புதிய தார் வாகனத்தில் அசத்தலான வசதியை கொண்டுவரும் மஹிந்திரா!! முன்பதிவுகள் ஆல்ரெடி குவியுது!

ஏ.ஆர்.ஏ.ஐ சோதனை கருவிகளுடன் மஹிந்திரா தார் வாகனம் ஒன்று பொது சாலையில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய தார் வாகனத்தில் அசத்தலான வசதியை கொண்டுவரும் மஹிந்திரா!! முன்பதிவுகள் ஆல்ரெடி குவியுது!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மஹிந்திரா தார் வாகனத்திற்கான முன்பதிவுகள் கடந்த அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட்டன.

புதிய தார் வாகனத்தில் அசத்தலான வசதியை கொண்டுவரும் மஹிந்திரா!! முன்பதிவுகள் ஆல்ரெடி குவியுது!

மிக குறுகிய காலத்தில் முன்பதிவில் சாதனை படைத்த 2020 தாருக்கான முன்பதிவுகள் கடந்த ஜனவரி மாதத்தில் 39 ஆயிரத்தை கடந்து ஆச்சிரியப்படுத்தின. இந்த வகையில் பார்த்தோமேயானால் இந்த வாகனத்திற்கு தினமும் 200ல் இருந்து 250 வரையில் முன்பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிய தார் வாகனத்தில் அசத்தலான வசதியை கொண்டுவரும் மஹிந்திரா!! முன்பதிவுகள் ஆல்ரெடி குவியுது!

இதன் காரணமாக புதிய தலைமுறை தாரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய காலம் அதிகப்பட்சமாக 10 மாதங்கள் வரையில் நிர்ணயிக்கப்பட்டிருக்க, மறுபுறம் 2020 தார் வாகனத்தில் புதிய தேர்வை கொண்டுவர மஹிந்திரா நிறுவனம் பணியாற்றி வருகிறது.

புதிய தார் வாகனத்தில் அசத்தலான வசதியை கொண்டுவரும் மஹிந்திரா!! முன்பதிவுகள் ஆல்ரெடி குவியுது!

இந்த புதிய தேர்வானது எங்களுக்கு தெரிந்தவரையில், ஹார்ட்-டாப் மேற்கூரையையும் மாற்றக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போதைக்கு இந்த மஹிந்திரா வாகனம் தேவைக்கு ஏற்ப மாற்றக்கூடிய சாஃப்ட்-டாப் மற்றும் வாகனத்தில் இருந்து எளிதில் நீக்க முடியாத சாஃப்ட்-டாப் & ஹார்ட்-டாப் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புதிய தார் வாகனத்தில் அசத்தலான வசதியை கொண்டுவரும் மஹிந்திரா!! முன்பதிவுகள் ஆல்ரெடி குவியுது!

புதிய மாற்றக்கூடிய ஹார்ட்-டாப் வேரியண்ட் தான் தற்போது ஏஆர்ஏஐ சோதனை கருவிகளுடன் சோதனை ஓட்டத்தின் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்கள் ரஷ்லேன் செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

புதிய தார் வாகனத்தில் அசத்தலான வசதியை கொண்டுவரும் மஹிந்திரா!! முன்பதிவுகள் ஆல்ரெடி குவியுது!

தாரின் இந்த புதிய வேரியண்ட் வேறுபட்ட மேற்கூரை உடன் புதிய நிறங்களையும் பெற்றுவரலாம். அதேபோல் முன்பக்கத்தில் வழக்கமான ஐந்து-ஸ்லாட் க்ரில் அமைப்பிற்கு மாற்றாக 7-ஸ்லாட் க்ரில் வழங்கப்படலாம். இந்த புதிய மேற்கூரை நிச்சயம் தாருக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தார் வாகனத்தில் அசத்தலான வசதியை கொண்டுவரும் மஹிந்திரா!! முன்பதிவுகள் ஆல்ரெடி குவியுது!

தற்சமயம் மஹிந்திரா மாற்றக்கூடிய சாஃப்ட்-டாப் மற்றும் நிலையான ஹார்ட்-டாப் என்ற வேரியண்ட்களுக்கான முன்பதிவுகளை மட்டுமே ஏற்று கொள்கிறது. மாற்ற முடியாத சாஃப்ட்-டாப் வேரியண்ட்டிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Thar Spied With ARAI Testing Equipment. Latest Waiting Period Details, Read In Tamil.
Story first published: Saturday, March 6, 2021, 19:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X