ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விலை 3 சதவீதம் ஏற்றம்..!
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது கிராண்ட் ஐ10 காரின் விலையை 3 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது கிராண்ட் ஐ10 காரின் விலையை 3 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனம் இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாகவும், கார் தயாரிப்பிற்கான செலவு மற்றும் போக்குவரத்து செலவுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 காரின் இன்ஜினை பொருத்தவரை பெட்ரோல் இன்ஜின் 1197 சிசி, 1186 சிசி டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கிறது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் ஆப்ஷன்கள் கிடைக்கிறது

இந்தகாரில் முன்பக்கமும், பின்பக்கமும் பவர் விண்டோ, 256 லிட்டர் பூட் ஸ்பேஸ், டிரைவர், மற்றும் முன் சீட்டில் இருப்பவர்களுக்கான ஏர்பேக்ஆகிய வசதிகளுடன் பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏபிஎஸ்வசதியும் இருக்கிறது. மேலும் பாதுகாப்பிற்காக சென்ட்ரல் லாக்கிங் வசதியும் இதில் உள்ளது.

இந்த கார் லிட்டருக்கு 18.9-24 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கிறது. இதில் மொத்தம் 12 விதமான வேரியன்ட்கள் விற்பனையாகிறது. இதில் இரண்டு வேரியன்டகளில் மட்டும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன் இருக்கிறது.

மேலும் 5 வேரியன்ட்களில் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களும் கிடைக்கிறது. ஒவ்வொரு வேரியட்டிற்கும் உட்கட்டமைப்பு வசதிகள், சில அம்சங்கள், உள்ளிட்ட சில சில மாற்றங்களுடன் விற்பனையாகி வருகிறது. இதில் ஏபிஎஸ் வசதி இல்லாத கார்களும் விற்பனையாகிறது.

இதன் விலையை பொருத்தவரை ரூ 4.74 லட்சத்தில் இருந்து ரூ 7.52 லட்சம் வரை விற்பனையாகிறது. மைலேஜை பொருத்தவரை பெட்ரோல் வேரியன்டிற்கு 18.9 கி.மீ மற்றும் டீசல் வேரியன்ட்டிற்கு 24 கி.மீ. மைலஜூம் கிடைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் ஹோண்டா நிறுவனமும் அந்த நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு ரூ 10,000 முதல் ரூ 35,000 வரை விலையை இதே காரணங்களுக்காக அதிகரித்துள்ளது. அதுவும் வரும் ஆகஸ்ட் மாதம் தான் விற்பனைக்கு வருகிறது.

இதே போல பல சொகுசு கார் தயாரிப்பாளர்களான ஆடி, மெர்ஸிடிஸ், ஜாக்குவர் லேண்ட்ரோவர், ஆகிய நிறுவனங்களும் இறக்குமதி வரிகளை காரணம் காட்டி தங்கள் காரின் விலைகளை கடந்த ஏப்., மாதமே அதிகரித்தது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
- புதிய ஹோண்டா பிரியோ கார் அறிமுக விபரம்!!
- இந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்
- ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது
- புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் மாடலின் இந்திய வருகை விபரம்!!
- உங்கள் காரின் ஆயுளை ஆதிகரிக்க இதை செய்தால் போதும்..!


Click it and Unblock the Notifications








