அட்ராசக்கை... முன்பதிவில் பட்டையை கிளப்பும் புதிய டாடா சஃபாரி!

புதிய தலைமுறை டாடா சஃபாரி எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புக்கிங் சிறப்பான எண்ணிக்கையை தொட்டு அசத்தி இருக்கிறது.

அட்ராசக்கை... முன்பதிவில் பட்டையை கிளப்பும் புதிய டாடா சஃபாரி!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ்யூவி மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், அந்நிறுவனம் கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வந்த புதிய தலைமுறை டாடா சஃபாரி எஸ்யூவியும் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.

அட்ராசக்கை... முன்பதிவில் பட்டையை கிளப்பும் புதிய டாடா சஃபாரி!

கடந்த மாதம் 22ந் தேதி புதிய டாடா சஃபாரி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாகவே புக்கிங் துவங்கியது. இந்த சூழலில், இதுவரை 5,000க்கும் மேற்பட்டோர் புதிய டாடா சஃபாரி எஸ்யூவியை முன்பதிவு செய்துள்ளதாக டீம் பிஎச்பி மூலமாக வெளிவந்துள்ள தகவல் தெரிவிக்கிறது.

அட்ராசக்கை... முன்பதிவில் பட்டையை கிளப்பும் புதிய டாடா சஃபாரி!

புதிய டாடா சஃபாரி எஸ்யூவிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருப்பதற்கு அதன் ஆளுமையான டிசைன், விலை, சிறப்பம்சங்கள் முக்கிய காரணங்களாக உள்ளன. ரூ.14.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் புதிய டாடா சஃபாரி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

அட்ராசக்கை... முன்பதிவில் பட்டையை கிளப்பும் புதிய டாடா சஃபாரி!

அடுத்து சந்தையில் மிகவும் வெற்றிகரமான மாடலாக இருந்து வரும் டாடா ஹாரியர் 5 சீட்டர் மாடலின் அடிப்படையிலான 7 சீட்டர் மாடல் என்பதுடன், டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. ஆளுமையான தோற்றம் பார்த்தவுடன் வசீகரித்துவிடுகிறது.

அட்ராசக்கை... முன்பதிவில் பட்டையை கிளப்பும் புதிய டாடா சஃபாரி!

மேலும், சஃபாரி என்ற பழைய மாடலின் பெயரை டாடா மோட்டார்ஸ் பயன்படுத்தியதும் இதற்கு தனி மவுசை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதற்கு தக்கவாறு பழைய மாடலை நினைவூட்டும் சில டிசைன் அம்சங்களையும் சேர்த்துள்ளது.

அட்ராசக்கை... முன்பதிவில் பட்டையை கிளப்பும் புதிய டாடா சஃபாரி!

இந்த காரில் சன்ரூஃப், டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம், டிரைவிங் மோடுகள், 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அட்ராசக்கை... முன்பதிவில் பட்டையை கிளப்பும் புதிய டாடா சஃபாரி!

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

அட்ராசக்கை... முன்பதிவில் பட்டையை கிளப்பும் புதிய டாடா சஃபாரி!

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டி ப்ளஸ், எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ரூ.14.69 லட்சம் முதல் ரூ.21.25 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

அட்ராசக்கை... முன்பதிவில் பட்டையை கிளப்பும் புதிய டாடா சஃபாரி!

டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட பல நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பெற்றுள்ளது.

Most Read Articles

English summary
According to report, Tata Motors has received over 5,000 bookings for new Safari SUV since its launch.
Story first published: Monday, March 15, 2021, 17:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X