அட இந்த காரின் பெயரை இப்படி தான் சொல்லனுமா? இது தெரியாம போச்சே இத்தனை நாளா...

நாம் தினந்தோறும் கார் குறித்தும் கார் நிறுவனங்கள் குறித்து பேசி வருகிறோம், வாகனங்கள் என்பது ஒவ்வொரு மனிதன் அன்றாட பயன்பாட்டில் ஒன்றாக மாறிவிட்டது. அதனால் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் உலகளவில்

By Balasubramanian

நாம் தினந்தோறும் கார் குறித்தும் கார் நிறுவனங்கள் குறித்து பேசி வருகிறோம், வாகனங்கள் என்பது ஒவ்வொரு மனிதன் அன்றாட பயன்பாட்டில் ஒன்றாக மாறிவிட்டது. அதனால் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் உலகளவில் பெரும் வளர்ச்சியை கண்டு வருகின்றனர்.

அட இந்த காரின் பெயரை இப்படி தான் சொல்லனுமா? இது தெரியாம போச்சே இத்தனை நாளா...

சில வாகனங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். சில வாகனங்களை வாங்க வேண்டும் கனவு காண்கிறோம், சில வாகனங்களில் நாம்மால் வாழ்வில் ஒரு நாளாவது பயணித்து விட முடியுமா என்று யோசிக்கிறோம். இவை ஒவ்வொருவருக்கும் அவரவர் பொருளாதார நிலை பொருத்து மாறும்.

அட இந்த காரின் பெயரை இப்படி தான் சொல்லனுமா? இது தெரியாம போச்சே இத்தனை நாளா...

இப்படியாக நம் வாழ்வாகவும், கனவாகவும் உள்ள இந்த கார்களை தயாரிக்கும் நிறுவனங்களின் பெயரை கூட நாம் வாழ்நாளில் சரியாக உச்சரிப்பதில்லை, இதற்கு முக்கிய காரணம் மொழிகளில் உள்ள வேறுபாடு, கார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள மொழிகளில் பெயர் வைக்கப்படுகிறது.

அட இந்த காரின் பெயரை இப்படி தான் சொல்லனுமா? இது தெரியாம போச்சே இத்தனை நாளா...

அதை நம்மொழியில் மாற்றும் போது அதன் பெயரை நாம் தவறாக உச்சரிக்கிறோம் அந்த வகையில் எந்தெந்த நிறுவனங்களின் பெயர்களை நாம் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை கீழே காணலாம்.

ஃபோக்ஸ்வாகன்

இந்த லிஸ்டில் முதல் இடம் பிடிப்பதே ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தான். இது ஜெர்மன் நாட்டு நிறுவனம் பலர் இந்த கார் நிறுவனத்தை வோக்ஸ்வேகன் என்று உச்சரிப்பாகர்கள் இதற்கு முக்கிய காரணம் இந்த நிறுவனத்தின் பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது முதல் எழுத்தாக V என்ற எழுத்து வருகிறது. ஜெர்மனை பொருத்தவரை V என்பதை F என்று தான் உச்சரிப்பர், அதனால் இந்த கார் நிறுவனத்தின் பெயரை உச்சரிக்கும் போது ஃபோக்ஸ்வாகன் என்று தான் உச்சரிக்க வேண்டும்.

ஆடி

ஆடி கார் நிறுவனமும் ஜெர்மன் நாட்டை சேர்ந்தது தான். இந்த கார் நிறுவனத்தை நம்மில் பலர் ஆடி என்று உச்சரிக்கின்றனர. ஆனால் இந்த கார் நிறுவனத்தின் பெயரை அ வ் டி என்று தான் உச்சரிக்க வேண்டும் அழுத்தை பார்க்கும் போது ஆடி என்று இருக்கும் ஆனால் உச்சரிக்கும் போது அவ்டி என்று உச்சரிக்க வேண்டும்.

மெர்சிடஸ்

மெர்சிடஸ் கார் நிறுவனமும் ஜெர்மன் நாட்டை சேர்ந்தது தான். ஆனால் இந்த மெர்சிடஸ் என்பது ஸ்பெனிஷ் வார்த்தை நம்மில் பலர் இந்த நிறுவனத்தின் பெயரை மெர்சிடிஸ் என்று உச்சரித்து வந்தோம் ஆனால் இந்த கார் நிறுவனவத்தின் மெர் சிட் எஸ் என்று தான் உச்சரிக்க வேண்டும்.

போர்ஷே

பலர் ஆங்கிலத்தில் இந்த கார் நிறுவனத்தின் பெயரை பார்த்தவுடன் போர்சி, அல்லது போர்ஷ் என்று உச்சரிக்கின்றனர். ஆனால் இந்த நிறுவனத்தின் பெயரை போர்ஷே என்று உச்சரிப்பது தான் சரி.

பிஎம்டபிள்யூ

ஆங்கிலத்தில் இந்த வார்த்தைகளை பார்க்கும் போது பிஎம்டபிள்யூ என்ற சொல் தான் தெரியும் ஆனால் இந்த கார் நிறுவனத்தின் பெயரை பேஎம்வே என்ற உச்சரிப்பில் தான் அழைக்கிறார்கள். ஜெர்மனிய நாட்டில் இது தான் உச்சரிப்பாம்.

ரெனால்ட்

இந்த கார் நிறுவனத்தின் பெயரை ஆங்கிலத்தில் உள்ளது படியே ரெனால்ட் என்று எழுதுகிறோம் ஆனால் இதை உச்சரிக்கும் போது L மற்றும் T ஆகிய சொற்களை உபயோகிக்ககூடாது. மற்றும் A மற்றும் U என்ற வார்த்தைகளை சேர்த்து O என்று உச்சரிக்க வேண்டும் மொத்தத்தில் இந்த கார் நிறுவனத்தின் பெயரை ரெனோ என்று தான் உச்சரிக்க வேண்டும்.

அட இந்த காரின் பெயரை இப்படி தான் சொல்லனுமா? இது தெரியாம போச்சே இத்தனை நாளா...

ப்யூஜ்ஜோ

இந்த கார் நிறுவனத்தின் பெயரை அவ்வளவாக கேள்வி பட்டிருக்க முடியாது. இது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம். விரைவில் தங்கள் காரை இந்தியாவில் விற்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கார் நிறுவனத்தின் பிரான்ஸ் மொழியில் இருப்பதால் இதை அந்த மொழியில் உச்சரிக்கும் படியே உச்சரிக்க வேண்டும். இதன் ஆங்கில வார்த்தையில் உள்ள E மற்றும் T இங்கு சைலன்டாக செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் பெயரை ப்யூஜ்ஜோ என்று உச்சரிக்க வேண்டும்.

ஹூண்டாய்

ஹூண்டாய் கார் நிறுவனம் இந்தியாவில் மிகவும் பிரபலமானது. பலர் இந்த காரை ஹூண்டாய் என்று தான் உச்சரிக்கின்றனர். ஆனால் இதன் சரியான உச்சரிப்பு என்பது ஹண்டேய் என்று தான் இருக்க வேண்டும்.

ஃபியட்

ஃபியட் கார் நிறுவனத்தின் பெயர் இந்தியா முழுவதும் பல ஆண்டுகளாக பிரபலமான நிறுவனம் ஆனால் இந்த நிறுவனத்தின் பெயருக்கு ஃபியா அட் என்ற உச்சரிப்பு தான் சரி

செவ்ரோலேட்

அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான பிராண்டான செவ்ரோலேட் காரும் இந்தியாவில் மிக பிரபலமான நிறுவனம் தான். ஆனால் இந்த பெயரை இந்தியர்கள் பலர் தவறாகவே உச்சரிக்கின்றனர். சேவ் ரூ லேய் என்ற உச்சரிப்பே சரியான உச்சரிப்பு. ஆங்கிலத்தில் வரும் T என்ற எழுத்தை உச்சரிக்க கூடாது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. வாகன புகையில் இருந்து உயிர்களை காக்கும் இந்திய இளைஞரின் அடடே டிவைஸ்!
  2. இனி ரூ 1.15 செலவில் 1 கிமீ பயணிக்கலாம் மஹிந்திரா நிறுவனம் அசத்தல் ; பெட்ரோல் விலை உயர்வுக்கு தீர்வு
  3. நாள் ஒன்றுக்கு 689 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை... புதிய சாதனை
  4. தேர்தலை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு மரங்களை வெட்ட தமிழக அரசு தாராளம்-மத்திய அமைச்சர் பாராட்டு!
  5. கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக் இந்தியாவில் அடுத்த ஆண்டு ரிலீஸ்; ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்பு
Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
10 car names you’ve been pronouncing Wrong all this while. Read in Tamil
Story first published: Friday, June 15, 2018, 18:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X