குடும்பத்துடன் செல்லும் குறைந்த விலை எம்பிவி, பஞ்ச் இவி அறிமுகம் என இந்த வாரம் நீங்க தவறவிட்ட செய்தி இது தான்
ஆட்டோமொபைல் உலகில் தினந்தோறும் புதுமையான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. பல முக்கியமான செய்திகள் எல்லாம் தினந்தோறும் நமது டிரைவ்ஸ்பார்க் தளத்தில் வெளியாகும் நிலையில் கடந்த வாரம் என்னென்ன செய்திகள் எல்லாம் டிரெண்டானது என இங்கே ஒரே பட்டியலாக வழங்கியுள்ளோம். ஒருவேளை நீங்கள் இந்த செய்தியை தவற விட்டிருந்தால் இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் கஞ்சன் என்ற ஆசிரியர் 16 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றி விட்டு பின்னர் பணிமிடமாறுதல் ஏற்பட்டு வேறு இடத்திற்கு செல்ல போவதை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அவருக்கு பல்சர் பைக் ஒன்றை பரிசாக வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் இந்த வாரம் நிகழ்ந்துள்ளது. இந்த செய்தியை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மாருதி நிறுவனம் குறைவான விலையில் எம்பிவி ரக கார் ஒன்றை தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவன விற்பனை செய்து வரும் எர்டிகா காரை விட குறைவான விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
சமீபத்தில் பாலிவுட் வெளியான "அனிமல்" என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ராஸ்மிகா மந்தனா. இவர் அந்த திரைப்படத்திற்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையம் வந்தார். அப்பொழுது அவர் அவரது காருக்கு பதிலாக வேறு ஒரு காரில் ஏற முயற்சி செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இவரது கார்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதை நீங்கள் இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

இந்தியாவின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கார்களை தயாரித்து சிறப்பாக விற்பனை செய்து வந்த ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறியது. அந்நிறுவனம் இந்தியாவில் குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் ஆலையை அமைத்து கார்களை தயார் செய்து வந்தது. இந்த ஆலையை தற்போது டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த ஆலையில் முதன்முறையாக டாடா நிறுவனம் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே விரிவாக படியுங்கள்.
உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் ஆலை அமைக்க இடம் தேடி வரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் இது குறித்து அறிவிப்புகள் என வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இப்படியான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் தமிழகத்திற்கு இந்த ஆளை வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே படியுங்கள்.

கடந்த டிசம்பர் மாதம் மாருதி நிறுவனம் விற்பனை செய்த கார்கள் குறித்த பட்டியல் வெளியாகியிருந்த நிலையில் மாருதி பிரெஸ்ஸா கார் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் டாப் 10 எஸ்யூவி கார்கள் பட்டியலில் பிரெஸ்ஸா கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவ்வளவு அதிக எண்ணிக்கையில் விற்பனையாக என்ன காரணம் என்ற விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
இந்தியாவில் மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த வாரம் கியா சோனட் ஃபேஸ்லிஃப்ட் கார் ரூபாய் 8 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. மிடில் கிளாஸ் மக்களை கவர் செய்யும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.பழைய மாடல் காருக்கும் இந்த மாடல் காருக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறது? புதிய காரில் உள்ள அம்சங்கள் குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து காணலாம்
இந்தியாவில் அப்ரில்லா நிறுவனம் ஆர்எஸ் 457 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கின் டெலிவரி வரும் மார்ச் மாதம் தான் துவங்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த பைக்கின் உற்பத்தி துவங்கிவிட்டது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பே உற்பத்தி துவங்கப்பட்டன நிலையில் இந்த பைக் சிறப்பான விற்பனையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
இந்திய மக்கள் மத்தியில் டாடா பஞ்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்பொழுது வெளியாகும் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் டாடா நிறுவனம் இந்த காரின் அறிமுக தேதி குறித்த விபரங்களை எல்லாம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த கார் எப்பொழுது வெளியாகிறது? இதில் உள்ள அம்சங்கள் என்ன? என்ற விபரங்களை எல்லாம் இங்கே காணுங்கள்.
திருமணங்களின் போது மணமக்களுக்கு பரிசுகள் வருவது வழக்கம்தான். அதிலும் மணமக்களின் நண்பர்கள் வழங்கும் பரிசு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு திருமணத்தில் நண்பர் ஒருவருக்கு சக நண்பர்கள் அவரது காருக்கான அலாய் வீலை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார்கள். இது குறித்த விரிவான செய்தியை இங்கே படியுங்கள்.


Click it and Unblock the Notifications









