டாடா ஹெக்ஸா காரின் டவுன்டவுன் அர்பன் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

மிகச் சிறந்த வசதிகளுடன் டாடா ஹெக்ஸா காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
டாடா ஹெக்ஸா காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

டாடா ஹெக்ஸா 'டவுன்டவுன் அர்பன் எடிசன்' என்ற பெயரில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் கூடுதலாக 15 மிகச் சிறப்பான வசதிகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

 புதிய வண்ணம்

புதிய வண்ணம்

புதிய வண்ணம்

டாடா ஹெக்ஸா காரின் டவுன்டவுன் அர்பன் எடிசன் மாடல் புதிய அர்பன் பிரான்ஸ் என்ற பழுப்பு வண்ணத்தில் வந்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் பிரிமியமாகவும், வசீகரமாகவும் உள்ளது இந்த வண்ணம்.

பேட்ஜ்

சாதாரண மாடலிலிருந்து வேறுபடுத்தும் விதமாக, டாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் என்பதை காட்டுவதற்கான சிறப்பு பட்டைகள் இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 க்ரோம் அலங்காரம்

க்ரோம் அலங்காரம்

இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் ஹெக்ஸா காரில் முகப்பு க்ரில், ரியர் வியூ மிரர்கள், ஹெட்லலைட்டுகள் மற்றும் பிளாஸ்டிங்க் கிளாடிங் பட்டைகளில் க்ரோம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது.

Recommended Video
[Tamil] 2018 Hyundai Verna Indian Model Unveiled - DriveSpark
சீட் கவர்

சீட் கவர்

இந்த ஸ்பெஷல் ஹெக்ஸா காரில் உயர்தமான டேன் லெதர் சீட் கவர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இது மிக சொகுசான பயண அனுபவத்தையும், பார்ப்பதற்கு சொகுசு கார் போன்ற உணர்வையும் தருகிறது.

சார்ஜர்

சார்ஜர்

இந்த காரில் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று, வயர்லெஸ் சார்ஜர் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. மொபைல்போன்களை வயர் சொருகாமலேயே, சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை அளிக்கிறது.

பொழுதுபோக்கு வசதி

பொழுதுபோக்கு வசதி

டாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் மாடலில் பின் இருக்கை பயணிகளுக்கான பொழுதுபோக்குக்காக முன் இருக்கையின் பின்புறத்தில் 10.1 அங்குல அளவுடைய பிளாபுங்கட் திரைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே

ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே

புதிய டாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் மாடலில் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே சாதனமும் உள்ளது. எல்இடி டிஸ்ப்ளே மூலமாக அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி, பேட்டரி வோல்டேஜ் இன்டிகேட்டர் வசதிகளை இது அளிக்கிறது.

Trendin On DriveSpark Tamil:

முதல்முறையாக... புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளின் படங்கள்!

ரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

மழை வெள்ளத்திலிருந்து காரை பாதுகாக்கும் 'ப்ளட் கார்டு' கவர்!

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்த மாடலில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. டயர்களில் காற்றழுத்தம் குறித்த எச்சரிக்கையை இதன் மூலமாக பெற முடியும்.

அலாய் சக்கரம்

அலாய் சக்கரம்

இந்த புதிய டாடா ஹெக்ஸா காரில் 16 அங்குல டைமன்ட் கட் வடிவமைப்பிலான அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருப்பதும் வசீகரிக்கிறது.

சைடு ஸ்டெப்

சைடு ஸ்டெப்

டாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் மாடலில் சைடு ஸ்டெப் எனப்படும் படிக்கட்டு பலகைகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 கார்பெட் செட்

கார்பெட் செட்

டாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் மாடலில் மிதியடிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. டாடா ஹெக்ஸா கார் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்எம்ஏ மற்றும் எக்ஸ்டிஏ ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். அப்சொல்யூட் பேக்கேஜ் மற்றும் இன்டல்ஜ் பேக்கேஜ் ஆகிய இரண்டு வகை மாடலில் டவுன்டவுன் அர்பன் எடிசன் மாடலை விருப்ப தேர்வுகளில் தேர்வு செய்ய முடியும்.

அப்சொல்யூட் பேக்

அப்சொல்யூட் பேக்

டவுன்டவுன் பேட்ஜ், க்ரோம் பேக், சீட் கவர்கள், வயர்லெஸ் சார்ஜர், சைடு ஸ்டெப், கார்பெட் செட் மற்றும் கார் பராமரிப்பு கிட் ஆகியவற்றை பெறமுடியும். எக்ஸ்டி மற்றும் எக்ஸ்டிஏ வேரியண்ட்டுகளில் இது கிடைக்கும்.

இன்டல்ஜ் பேக்

இன்டல்ஜ் பேக்

எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்எம்ஏ ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். டவுன்டவுன் பேட்ஜ், க்ரோம் பேக், சீட் கவர்கள், சைடு ஸ்டெப், கார்பெட் செட், கார் கேர் கிட் ஆகியவற்றுடன் கூடுதலாக 10.1 அங்குல டிவி திரைகள் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவை இந்த பேக்கில் இடம்பெற்று இருக்கிறது.

மேலும்... #டாடா #tata
English summary
Tata Hexa Downtown Urban Edition launched in India. Prices start at Rs 12.18 lakh ex-showroom (Delhi).
Story first published: Saturday, November 4, 2017, 11:56 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos