டி நிறுவனத்தின் வேரான் காரிற்கு ஆயில் மாற்ற ரூ 15 லட்சம் செலவாகுமாம் இந்த விலை இன்றைய பல சொகுசு கார்களின் விலைய

By Balasubramanian

உலகிலேயே அதிகவேக காராகவும், சிறந்த பெர்பாமென்ஸ் வழங்ககூடிய காராகம் பார்க்கப்படும் புகாட்டி நிறுவனத்தின் வேரான் காரிற்கு ஆயில் மாற்ற ரூ 15 லட்சம் செலவாகுமாம் இந்த விலை இன்றைய பல சொகுசு கார்களின் விலையாகும். இந்த காருக்கு ஆயில் மற்றுவதற்கு பதிலாக புதிய காரையே வாங்கிவிடலாம் போல

இந்த காருக்கு ஆயில் மாற்ற ரூ15 லட்சம் செலவு; இதுக்கு புது காரே வாங்கிறலாமே

வாகனம் பயன்படுத்துபவர் எல்லோருக்கும் தெரியும் வாகனத்தில் சரியான கால இடைவெளியில் ஆயில் மாற்றுவது எவ்வளவு முக்கியம் என்று சரியான இடைவெளியில் ஆயில் மாற்றவில்லை என்றால் கார் பெர்பாமென்ஸ் கடுமையாக பாதிப்படும் மேலும் தொடர்ந்து ஆயில் மாற்றமலேயே காரை ஓட்டினால் காரில் உள்ள ஒவ்வொரு பாகமாக பாதிப்பு ஏற்படும்.

இந்த காருக்கு ஆயில் மாற்ற ரூ15 லட்சம் செலவு; இதுக்கு புது காரே வாங்கிறலாமே

இப்படியாக நம் காருக்கு ஆயில் மாற்றுவதற்கு சாதாரண கார்களுக்கு ரூ 2-3 ஆயிரம் வரையிலும், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற கார்களுக்கு அதிகபட்சம் ரூ 10 ஆயிரம் வரையிலும் செலவு ஆகலாம். ஒவ்வொரு காரை பொருத்தும் இது மாற்றம் பெறும்.

இந்த காருக்கு ஆயில் மாற்ற ரூ15 லட்சம் செலவு; இதுக்கு புது காரே வாங்கிறலாமே

ஆனால் உலகின் சூப்பர் காராகவும், உலகின் அதிக வேக காராகவும் உள்ள புகாட்டி வேரான் காரில் ஆயில் மாற்றப்பட வேண்டுமா? அப்படியாக ஆயில் மாற்ற வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும் தெரியுமா? வாருங்கள் இந்த செய்தியில் இது குறித்த முழு தகவல்களை பார்க்கலாம்.

இந்த காருக்கு ஆயில் மாற்ற ரூ15 லட்சம் செலவு; இதுக்கு புது காரே வாங்கிறலாமே

ஒரு புகாட்டி வேரான் காருக்கு கட்டாயம் ஆயில் மாற்றப்பட வேண்டும் அதுவும், மற்ற கார்களை போல கம்பஷன் இன்ஜினில் தான் இயங்குகிறது. இந்த காருக்கு ஆயில் மாற்ற இந்திய மதிப்பில் ரூ 15 லட்சம் வரை செலவாகிறது. ஆம் இந்த விலைக்கு ஒரு நல்ல எஸ்யூவி காரையே வாங்கி விடலாம்.

இந்த காருக்கு ஆயில் மாற்ற ரூ15 லட்சம் செலவு; இதுக்கு புது காரே வாங்கிறலாமே

உலகிலேயே சிறந்த பெர்பாமென்ஸை தரக்கூடிய காராக இந்த கார் பார்க்கப்படுகிறது. பலர் இந்த காரை சமூகத்தில் தங்களின் மரியாதையை பெறவே வைத்திருக்கிறார்கள். ஆதே நேரத்தில் இந்த காருக்கு ஆயில் மாற்றுவதில் உள்ள வேலைகளை கேட்டால் உங்களுக்கு புரியும் ஏன் இவ்வளவு விலை என.

இந்த காருக்கு ஆயில் மாற்ற ரூ15 லட்சம் செலவு; இதுக்கு புது காரே வாங்கிறலாமே

27 மணி நேர வேலை

இந்த புகாட்டி வேரான் காரில் 16 இடங்களில் தற்போது காருக்குள் இருக்கும் ஆயிலை வெளியேற்றும் பகுதி இருக்கிறது. இந்த பகுதிகள் எல்லாம் காருக்கு அடியில் தான் இருக்கிறது. காரின் ஆயிலை மாற்றும் காலம் வரும் போது காரின் பின் பக்கம் உள்ள ரியர் ஃபென்டர் லைனர், ரியர் டெக், ஆகியவற்றை அகற்றி தான் அந்த ஆயிலை அகற்ற வேண்டும் அதன் பின் தான் புதிய ஆயிலை ஊற்ற முடியும். இந்த பணி ஆரம்பித்து முடிக்க குறைந்த பட்சம் 27 மணி நேரம் ஆகும்.

இந்த காருக்கு ஆயில் மாற்ற ரூ15 லட்சம் செலவு; இதுக்கு புது காரே வாங்கிறலாமே

புகாட்சி வேரான் காருக்கு ஆயில் மாற்றுவது அதிக விலை உள்ள காரியம் மட்டும் அல்ல அதிக நேரம் எடுக்கும் காரியம் ஆனால் உங்களிடம் புகாட்டி வேரான் காரை வாங்கும் அளவிற்கு பணம் இருந்தாலோ அப்படியே வாங்கினாலும் அதற்கு ஆயில் மாற்றும் அளவிற்கு பணம் இருந்தாலோ நீங்கள் இந்த நேரத்தை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.

இந்த காருக்கு ஆயில் மாற்ற ரூ15 லட்சம் செலவு; இதுக்கு புது காரே வாங்கிறலாமே

இந்த காரையே வாங்க முடிந்த உங்களுக்கு வேறு கார்களே இல்லாமலா போய்விடும் இரண்டு நாட்ளுக்கு அந்த கார்களை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் இதில் வருத்தப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் இந்தியாவில் புகாட்டி வேரான் கார் யாரிடமும் இல்லை என்பதே.

இந்த காருக்கு ஆயில் மாற்ற ரூ15 லட்சம் செலவு; இதுக்கு புது காரே வாங்கிறலாமே

இதன் மூலம் நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் டிப்ஸ் என்றவென்றால் நீங்கள் உங்களுக்கான காரை வாங்கும் போது அதற்கான பராமரிப்பு செலவையும் நம்மால் செய்ய முடியுமா என்பதை யோசித்து கொள்ளுங்கள் ஒவ்வொரு மாடல் காருக்கும் ஒவ்வொரு விதமான பராமரிப்பு செலவாகும் அதை தெரிந்து கொண்டு உங்கள் காரை தேர்ந்தெடுங்கள்.

இந்த காருக்கு ஆயில் மாற்ற ரூ15 லட்சம் செலவு; இதுக்கு புது காரே வாங்கிறலாமே

காருக்கான பராமரிப்பு சரியான செய்யவில்லை என்றால் கார் தனது முழு திறனை வெளிப்படுத்தாது. இதனால் பராமரிப்பு என்பது அவசியம். சிலர் கெத்தாக இருக்க வேண்டும் என அதிக விலை கார்களை வாங்கிவிட்டு அதை பராமரிக்க முடியாமல் அந்த காரை வீணடிக்கிறார்கள். அவர்களின் பட்டியலில் உங்களையும் சேர்த்துக்கொள்ளாதீர்கள்

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிகப்படும் செய்திகள்

  1. புதிய மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன!
  2. துணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்.. பல லட்சங்களை செலவழித்து அரசு வாங்கியது..
  3. சீனா, கொரியாவிற்கு போட்டியாக தமிழகத்தில் தயாரிப்படும் லித்தியம் இயான் பேட்டரிகள்
  4. மாருதி நெக்ஸா கார்களுக்கு புதிய ஜிபிஎஸ் சாதனம் அறிமுகம்!!
  5. அட நீங்களுமா? அனல் பறக்கும் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த பியாஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு..

More from DriveSpark

Article Published On: Wednesday, July 25, 2018, 14:43 [IST]
English summary
its cost rs15 lakhs for bugati veyron's oil change. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+