இனி ரூ 1.15 செலவில் 1 கிமீ பயணிக்கலாம் மஹிந்திரா நிறுவனம் அசத்தல் ; பெட்ரோல் விலை உயர்வுக்கு தீர்வு

ரூ1.15 செலவில் 1 கி.மீ. தூரம் பயணிக்கும் வகையில் மஹிந்திரா நிறுவனம் தனது இவெரிட்டோ என்ற எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ளது.

By Balasubramanian

ரூ1.15 செலவில் 1 கி.மீ. தூரம் பயணிக்கும் வகையில் மஹிந்திரா நிறுவனம் தனது இவெரிட்டோ என்ற எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ளது. இந்த காரின் பேட்டரி முழு சார்பில் 140 கி.மீ வரை பயணம் செய்யும், மேலும் 1.75 மணி நேரத்தில் 80 சதவீத சார்ஜ் ஏறி விடும். இந்த கார் குறித்த முழு விபரங்களை கீழே பார்க்கலாம்.

இனி ரூ 1.15 செலவில் 1 கிமீ பயணிக்கலாம்... மஹிந்திரா நிறுவனம் அசத்தல் ; பெட்ரோல் விலை உயர்வுக்கு நல்ல தீர்வு

மஹிந்திரா நிறுவனத்தின் செடன் காரான வெரிட்டோ காரை எலெக்ட்ரிக் காராக மாற்ற அந்நிறுவனம் முடிவு செய்து இ வெரிட்டோ என்ற பெயரில் எலெக்ரிக் வாகனமாக அந்நிறுவனம் வெளியிட்டு விற்பனை செய்து வருகிறது.

இனி ரூ 1.15 செலவில் 1 கிமீ பயணிக்கலாம்... மஹிந்திரா நிறுவனம் அசத்தல் ; பெட்ரோல் விலை உயர்வுக்கு நல்ல தீர்வு

முதற்கட்டமான அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக இஇஎஸ்எல் நிறுவனம் சார்பில் அரசிற்காக இந்த காரை தயாரித்தது. பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த காரை கொண்டு வந்தது. தற்போது இந்த காரின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இ வெரிட்டோ டி2 என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி ரூ 1.15 செலவில் 1 கிமீ பயணிக்கலாம்... மஹிந்திரா நிறுவனம் அசத்தல் ; பெட்ரோல் விலை உயர்வுக்கு நல்ல தீர்வு

இந்த மஹிந்திரா டி2 கார் ரூ 10.11 லட்சத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் சாதாரண வெரிட்டோ காரை போலவே காட்சியளிக்கிறது. இதன் பெட்ரோல் போடும் இடத்தில் மட்டும் பெட்ரோல் குழாய்க்கு பதிலாக சார்ஜ் ஏற்றும் பின் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 16 அம்ப் பிளக் பாயிண்ட் கொண்டு சார்ஜ் ஏற்ற முடியும்.

இனி ரூ 1.15 செலவில் 1 கிமீ பயணிக்கலாம்... மஹிந்திரா நிறுவனம் அசத்தல் ; பெட்ரோல் விலை உயர்வுக்கு நல்ல தீர்வு

வெரிட்டோ காரின் பெயர் பேட்ஜிற்கு முன்பு இ என்ற வார்த்தையை சேர்த்துள்ளனர். இந்த காரில் ரிவைவ் என்ற வசதி பொருத்தப்பட்டுள்ளது. அது நீங்கள் காரில் செல்லும் போது பேட்டரி முழுமையாக தீர்த்தாலும் இதை பயன்படுத்தி நீங்கள் காரை 8 கி.மீ. வரை ஓட்ட முடியும்.

இனி ரூ 1.15 செலவில் 1 கிமீ பயணிக்கலாம்... மஹிந்திரா நிறுவனம் அசத்தல் ; பெட்ரோல் விலை உயர்வுக்கு நல்ல தீர்வு

இந்த கார் எக்கோ மற்றும் பூஸ்ட் ஆகிய இரண்டு மோடுகளில் வருகிறது. இதில் பாதுகாப்பு அம்சமாக ரிமோட் லாக்கிங், கோலப்சபிள் அம்சம், டிரைவருக்கான ஏர் பேக், ஆட்டோ டோர் லாக், இம்மொபிலைசர், ஹில்ஹோல்டு, 2 சார்ஜிங் போர்டில் ஒன்று பாஸ்ட் சார்ஜிங், உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் உள்ளது.

இனி ரூ 1.15 செலவில் 1 கிமீ பயணிக்கலாம்... மஹிந்திரா நிறுவனம் அசத்தல் ; பெட்ரோல் விலை உயர்வுக்கு நல்ல தீர்வு

இந்த காரின் லுக் வழக்கமான வெரிட்டோ காரின் லுக்காக இருந்தாலும், இன் இன்டீரியரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் கியர், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய மாற்றப்பட்டுள்ளது.

இனி ரூ 1.15 செலவில் 1 கிமீ பயணிக்கலாம்... மஹிந்திரா நிறுவனம் அசத்தல் ; பெட்ரோல் விலை உயர்வுக்கு நல்ல தீர்வு

ஹீட்டிற்கு கீழே 3 பேஸ் ஏசி இன்டெக்ஷன் மோட்டார், பொறுத்தப்பட்டுள்ளது. இதற்கு 1.55 கிலோ வாட் லித்தியம் இயான் பேட்டரி மூலம் பவர் வழங்கப்படுகிறது.

இனி ரூ 1.15 செலவில் 1 கிமீ பயணிக்கலாம்... மஹிந்திரா நிறுவனம் அசத்தல் ; பெட்ரோல் விலை உயர்வுக்கு நல்ல தீர்வு

காரின் மோட்டாரை பொருத்தவரை அதிகபட்சமாக 45 எச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த கார் முழு சார்ஜில் 140 கி.மீ. வரை செல்லும் அதிகபட்சமாக 86 கி.மீ வேகம் வரை செல்லமுடியும். 0-60 கி.மீ. வேகத்தை 11.2 நொடிகளில் சென்றுவிடும்.

இனி ரூ 1.15 செலவில் 1 கிமீ பயணிக்கலாம்... மஹிந்திரா நிறுவனம் அசத்தல் ; பெட்ரோல் விலை உயர்வுக்கு நல்ல தீர்வு

இந்த காரில் பேட்டரி 11.5 மணி நேரத்தில் முழு சார்ஜை பெற்று விடும். அதே நேரத்தில் 1மணி நேரம் 45 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜ் ஏற்றப்பட்டு விடும். மேலும் பாஸ்ட் சார்ஜிங்கை பயன்படுத்தினால் இன்னும் வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.

இனி ரூ 1.15 செலவில் 1 கிமீ பயணிக்கலாம்... மஹிந்திரா நிறுவனம் அசத்தல் ; பெட்ரோல் விலை உயர்வுக்கு நல்ல தீர்வு

இந்த மஹிந்திரா இ வெரிட்டோ கார் புதுடில்லி, மும்பை, பெங்களூரு, புனே, கொல்கத்தா, சண்டிகர், ஐதராபாத், ஜெய்பூர், மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் குறித்த வீடியோவை கீழே பாருங்கள்

இந்த கார் சுற்றுசுழலுக்கு மிக மிக குறைந்த அளவு மாசை மற்றுமே ஏற்படுத்துகிறுது. இந்த காரில் பயணம் செய்ய ஒரு கி.மீ. 1.15 ரூபாய் மட்டுமே செலவாகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Source: Namaste Car

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra eVerito D2 electric sedan: Check it inside-out on video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X