இந்திய கார் மார்கெட்டை புரட்டி போட காத்திருக்கும் கார்கள்...

இந்திய கார் சந்தையில் இந்தாண்டு டெயோட்டா யாரீஸ், ஹூண்டாய் க்ரெட்டா, ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட பல கார்கள் அறிமுகமாகி விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. இது போக இன்னும் ஒரு ஆண்டில் பல கார்கள் விற்

By Balasubramanian

இந்திய கார் சந்தையில் இந்தாண்டு டெயோட்டா யாரீஸ், ஹூண்டாய் க்ரெட்டா, ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட பல கார்கள் அறிமுகமாகி விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. இது போக இன்னும் ஒரு ஆண்டில் பல கார்கள் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கார்களும் விற்பனையில் சக்கை போடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை நாம் இங்கே காணலாம்.

இந்திய கார் மார்கெட்டை புரட்டி போட காத்திருக்கும் கார்கள்...

டாடா ஹாரியர்

டாடா நிறுவனம் எச்5எக்ஸ் என்ற கான்சப்ட் காரை கடந்த பிப் மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்த காருக்கு ஹாரியர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த காரின் தயாரிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்கவுள்ளது. இதன் விலை குறித்த விபரங்கள் வரும் ஜன., மாதம் வெளியாகவுள்ளன.

இந்திய கார் மார்கெட்டை புரட்டி போட காத்திருக்கும் கார்கள்...

இந்த கார் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இது 170 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் கொண்டுள்ளது. 5 சீட்டர்கள் கொண்ட இந்த கார் கொடுக்கும் காசுக்கு ஏற்ற சிறந்த காராக கருதப்படும்.

இந்திய கார் மார்கெட்டை புரட்டி போட காத்திருக்கும் கார்கள்...

ஹோண்டா சிவிக்

இந்திய கார் மார்கெட்டில் ஒரு தலைமுறை விற்பனையை கடந்து பல ஆண்டுகள் கொடிகட்டி பறந்த ஹோண்டா சிவிக் கார் தற்போது ஓய்வில் உள்ளது. தனது இரண்டாவது சுற்றிற்கு தன்னை தானே தயார்படுத்தி வருகிறது. இந்தியர்களின் பெரும் உள்ளைத்தை கொள்ளை கொண்ட ஹோண்டா சிவிக் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்திய கார் மார்கெட்டை புரட்டி போட காத்திருக்கும் கார்கள்...

ஹோண்டா நிறுவனம் புதிய சிவிக் காரை கடந்த பிப் மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்தாண்டு இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இதில் 1.8 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 138 பிஎச்பி பவரையும், 174 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. டீசல் வேரியன்டை பொருத்தவரை 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 118 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

இந்திய கார் மார்கெட்டை புரட்டி போட காத்திருக்கும் கார்கள்...

ண்டாய் சான்ட்ரோ

ஒரு காலத்தில் வாழ்வில் முதன் முறையாக கார் வாங்குபவர்களின் கனவாக இருந்த கார் இந்த சான்ட்ரோ இது தற்போது மீண்டும் விற்பனக்கு வருகிறது. இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் தீபாவளியை ஒட்டி விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் நேரடியாக ரெனோ க்விட், டாடா டியாகோ, ஆகிய கார்களுக்கு போட்டியாக திகழ்கிறது.

இந்திய கார் மார்கெட்டை புரட்டி போட காத்திருக்கும் கார்கள்...

புதிய சான்ட்ரோ சற்று அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் காராக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த காரில் 1.1 லிட்டர் 3 சிலிண்டர் கொண்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஐ10 காரிலும் இதே இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஹெட்ச் பேக் காரில் மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளது. மற்ற ஹூண்டாய் காரை போல இந்த காரிலும் இன்டீரியர் செய்யப்படுகிறது.

இந்திய கார் மார்கெட்டை புரட்டி போட காத்திருக்கும் கார்கள்...

டாடா டியாகோ ஜேடிபி

டாடா நிறுவனம் தனது டியாகோ ஜேடிபி காரை கடந்த பிப் மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில்அறிமுகப்படுத்தியது. தற்போது கார் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில்உள்ளது. இந்த கார் விற்பனைக்கு வந்தால் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆக்ஸ்ட் மாதம் தான் இதன் விற்பனையை துவங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்திய கார் மார்கெட்டை புரட்டி போட காத்திருக்கும் கார்கள்...

இந்த காரில் முன்பக்கமும் பின்பக்கமும் மாற்றப்பட்டுள்ள புதி பம்பர்கள் இந்த காருக்கு அக்ரஷிவ் லுக், சாதாரண வேரியன்டில் இருந்து வேறுபட்ட லுக்கை பெறுகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ் 3 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. நெக்ஸான் காரிலும் இதே இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 108 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில்அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. மாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்!
  2. ஆடி க்யூ3, க்யூ 7 டிசைன் எடிசன் அறிமுகம்
  3. டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!!
  4. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விலை 3 சதவீதம் ஏற்றம்..!
  5. 8 ஆயிரம் உயிர்களை காவு கொடுத்து விட்டு சேலம்-சென்னை 8 வழி சாலையா? அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரம்

More from DriveSpark

Article Published On: Wednesday, July 18, 2018, 11:38 [IST]
English summary
5 upcoming cars REALLY worth waiting for: Honda Civic to Tata Harrier. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+