விற்பனையில் மாருதி பிரெஸ்ஸாவை ஓவர்டேக் செய்த ஹூண்டாய் க்ரெட்டா!!

கடந்த மாதம் விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியை விற்பனையில் முந்தியுள்ளது ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியை முந்தியுள்ளது ஹூண்டாய் க்ரெ

By Saravana Rajan

கடந்த மாதம் விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியை விற்பனையில் முந்தியுள்ளது ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸாவை ஓவர்டேக் செய்த ஹூண்டாய் க்ரெட்டா!!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா இருக்கிறது. எனினும், 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மாருதி பிரெஸ்ஸா விலை குறைவான ஆப்ஷன் என்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸாவை ஓவர்டேக் செய்த ஹூண்டாய் க்ரெட்டா!!

இந்த நிலையில், பல்வேறு மாற்றங்களுடன் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கடந்த மே 21ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, இந்த புதிய மாடலுக்கு அதிக முன்பதிவு செய்யப்பட்டது.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸாவை ஓவர்டேக் செய்த ஹூண்டாய் க்ரெட்டா!!

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியை முந்தியுள்ளது ஹூண்டாய் க்ரெட்டா. கடந்த மாதம் 11,111 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிகள் விற்பனையாகி இருக்கின்றன. அதேநேரத்தில், 10,713 மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸாவை ஓவர்டேக் செய்த ஹூண்டாய் க்ரெட்டா!!

இந்த இரண்டு எஸ்யூவி மாடல்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. மாருதி பிரெஸ்ஸா சற்று குறைவான விலை தேர்வாக இருந்தும் கூட ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் விற்பனை மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸாவை ஓவர்டேக் செய்த ஹூண்டாய் க்ரெட்டா!!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இந்தளவுக்கு வரவேற்பை பெற்றதற்கு முக்கிய காரணம், அதன் அசத்தலான டிசைன்தான். வந்த புதிதில் நாம் சொன்னது போல, ஒரு சொகுசு காரை வைத்திருப்பதற்கான இணையான உணர்வை இந்த எஸ்யூவியின் டிசைன் வழங்குகிறது. இந்த காரில் பை- புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள் முக்கிய அம்சங்கள்.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸாவை ஓவர்டேக் செய்த ஹூண்டாய் க்ரெட்டா!!

புதிய டேங்க்ரின் ஆரஞ்ச் வண்ணக் கலவை இன்டீரியர் மிகச் சிறப்பாக இருக்கிறது. இது இரட்டை வண்ணக் கலவை கொண்ட க்ரெட்டா காரில் வழங்கப்படுகிறது. எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் கண்ணாடி கூரை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் இதன் மதிப்பை உயர்த்துகின்றன.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸாவை ஓவர்டேக் செய்த ஹூண்டாய் க்ரெட்டா!!

அத்துடன், வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப எஞ்சின் ஆப்ஷன்களும், கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கொடுக்கப்படுகிறது. இந்த எஸ்யூவியில் 123 பிஎஸ் பவரை அளிக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 90 பிஎஸ் பவரை அளிக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 128 பிஎஸ் பவரை வழங்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸாவை ஓவர்டேக் செய்த ஹூண்டாய் க்ரெட்டா!!

இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பழைய மாடலைவிட பெட்ரோல் மாடலின் எரிபொருள் சிக்கனம் 3 சதவீதம் வரையிலும், டீசல் மாடல்களின் எரிபொருள் சிக்கனம் 4 சதவீதம் வரை கூட்டப்பட்டு இருக்கிறது.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸாவை ஓவர்டேக் செய்த ஹூண்டாய் க்ரெட்டா!!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி 7 விதமான ஒற்றை வண்ண தேர்வுகளிலும், இரண்டு விதமான இரட்டை வண்ணக் கலவையிலும் கிடைக்கிறது. மெரினா புளூ, பேஸன் ஆரஞ்ச் மற்றும் பேஸன் ஆரஞ்ச் - கருப்பு இரட்டை வண்ணக் கலவைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸாவை ஓவர்டேக் செய்த ஹூண்டாய் க்ரெட்டா!!

புதிய க்ரெட்டா கார் மிக உறுதிவாய்ந்த கட்டுமானத்தை பெற்றிருக்கிறது. அதிகபட்சகமாக 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி பிரேக் நுட்பம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளையும் அளிக்கிறது.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸாவை ஓவர்டேக் செய்த ஹூண்டாய் க்ரெட்டா!!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ரூ.9.44 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து ரூ.15.04 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியுடன் விற்பனையில் போட்டி போடும் இந்த எஸ்யூவி விலை ஜீப் காம்பஸ், ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட மாடல்களுடனும் ரக அடிப்படையில் போட்டி போடுகிறது.

Most Read Articles
English summary
Hyundai Creta Outsells Maruti Brezza in June.
Story first published: Monday, July 9, 2018, 11:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X