விபத்து பலத்த சேதமடைந்த லேம்போர்கினி; கல்லு போல நின்ற ஹோண்டா சிவிக்
ஹோண்டா சிவிக் கார் மீது லேம்போர்கினி கார் மோதியதில் லேம்போர்கினி கார் பலத்த சேதமடைந்தது. ஆனால் ஹோண்டா சிவிக் காருக்கு பாதிப்புகள் எதுவும் இல்லாமல் கெத்தாக நின்றது. அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் ய
ஹோண்டா சிவிக் கார் மீது லேம்போர்கினி கார் மோதியதில் லேம்போர்கினி கார் பலத்த சேதமடைந்தது. ஆனால் ஹோண்டா சிவிக் காருக்கு பாதிப்புகள் எதுவும் இல்லாமல் கெத்தாக நின்றது. அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. லேம்போர்கினி போன்ற கார்களில் வேகம் இருந்தாலும் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாகவே இருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ பகுதியை சேர்ந்த ரிச்சி என்பவர் தனது லேம்போர்கினி காரில் ஒரு உணவு விடுதிக்கு சாப்பிட சென்றுள்ளார். காரை பார்க்கிங்கில் விட்டு விட்டு சாப்பிட சென்றார்.

இவர் திரும்பி வரும் போது இவரது காருக்கு முன்னாள் ஒரு நீல நிற ஹோண்டா சிவிக் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்பொழுது தன் காரை எடுக்கும் போது எதிர்பாராத விதமாக வேகமாக சென்று எதிரில் இருந்த ஹோண்டா சிவிக் கார் மீது ரிச்சி தனது லேம்போர்கினி காரால் மோதினார்.

அப்பொழுது லேம்போர்கினி மோதிய வேகத்தில் ஹோண்டா சிவிக் கார் லேம்போர்கினி மீது ஏறி நின்றது. ரிச்சி உடனடியாக காரை நிறுத்தினார். இந்த விபத்தில் லேம்போர்கினி காரின் முகப்பு பகுதி முழுவதும் பலத்த சேதமடைந்தது.

அதிஷ்டவசமாக லேம்போர்கினியில் இருந்த ரிச்சி ஏந்த வித காயமும் இன்றி உயிர் தப்பினார். ஹோண்டா சிவிக் காரில் யாரும் இல்லை. இதனால் இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் இரண்டு கார்களும் பலத்த சேதத்திற்கு உள்ளாகின.

விபத்திற்குள்ளான லேம்போர்கினி கார் மேட் பிளாக் நிறத்தில் சிவப்பு நிற வேர்ப்களுடன் கூடியது. மேலும் இது கிளாஸ் பிளாக் வீல்களையும் கொண்டுள்ளது. இது லேம்போர்கினி காரின் ஹராகேன் ஸ்பைடர் ரக கார் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து லேம்போர்கினியை ஓட்டிய ரிச்சி கூறுகையில் : " நான் காரை எடுக்கும் போது முன்னாள் இந்த கார் நின்றதை கவனித்தேன். ஆனால் காரில் ஏறி அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்ததும் பிரேக்கிற்கு பதிலாக லேசாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தி விட்டேன் இதனால் இதனால் என் கார் எதிரில் நின்ற இந்த ஹோண்டா சிவிக் காரின் பின்புறம் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டது. நல்ல வேலையாக அந்த காரில் யாரும் இல்லை. மற்றும் எனக்கும் எதுவும் ஆகவில்லை " என கூறினார்

ஹோண்டா சிவிக் காருக்கு இந்த விபத்தில் சேதங்கள் பெரிய அளவில் இல்லை. லேம்போர்கினி காருக்கு தான் பலத்த சேதமாகியுள்ளது. தற்போது அவரது காரை அவர் மாற்றவுள்ளதாக தெரிகிறது.

பொதுவாக லேம்போர்கினி, ஃபெராரி போன்ற கார்கள் சிறிய விபத்தில் சிக்கினால் கூட பெரிய அளவில் சேதமாகிறது. இதற்கு முக்கிய காரணம் இதன் வேகமும் டிசைவும் தான். கார் வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக காரை தாழ்வானதாக இருக்கும் படி டிசைன் செய்துள்ளனர்.

இதனால் விபத்துக்கள் நடந்தால் வேகமாக சேதமும் அடைகிறது. மேலும் இந்த கார்களின் இன்ஜின் என்பது காரின் பின்புறம் தான் இருக்கும். பொதுவாக இன்டர்னல் கம்பஷன் இன்ஜின்களுக்கு வாகனத்தை முன்னே தள்ளுவதில் தான் அதிக திறன் இருக்கிறது என்பதால் பின்புறம் தான் அமைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற கார்கள் வேகம் தரும் தான் ஆனால் அதற்கு ஏற்ற பாதுகாப்பு என்பது நிச்சயம் இல்லாதது. இந்த ரக கார்களை ஓட்டுபவர்கள் நிச்சயம் கவனமாக ஓட்ட வேண்டும். இந்த ரக கார்களை சரியாக ஓட்ட தெரிந்தால் மட்டுமே ஓட்ட வேண்டும். இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடதக்கது.
- விலை குறைவான 200 சிசி பைக்.. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் டெலிவரி தொடங்கியது.. எக்ஸ் பல்ஸ் வருவது எப்போது
- மாருதி கார்களுக்கான பருவமழை கால சிறப்பு பரிசோதனை முகாம்!!
- விற்பனையில் மாருதி பிரெஸ்ஸாவை ஓவர்டேக் செய்த ஹூண்டாய் க்ரெட்டா!!
- அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் இவ்வளவு கோடிக்கு விற்பனையா? ரசிகர்கள் ஆச்சரியம்...
- அப்ரில்லா ஸ்டிரோம் 125 ஸ்கூட்டர் எப்பொழுது விற்பனைக்கு வருகிறது?


Click it and Unblock the Notifications








