டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!!

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் XZA+ என்ற அனைத்து வசதிகளும் கொண்ட விலை உயர்ந்த வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. தற்போது XMA என்ற நடுத்தர விலை வேரியண்ட் இன்று அறிமுகம் செய

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வேரியண்ட் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!!

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் XZA+ என்ற அனைத்து வசதிகளும் கொண்ட விலை உயர்ந்த வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலை தேர்வு வழங்கும் விதத்தில், நெக்ஸான் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் XMA என்ற நடுத்தர விலை வேரியண்ட் இன்று அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!!

டாடா நெக்ஸான் பெட்ரோல் ஏஎம்டி மாடலின் எக்ஸ்எம்ஏ வேரியண்ட்டிற்கு ரூ.7.53 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் ஏஎம்டி எக்ஸ்எம்ஏ வேரியண்ட் ரூ.8.53 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!!

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் பெட்ரோல் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலின் XZA+ வேரியண்ட்டை விட தற்போது வந்துள்ள எக்ஸ்எம்ஏ வேரியண்ட் ரூ.1.90 லட்சம் வரையிலும், டீசல் எக்ஸ்எம்ஏ வேரியண்ட் ரூ.1.85 லட்சம் வரையிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் வரை குறைவாக வந்துள்ளது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!!

மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் வழங்கப்படும் எக்ஸ்எம் வேரியண்ட்டில் இருக்கும் அதே சிறப்பம்சங்களுடன் இந்த எக்ஸ்எம்ஏ வேரியண்ட் வந்துள்ளது. வெளிப்புற தோற்றத்தில் எந்த மாறுதல்களும் இல்லை. ஏஎம்டி மாடலுக்காக வழங்கப்படும் பேட்ஜ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இந்த வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!!

இதுதவிர, குறைவான வேகத்தில் கார் மெதுவாக நகர்ந்து செல்வதற்கான க்ராவ்ல் ஃபங்ஷன் வசதி, ஸ்மார்ட் ஹில் அசிஸ்ட், இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!!

இந்த எஸ்யூவியில் இருக்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறு. இதனை டாடா நிறுவனம் ஹைப்பர் டிரைவ் சிஸ்டம் என்று குறிப்பிடுகிறது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!!

மாருதி பிரெஸ்ஸா காரின் ஏஎம்டி மாடலில் விடிஐ வேரியண்ட்டுக்கு போட்டியாக இந்த புதிய வேரியண்ட்டை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் டாடா மோட்டார்ஸ் நம்புகிறது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!!

மேலும், டாடா நெக்ஸான் எஸ்யூவிக்கு புதிய ஐவரி ஒயிட் என்ற வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட கூரையுடன் இனி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

Most Read Articles
English summary
Tata has launched a mid-level variant for its automatic variants of the Nexon. The XMA petrol and XMA diesel and are priced at Rs 7.53 lakhs and Rs 8.53 lakhs (ex-showroom Delhi) respectively.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X