இந்தியாவில் மினி எஸ்யூவி கார்களின் மீதான மோகத்துக்கு காரணம் என்ன?

இந்தியாவில் மினி எஸ்யூவி கார்களுக்கான மதிப்பும், வரவேற்பும் மிக பலமாகவே இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக அனைத்து நிறுவனங்களும் கூடிய விரைவில் புதிய மினி எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. நம் நாட்டில் மினி எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமே சாலைகள்தான். ச

சமீப காலங்களில் நெடுஞ்சாலைகளின் சாலைகளின் தரம் சற்று நன்றாகவே மேம்பட்டிருந்தாலும், நகர்ப்புறங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் மழை நேரங்களில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் சாலைகளும், நல்ல சாலை என்று நம்பி ஆக்சிலேட்டரில் காலை வைத்து மிதித்துச் செல்லும்போது வரும் திடீர் அதள பாதாளங்களும் ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களை ரொம்பவே பதம் பார்த்துவிடுகின்றன.

ஆனால், இந்த மினி எஸ்யூவி கார்கள் நம்மூர் சாலைநிலைகளை நன்றாகவே சமாளிக்கும் உறுதியான பாடி, கிரவுண்ட் கிளியரன்ஸ், சஸ்பென்ஷன் செட்டிங்குகளை கொண்டிருப்பதால், டிரைவிங்கின்போது ஓரளவு பயம் இல்லாமல் காரை ஓட்டிச் செல்ல முடியும். தவிரவும், ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான மைலேஜ், ஓரளவு ஒத்துப் போகும் விலை ஆகியவை மினி எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு எகிடுதகிடாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவில் வரிசைகட்ட இருக்கும் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம். முதல் 2 ஸ்லைடுகளில் டஸ்ட்டர் மற்றும் ஈக்கோஸ்போர்ட் கார்களை தொடர்ந்து அடுத்து வர இருக்கும் மினி எஸ்யூவி கார்கள் பற்றிய விபரங்களை வழங்கியுள்ளோம்.

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்

உலக அளவில் ரெனோவின் சூப்பர் டூப்பர் ஹிட் மாடலாகியுள்ள ரெனோ இந்தியாவிலும் பெரும் வரவேற்புடன் வலம் வருகிறது. கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதிலிருந்து இதுவரை 54,200 டஸ்ட்டர்களை ரெனோ விற்பனை செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் ரூ.7.7 லட்சம் முதல் ரூ.11.7 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

ரெனோ டஸ்ட்டர் சிறப்பம்சங்களின் விபரங்களை காண்பதற்கு இங்கே சொடுக்கவும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

சமீபத்திய வரவான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் புக்கிங் செய்துள்ளதாக வெளியான தகவல் டஸ்ட்டருக்கும், பல ஹேட்ச்பேக் கார்களின் வயிற்றிலும் புளியை கரைத்துள்ளது. நேரடி போட்டியாளரான டஸ்ட்டரைவிட ஒவ்வொரு வேரியண்ட்டும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் குறைவான விலையில் விற்பனைக்கு வந்ததுடன் பெட்ரோல், டீசல் மாடலில் கிடைப்பதும் ஈக்கோஸ்போர்ட்டுக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்துள்ளது.

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை படிக்க இங்கே சொடுக்கவும்.

மாருதி ஆல்ஃபா

மாருதி ஆல்ஃபா

மாருதியின் அடுத்த அஸ்திரமாக அந்த நிறுவனத்தின் புதிய எஸ்யூவி கருதப்படுகிறது. எர்டிகாவில் பணிபுரியும் 1.4லி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வருகிறது. மாருதி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த மினி எஸ்யூவி மிக சவாலான விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதியின் புதிய மினி எஸ்யூவி பற்றிய கூடுதல் படங்கள், தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

நிசான் டெரானோ

நிசான் டெரானோ

ரெனோ நிறுவனத்தின் டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடல்தான் நிசான் டெரானோ. விரைவில் அறிமுகமாக இருக்கும் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி டஸ்ட்டரைவிட ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை கூடுதலான விலையில் வருகிறது. டஸ்ட்டரைவிட கவர்ச்சியாக இருக்கும் வகையில் மாற்றங்களை செய்துள்ளது நிசான்.

டெரானோ பற்றிய கூடுதல் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

மஹிந்திராவின் புதிய மினி

மஹிந்திராவின் புதிய மினி

மஹிந்திராவின் வெற்றிகரமான எக்ஸ்யூவி500 பிளாட்பார்மில் புதிய மினி எஸ்யூவி வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்101 என்ற குறியீட்டு பெயர் கொண்ட இந்த மினி எஸ்யூவி சென்னையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 6 பேர் செல்லும் வசதி கொண்டதாக வரும் இந்த புதிய மினி எஸ்யூவியில் குவான்ட்டோவில் செயல்புரியும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தை கொண்டிருக்கும் இந்த புதிய மினி எஸ்யூவியை குவான்ட்டோவைவிட குறைவான விலையில் களமிறக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

ரகசிய சோதனை படங்கள் மற்றும் தகவல்களுக்கு சொடுக்கவும்.

ஹோண்டா மினி எஸ்யூவி

ஹோண்டா மினி எஸ்யூவி

ஜாஸ் பிளாட்பார்மில் புதிய காம்பெக்ட் எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை டெட்ராய் ஆட்டோ ஷோவில் ஹோண்டா அறிமுகம் செய்தது. இந்த காம்பெக்ட் எஸ்யூவியை 2015ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமேஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் பெட்ரோல் மாடலிலும் இந்த புதிய மினி எஸ்யூவி விற்பனைக்கு வருகிறது.

கூடுதல் படங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

ஹூண்டாய் மினி எஸ்யூவி

ஹூண்டாய் மினி எஸ்யூவி

தென்கொரியாவில் சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட இந்த மினி எஸ்யூவி அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. டஸ்ட்டரை போன்று 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட காம்பெக்ட் மாடலாக இருக்கும்.

சோதனை ஓட்டப்படங்களை காண இங்கே சொடுக்கவும்.

செவர்லே டிராக்ஸ்

செவர்லே டிராக்ஸ்

செவர்லே பிராண்டில் வரும் புதிய மினி எஸ்யூவியான டிராக்ஸை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான சாதக, பாதகங்களை ஜெனரல் மோட்டார்ஸ் தற்போது ஆராய்ந்து வருகிறது. மிக கம்பீரமான தோற்றம் கொண்ட இந்த எஸ்யூவி மீது இப்போதே ஆட்டோமொபைல் பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவில் இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரூ.10 லட்சம் விலையில் வருவதால் நிச்சயம் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

கடும் போட்டி

கடும் போட்டி

இந்த புதிய மினி எஸ்யூவி மாடல்களால் நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மிகச் சரியான விலையில் இந்திய வாடிக்கையாளர்கள் புதிய மினி எஸ்யூவி மாடல்களை வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 26, 2013, 16:07 [IST]
English summary
Regular hatchbacks and sedans at the moment don’t hold much of a thrill as the current spate of SUV’s are offering the same with a little more. Sports Utility Vehicles seem to be a more obvious choice specially since more and more auto companies are launching compact, convenient and reasonably priced SUVs which are being introduced in the market in quick and regular succession. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+