இது ஃப்ரெஷ் லிஸ்ட்! இந்த 7 கார்களை வாங்கனும்னா மாச கணக்குல காத்திருக்கனும்! ஏழுமே எஸ்யூவி கார்கள்!

இந்தியாவில் அதிகம் காத்திருப்பு காலம் கொண்டிருக்கும் டாப்7 கார் மாடல்கள் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

இது ஃப்ரெஷ் லிஸ்ட்! இந்த 7 கார்களை வாங்கனும்னா மாச கணக்குல காத்திருக்கனும்! ஏழுமே எஸ்யூவி கார்கள்!

இந்தியர்கள் மத்தியில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் கார் மாடல்களுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதன் விளைவாக அக்குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டும் நாட்டில் அதிக மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இது ஃப்ரெஷ் லிஸ்ட்! இந்த 7 கார்களை வாங்கனும்னா மாச கணக்குல காத்திருக்கனும்! ஏழுமே எஸ்யூவி கார்கள்!

அந்தவகையில், எந்தெந்த நிறுவனத்தின் எந்தெந்த கார் மாடல்களுக்கு எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பது பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இந்த தகவல் 2021 ஜூலை மாத நிலவரப்படி வழங்கப்பட்டுள்ளது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இது ஃப்ரெஷ் லிஸ்ட்! இந்த 7 கார்களை வாங்கனும்னா மாச கணக்குல காத்திருக்கனும்! ஏழுமே எஸ்யூவி கார்கள்!

மஹிந்திரா தார்

நாட்டிலேயே அதிக மாதங்கள் காத்திருப்பு காலம் கொண்டிருக்கும் காராக மஹிந்திரா தார் உள்ளது. இந்த எஸ்யூவி ரக காரை நீங்கள் இப்போது புக் செய்தால் குறைந்தது ஒரு வருடமாவது காத்திருக்க வேண்டும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கல் தெரிவிக்கின்றன. வேரியண்ட், மாநிலம் மற்றும் நகரங்கள் ஆகியவற்றை பொருத்து காத்திருப்பு காலம் மாறுபட்டுக் காணப்படுகின்றது. இந்த கார் குறித்து மேலும் விபரங்களை அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இது ஃப்ரெஷ் லிஸ்ட்! இந்த 7 கார்களை வாங்கனும்னா மாச கணக்குல காத்திருக்கனும்! ஏழுமே எஸ்யூவி கார்கள்!

ஹூண்டாய் க்ரெட்டா

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இந்த காரை நீங்கள் இப்போது புக் செய்தால் அதிகபட்சம் 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இந்த காருக்கான காத்திருப்பு காலமும் வேரியண்ட், மாநிலம் மற்றும் நகரம் ஆகியவற்றைப் பொருத்து மாறுபட்டு காட்சியளிக்கின்றது. இந்த கார் குறித்து மேலும் விபரங்களை அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இது ஃப்ரெஷ் லிஸ்ட்! இந்த 7 கார்களை வாங்கனும்னா மாச கணக்குல காத்திருக்கனும்! ஏழுமே எஸ்யூவி கார்கள்!

நிஸான் மேக்னைட்

நாட்டின் மலிவு விலை கார்களில் மேக்னைட் காரும் ஒன்று. இது ஓர் சப்-4 மீட்டர் ரக எஸ்யூவி ரக காராகும். இந்த காருக்கு காத்திருப்பு காலம் 7 மாதங்கள் வரை உள்ளது. மிக மலிவான விலை, அட்டகாசமான தோற்றம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்த கார் இந்தியர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றது. இந்த கார் குறித்து மேலும் விபரங்களை அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இது ஃப்ரெஷ் லிஸ்ட்! இந்த 7 கார்களை வாங்கனும்னா மாச கணக்குல காத்திருக்கனும்! ஏழுமே எஸ்யூவி கார்கள்!

கியா சொனெட்

கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக சொனெட் உள்ளது. இந்த காரிலும் எக்கசக்க சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றது. ஆகையால், இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் காராக இது மாறியிருக்கின்றது. எனவே இக்காரை புக் செய்தால் அதனைக் கைகளில் பெற 5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த கார் குறித்து மேலும் விபரங்களை அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இது ஃப்ரெஷ் லிஸ்ட்! இந்த 7 கார்களை வாங்கனும்னா மாச கணக்குல காத்திருக்கனும்! ஏழுமே எஸ்யூவி கார்கள்!

கியா செல்டோஸ்

கியா நிறுவனத்தின் மற்றுமொரு அதிகம் விற்பனையாகும் காராக செல்டோஸ் இருக்கின்றது. இந்த எஸ்யூவி காருக்கான காத்திருப்பு காலமும் ஐந்து மாதங்களாக இருக்கின்றது. வேரியண்ட் மற்றும் வசிப்பிடம் பொருத்து இந்த காத்திருப்ப காலத்தில் மாற்றங்கள் தென்படுகின்றன. இந்த கார் குறித்து மேலும் விபரங்களை அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இது ஃப்ரெஷ் லிஸ்ட்! இந்த 7 கார்களை வாங்கனும்னா மாச கணக்குல காத்திருக்கனும்! ஏழுமே எஸ்யூவி கார்கள்!

டாடா நெக்ஸான்

நாட்டின் அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார்களில் டாடா நெக்ஸான் எஸ்யூவி காரும் ஒன்று. இந்த கார் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு திறன் கொண்ட கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கும் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதனால், நாட்டில் நெக்ஸான் காரை பெற வேண்டுமானால் அதிகபட்சம் 5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கின்றது. இந்த கார் குறித்து மேலும் விபரங்களை அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இது ஃப்ரெஷ் லிஸ்ட்! இந்த 7 கார்களை வாங்கனும்னா மாச கணக்குல காத்திருக்கனும்! ஏழுமே எஸ்யூவி கார்கள்!

டாடா சஃபாரி

டாடாவின் மற்றுமொரு அதிகம் காத்திருப்பு காலம் கொண்டிருக்கும் கார் தயாரிப்பாக சஃபாரி எஸ்யூவி இருக்கின்றது. சஃபாரி மாடலுக்கு உயிர்பளிக்கும் விதமாக நீண்ட வருடங்களுக்கு பின்னர் புதிய டிசைன் தாத்பரியங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் அது உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஃப்ரெஷ் லிஸ்ட்! இந்த 7 கார்களை வாங்கனும்னா மாச கணக்குல காத்திருக்கனும்! ஏழுமே எஸ்யூவி கார்கள்!

இந்த வாகனத்திற்கே கடந்த காலத்தைப் போலவே தற்போதும் நல்ல வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஆகையால், இக்காருக்கு 1 முதல் 3 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகின்றது. இந்த கார் குறித்து மேலும் விபரங்களை அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles

English summary
Top 7 SUV Car's With Highest Waiting Period In July 2021. Read In Tamil.
Story first published: Saturday, July 10, 2021, 13:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X