ஆட்டோக்கள் எல்லாம் "ஓரம் போ", வருகிறது க்யூட் குவார்ட்ரி...!
இந்தியாவில் ஆட்டோகளுக்கு ஆப்பு வைக்க வருகிறது க்யூட் குவாட்ரிசைக்கிள், பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வேரியன்டில் வரும் இந்த வாகனத்தால் இனி ஆட்டோக்களை எல்லாம் ஓரம் கட்டும் காலம் வந்து விட்டத
இந்தியாவில் ஆட்டோகளுக்கு ஆப்பு வைக்க வருகிறது க்யூட் குவாட்ரிசைக்கிள், பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வேரியன்டில் வரும் இந்த வாகனத்தால் இனி ஆட்டோக்களை எல்லாம் ஓரம் கட்டும் காலம் வந்து விட்டது.

பல ஆண்டுகள் கழித்து அரசு குவாட்ரிசைக்கிள் ரக வாகனங்களுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கியுள்ளது. இந்த ரக வாகனங்கள் இது வரை இந்தியாவில் இயக்கப்பட்டதில்லை.

பஜாஜ் நிறுவனம் க்யூட் என் குவாட்ரி சைக்கிள் ரக வாகனத்தை இந்தியாவில் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. தற்போது இந்த வாகனத்தை இந்தியாவில் கமர்ஷியல் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது இந்த வாகனம் அராய் ஆய்விற்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் இந்த வாகனம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனம் சமீபத்தில் ரோட்டில் டெஸ்ட் செய்யப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த க்யூட் குவாட்ரிசைக்கிள் சிஎன்ஜி வெர்ஷன் ஆகும். இதன் மூலம் க்யூட் குவாட்ரிசைக்கிளில் சிஎன்ஜி வெர்ஷனும் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இந்த க்யூட் சிஎன்ஜி வேர்ஷனும் சாதாரண வேர்ஷனை போலவே உள்ளது. இதின் சிஎன்ஜி ஸ்டிக்கர் மட்டும் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த க்யூட் குவார்ட்ரிசைக்கிளின் பெட்ரோல் வேரியன்டை பொருத்தவரை வழக்கம் போல உள்ள 216 சிசிலிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி வேரியன்டின் டேங்க் கொள்ளவு குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த க்யூட் குவாட்ரியில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் 13.5 பிஎச்பி பவரையும், 20.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிஎன்ஜி வேரியன்டில் பவரும் டார்க்கும் இதே போன்று இருக்கும் என சொல்ல முடியாது மாற்றங்கள் ஏற்படலாம்.

தற்போது சிஎன்ஜி வேரியன்ட் வந்துள்ளது போல் விரைவில் எலெக்ட்ரிக் வேரியன்டும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கான மவுசு அதிகரித்து வரும் நிலையில் பஜாஜ் நிறுவனம் க்யூட் குவாட்ரியை மட்டும் விட்டு வைத்து விடுமா என்ன?

இந்த க்யூட் குவாட்ரி விற்பனைக்கு வந்தால் இந்தியாவில் ஓடும் ஆட்டோ காரர்களுக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டு விடும் ஆட்டோவை விட வசதியாகவும், ஏசி வசதியுடனும் ஆட்டோ போல குலுங்காமலும், சிறிய கார் போன்ற வடிவம் என பல பிளஸ் பாயிண்ட்களை இந்த க்யூட் குவாட்ரி பெற்றுள்ளது.

இதில் ஆட்டோ போல 4 பேர் (2+2) பேர் பயணம் செய்யலாம். இந்த குவாட்ரியை கமர்ஷியல் பயன்பாட்டை தவிர தனி பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது. தற்போது பஜாஜ் நிறுவனம் வெளியிடவுள்ள இந்த க்யூட் குவாட்ரியை போல் விரைவில் மற்ற நிறுவனங்களும் இந்த ரக வாகனங்களை தயாரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்தாண்டு வெளியாகவுள்ள க்யூட் குவாட்ரி கார் ரூ 1.5 லட்சத்திற்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த குவாட்ரிசைக்கிள் இந்தியாவில் பெரும் அளவில் விற்பனைக்கு வந்தால் தற்போது இந்தியாவில் ஓடி வரும் ஆட்டோ ரிக்ஷாக்களை எல்லாம் வரும் காலத்தில் மியூசியத்தில் தான் பார்க்க முடியும். உங்களுக்கு தற்போது உள்ள ஆட்டோக்களில் போக வேண்டும் என்ற ஆசையிருந்தால் விரைவில் அதை தீர்த்து கொள்ளுங்கள்.

இந்த குவாட்டிசைக்கிள் ரக வாகனத்தில் சரக்குகளை ஏற்றி செல்லும் வகையில் விரைவில் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மாற்றப்பட்டால் விரைவில் இந்த ரக வாகனங்கள் தான். சிறு வியாபாரிகளுக்கு, பெரும் உதவியாக இருக்கும் என்பதை சந்தேகம் இன்றி சொல்லலாம்.
Source: Cartoq
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
- இன்ஜினியரிங் மாணவர்களுக்கு திறமையை நிரூபிக்க பொன்னான வாய்ப்பை வழங்குகிறது ஷெல் நிறுவனம்
- போலீஸ் முன்பு கெத்தாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ! இந்த வீடியோ பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க!
- களத்தில் இறங்கிய புதிய தலைவர்... கடும் போட்டியால் ஓலா-உபேர் இணைப்பு?
- ரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்
- ரூ.2.12 கோடி ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடை! அந்த மச்சக்கார போலீஸ் இவங்கதான்...


Click it and Unblock the Notifications